கொரோனாவில் ஓர் முஸ்லிம் மரணித்தால் செய்ய வேண்டியவை

0 Comments

இந்நாட்களில் ஒரு முஸ்லிம் மரணிக்கும் பட்சத்தில் கவனிக்க வேண்டியவை: உடனடியாக ஜனாஸா தொழுகையை வீட்டிலேயே நிறைவேற்றுங்கள், மய்யித் வீட்டில் இல்லாவிட்டாலும் இதனை செய்யலாம். மைய்யித்தை எரிப்பதற்கான ஒப்பந்த படிவத்தில் ஒருபோதும் கையெழுத்து இட வேண்டாம். கையெழுத்திடாமல் இருப்பது எம் உரிமை. அவர்கள் பலவந்தமாக எரித்தால் எரிக்கட்டும். ஜனாஸாவை எரிப்பதற்கு எவ்வித கட்டணங்களும் செலுத்த வேண்டாம். அது முற்றிலும் அவர்கள் கடமை. சவப் பெட்டிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். இலவசமாகக் கிடைத்தாலும் கொடுக்க வேண்டாம். பெட்டியுடன் எரித்தாலும் இல்லாமல் […]

ஆகாயம்

0 Comments

தூரத்தே தெரியும் தூண் இன்றி நிற்கும் தூய்மையின் அடையாளம். பரந்து விரிந்த பாரினை அடைகாக்கும் பாதுகாவலன். நிலம் செழிக்க நீர் பாெழியும் கார்மேகக் கடலோன். பறந்து திரியும் பட்சிகளின் மைதானம். நீலக் கடலின் நீண்ட நாள் காதலன். அதிகாலை அவதரித்து அந்திமாலை மறையும் ஆதவனின் அன்னை. விண்மீன்கள் வெளிச்சமிடும் வெண்திரை. வெண் நிலா வலம் வரும் நீண்ட விரிந்த கம்பளம். அகிலத்தின் மேல் ஆதாரமின்றிய அழகிய ஆச்சரியமான போர்வை ஆகாயம். Rushdha Faris South Eastern University […]

லலித் – குகன் கடத்தல் வழக்கில் ஜனாதிபதிக்கான அழைப்பாணை செல்லுபடியற்றது

0 Comments

லலித் மற்றும் குகன் ஆகிய இரு சமூக ஆர்வலர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில், அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, நீதிமன்றில் ஆஜராகுமாறு, வழங்கிய அழைப்பாணை இரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் குறித்த வழக்கு விசாரணை தொடர்பில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் செப்டெம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு அழைப்பாணை […]

புதிதாக இரு அமைச்சுக்களிற்கான வர்த்தமானி அறிவித்தல்

0 Comments

இரண்டு புதிய அமைச்சுக்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது. தொழிநுட்ப அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய புதிய இரண்டு அமைச்சுகளே இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இவ் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிதாக உருவக்கப்பட்ட இந்த புதிய அமைச்சுகளின் நோக்கம் மற்றும் அவற்றின் கடமைகள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சானது, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளை, நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அமைதியான […]

கொரோனாவில் மரணித்த உடல்கள் தகனம் செய்யப்படும் – சுதத் சமரவீர

0 Comments

கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்தல் தொடர்பிலான தீர்மானம் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளுக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் தொற்று நோயியல் பிரிவைச் சேர்ந்த விசேட மருத்துவர் சுதத் சமரவீர கருத்து வெளியிட்டார். இதுவரை காலமும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடைமுறையே அமுலானது. இது உலகளாவிய ரீதியில் ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும். இங்கு ஒரு இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்துவம் அளிக்க முடியாது. வைரஸ் […]

தோழியே!

0 Comments

இத்தனை நாள் நீ கண்ட கனவுகள் நனவாக காத்திருக்கிறது அதன் முதல் கட்டத்தில் நீ காலடி எடுத்து வைக்க போகிறாய் இன்னும் சில தினங்களில் நீ கண்ட கனவுகள் கானல் நீரல்ல அவை ஒரு நாள் நிஜமாகும் தெளிந்த மழை நீரைப் போல உனது கனவுகளை நனவாக்க ஒவ்வொரு கணமும் நீ போராடு அதன் முடிவு வெற்றியாகும் நீ வென்றால் நான் வென்றது போன்ற மகிழ்ச்சி மனதில் நாம் வென்றால் நம் தலைமுறையே தலை நிமிர்ந்து வாழும் […]

ஒரு ஜனாஸாவின் அழுகுரல்

0 Comments

ஆ! ஐயோ! எரிகிறதே! உடலெங்கும் வலிக்கிறதே! ஸக்ராத்தால் நொந்த உடம்பு வெந்து போகிறதே! என் சொல்லொணாத் துயர் உமக்கெல்லாம் புரிகிறதா? எனக்கான கபன் எங்கே? கரமேந்திடும் தொழுகை எங்கே? ஆறடிக் கப்ரு எங்கே? என்னைத் தவிர எல்லாமே புதைக்கப்பட்டு விட்டனவா? ஓரடி தூரத்தில் பரவாத தொற்று ஆறடி ஆழத்திலிருந்து வேரோடி விருட்சமாய் நிலத்தைக் கிழித்து வெளியேறிட கொரோனா ஒன்றும் விதையல்லவே சுகாதாரம் சொல்லும் உலக சொந்தங்களே சோகம் தெரிவிக்கையில் திருநாட்டு உறவுகளோ சகுனி வேடம் பூணுகின்றனரே இன […]

புன்னகை

0 Comments

துயரங்கள் என்றும் நம் வாழ்வில் தூரமுமில்லை! மனநிறைவு என்பது நம் வாழ்வில் நண்பனுமில்லை மனித மனதின் மாறுபட்ட பக்கங்கள் இவை இரண்டும் பக்குவமாய் நீ வாழு பண்போடு நீ பேசு புன்னகையே கை கொடுக்கும் உன் மனநிறைவிற்கு மாத்திரையாய் Shima Harees

இணையவழியில் தென் கிழக்கு பல்கலைக்கழக வருடாந்த ஆய்வுக் கருத்தரங்கு

0 Comments

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின், பிரயோக விஞ்ஞான பீடத்தின் 9ஆவது வருடாந்த விஞ்ஞான ஆய்வு கருத்தரங்கின் தொடக்க நிகழ்வுகள், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. யூ.எல். செய்னுதீன் தலைமையில் புதன்கிழமை (25) இணையவழியில் நடைபெறவிருக்கின்றன. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இந்த நிகழ்வை, கலாநிதி எச்.எம்.எம். நளீர் ஏற்பாடு செய்துள்ளார். கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் இந்தியா கல்கத்தா சஹா கல்வி நிலையத்தின் முன்னாள் அணுப் பௌதிக சிரேஷ்ட […]