இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வேலைத் திட்டம் – கெஹலிய ரம்புக்வெல்ல

0 Comments

இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அவசியம் காணப்படுவதாகவும், இதற்காக எதிர்வரும் இரண்டு வாரங்களில் உரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் (21) நடைபெற்ற வெஜகுஜன ஊடகத்துறை அமைச்சின் ஆலோசனைக் குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சமூக ஊடகங்களால் இனங்களுக்கிடையில் குழப்பத்தைத் தூண்டும் வகையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கட்டுப்படுத்தப்படுவது அவசியமானதென பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் இங்கு தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் புதிய சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதனை […]

பயங்கரவாதிகளை வழிநடத்தும் குழு நாட்டிற்கு வெளியில் உள்ளது – முன்னாள் ஜனாதிபதி

0 Comments

நல்லாட்சியில் ஏற்பட்ட பிளவுகளே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமென கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் சஹ்ரான் போன்ற மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளை வழிநடத்தும் குழு நாட்டிற்கு வெளியில் உள்ளது என்பதே எனது நிலைப்பாடாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த […]

ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை

0 Comments

கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், ஒரு மாதத்திற்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, 222 ​​இ.போ.ச. பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதியை செய்து கொடுத்தமை மற்றும் அதற்காக ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான அரசாங்க நிதியைப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த வழக்கு இன்று (25) கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகெ […]

சவுதி இளவரசரை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர்

0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவுக்கு ரகசியமாக சென்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோரை சந்தித்துள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலுடனான உறவை சீராக்க அரபு நாடுகளை சமாதானப்படுத்த அமெரிக்காவின் உந்துதலின் மத்தியில், ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டால், மூத்த இஸ்ரேலிய மற்றும் சவுதி அதிகாரிகளுக்கு இடையேயான முதல் சந்திப்பாக இது இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. சவுதி அரேபியாவின் செங்கடல் கடற்கரையில் நியோமில் […]

வறுமைக்கும், ஜனஸா எரிப்புக்கும் மத்தியில் அல்லல்படும் முஸ்லிம் சமூகம் – அஸாத் சாலி

0 Comments

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக 90 இற்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் சுமார் 60 மரணங்கள் முஸ்லிம்களுடையதாகும் என்று முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அஸாத்சாலி ​அவர்கள் sonakar.com இணையதளத்துடன் இடம்பெற்ற நேரலை மூலமான நேர்காணலில் தெரிவித்தார். இது பற்றி மேலும் கருத்தது தெரிவிக்கையில், இலங்கையில் முஸ்லிம் சடலங்களை அரசாங்கம் திட்டமிட்டு எரிக்கின்றது. இதற்கான ஆலோசனை பெறுவதற்கு என சுகாதார அமைச்சின் கீழ் தொழில்நுட்ப குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அக் குழுவில் உள்ளவர்கள் […]

பெண்களிடம் “15% மாதவிடாய் வரி” – பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்

0 Comments

பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சுகாதார பாதுகாப்பு துவாய்க்கும் வரிகளை அதிகரித்து பெண்களை நெருக்கடிக்குள் தள்ள அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக சபையில் ஆளும் -எதிர்க்கட்சி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி போர்க்கொடி தூக்கினர். அரசாங்கம் அறவிடவிருக்கும் புதிய வரி, “மாதவிடாய் வரி” எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ரோஹினி கவிரத்ன, பெண்களை துன்ப படுத்தவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். வரவு-செலவுத் திட்டம் மீதான (24) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். […]

புதிய சிலந்தி இனமொன்றுக்கு மனைவியின் பெயரை சூட்டிய பேராசிரியர்

0 Comments

துஷானியின் சிலந்தி வலையில் சிக்கிய பேராசிரியர் பெஞ்சமின் இலங்கை பேராசிரியர் ஒருவர் 104 புதிய சிலந்தி இனங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.அடிப்படை ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனத்தின் சுற்றுச்சூழல் உயிரியல் ஆராய்ச்சி திட்டத்தின் தலைவராக உள்ள பேராசிரியர் சுரேஷ் ஜி. பெஞ்சமின் என்பவரே இச் சிலந்தி இனங்களை கண்டுபிடித்துள்ளார். பேராசிரியர் மேலும் 50 புதிய இனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இது தொடர்பான முயற்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 104 சிலந்தி இனங்களில் 82 இனங்கள் இலங்கையிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் […]

பஸ்குவில் தொடங்கி முபராஹ்வில் முடிந்த விவாகரத்து

0 Comments

திருப்பு முனை பாகம் 31 சிலர் இப்படி தான் அவர்கள் செய்த தவறை மூடி மறைத்து விட்டு நம் மீது வீண் பழி சுமத்திய பிறகு அவர்கள் நல்லவர் வேஷம் போடுவார்கள். அந்த சமயத்தில் நாம் உடைந்து போகாமல் நிதானமாக இருக்க வேண்டும். சுமத்திய பழி தற்காலிகமானது. ஆனால் அவர்கள் சுமக்கப் போகும் பாவத்தின் எடை நிரந்தரமானது. எனவே நீ தவறு செய்யவில்லை எனில் தைரியமாக இரு. இறைவன் பார்த்து கொள்வான். லீனா வீட்டுக்கு வந்த செய்தி […]

பாராளுமன்றத்தில் 225 பேர் கூடலாம் என்றால் பள்ளியிலும் 40 பேருக்கு அனுமதிக்க வேண்டும் – ஹாபிஸ் நஸீர்

0 Comments

பாராளுமன்றத்தில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூட முடியுமென்றால் 40 பேர் வரையில் சுகாதார முறைப்படி ஒன்று கூடி தொழுவதற்கு அனுமதி தர வேண்டுமென ஹாபிஸ் நசீர் அஹமட் கோரிக்கை விடுத்தார். வரவு செயலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் இன்று (24.11.2020) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, முஸ்லீம்கள் தற்போது மிகவும் வேதனையான ஒரு காலகட்டத்தில் வாழ்கின்றார்கள். கொரோனாவில் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுவது எங்களுக்கு பெரும் வேதனையைத் தருகின்றது. பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இறப்பு இருக்கின்றது. […]