ஊகச் செய்திகளையும் உத்தியோகபூர்வ செய்திகளையும் இனங்காண்பது எவ்வாறு?

0 Comments

கடந்த (09.11.2020 – 15.11.2020) வார இலங்கை அரசியல் பரப்பை அவதானிக்கையில் பேசு பொருளாக இருந்த விடயங்களே கொரோனா சடலங்களை புதைத்தல், பஸ் கட்டண அதிகரிப்பு, வெள்ளைச் சீனி விலை குறைப்பு என்பனவாகும். மேற்குறித்த செய்திகள் எம்மை ஆரம்பத்தில் வந்தடைந்த விதங்களை அவதானிக்கையில் கொரோனா சடலங்களை புதைத்தல் தொடர்பாக அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டாதாக நீதியமைச்சர் அலிசப்ரி அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் சில தலைவர்களுடன் தொடர்பு கொண்ட தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் அதனை தொடர்ந்து குறித்த தலைவர்கள் வெளியிட்ட […]

கொரோனாவில் சுயமாக முன்னேறுவது எவ்வாறு?

0 Comments

அறிமுகம் கொரோனாவின் சமூக பொருளாதார பிரச்சினைகள் இலங்கை முஸ்லிம்களின் சடலங்களை அடக்குவதற்கு அனுமதிக்காமை அதிக அச்சம் மற்றும் உளவியல் தாக்கம் மத வழிபாட்டு சார் பிரச்சினைகள் சுய தனிமைப்படுத்தலும் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளும் சமூகப் புறக்கணிப்பு மாணவர்கள் முதல் உயர் கல்வித்துறை வரை கல்வி நடவடிக்கைகள் முடக்கம் வேலையின்மை, சுற்றுலாத்துறை வீழ்ச்சி, சர்வதேச வர்த்தக முடக்கம் பொதுப் போக்குவரத்து மற்றும் விநியோக முடக்கம் அறிமுகம் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடுபொருளாதார மற்றும் சமூக கலாசார மற்றும் […]

மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் (MCC) என்றால் என்ன?

0 Comments

அறிமுகம் நிறுவன கட்டமைப்பு இயக்குனர் குழு நடைமுறைப்படுத்தப்படும் விதம் MCC யின் தந்திரோபாய நோக்கங்கள் மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் சர்வதேச ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் நிறுத்தப்பட்ட உடன்படிக்கைகள் புதிய உடன்படிக்கைகள் மிலேனியம் சலெஞ்ச் கோப்ரேஷன் இலங்கை ஒப்பந்தம் மிலேனியம் சலெஞ்ச் காணித் திட்டம் மிலேனியம் சலெஞ்ச்  போக்குவரத்துத் திட்டம் வெள்ளை வேன் கலாசாரத்தால்  தடைபட்ட திட்டம் நாட்டு மக்களின் இறையாண்மையில் தாக்கம் செலுத்தும் ஓர் ஒப்பந்தம் அமெரிக்காவின் தலையீட்டை அதிகரிக்கும் அபாயகரமான ஓர் ஒப்பந்தம் உசாத்துணை. அறிமுகம் […]

ஜெயிக்கவழி

0 Comments

பார் போற்றும் பல அறிஞர்கள் செல்லாத இடம் பல்கலைக்கழகம் – அங்கு செல்லாத உன்னாலும் பாரினை மாற்றிட முடியும் மறக்காதே! பல்கலைக்கழகம் செல்வோரே தன்னிலை மறக்காதே! அங்கு சென்ற பலர் தொழிலின்றி வாடுகின்றனர் என்பதை மறக்காதே! கற்றலின் இலக்கு கல்லூரியில் இணைதல் என நினைக்காதே! கடவுளை புரிந்து கடமையை செய்தல் என்பதை மறக்காதே! வாழ்கையில் ஜெயிக்க தேவை பட்டமும் பதவியும் பணமும் அல்ல! இறை அருளும் உன் முயற்சியும் இருந்தால் வாழ்வில் ஜெயிக்கலாம் என்பதை மறக்காதே! Ibnuasad

நவமணியின் நல்வாழ்வுக்கு வழியென்ன?

0 Comments

நவமணி பத்திரிகையானது 25 ஆவது ஆண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில், அது இளமையாக துடிப்புடன் செயற்பட வேண்டிய தருணத்தில் தனது சேவைகளை நிறுத்தவுள்ளதாக பத்திரிகையில் வாசித்தது முதல் எனக்குள்ளும் இனம் புரியாத கவலை தொற்றிக் கொண்டு விட்டது. இந்நிலையில் அதற்கு ஏதாவது ஆலோசனை வழங்க வேண்டும் என்ற அவாவில் சிலருடன் கலந்தாலோசித்து இக்கட்டுரையை எழுதுகின்றேன். சமூகத்திற்கான ஊடகம் ஏன் அவசியம்? ஒரு சமூகத்தின் கலை, கலாசார பண்பாடுகளை மேம்படுத்தி, அச் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை சுட்டிக்காட்டி, அச் சமூகத்தின் […]

தாயோடு பட்டதாரியாகினேன்

0 Comments

இன்று என் அன்னைக்கு பட்டமளிப்பு விழா இல்லையில்லை என் அன்னையோடு எனக்கும் பட்டமளிப்பு விரிவுரைக்கு தாயோடு சென்றேன் இல்லை தாய் என்னை கருவாக சுமந்து சென்றாள். மூன்றாண்டுப் பயணமிது கருவரையில் ஈரைந்து திங்கள் கற்றேன் மீதியை பல்கலை நண்பிகளோடு அமுதாக ஊட்டினாள் என் அன்னை. கருவரைக்கல்வி உன்னதமானதென்பதை உலகறியச் செய்துவிட்டாள் என் அன்னை Farisa Asadh

பிலீஸ் இந்தக் கவிதையை வாசிக்காதீங்க

0 Comments

ஆண்டு கால ஆசை ஆரும் வாசிக்காத கவிதை எழுத ஆசை எழுதத்ததான் முடியவில்லை அமைதியாக எழுதினால் ஆரவாரமாய் வாசித்தனர் பலர் ஆர்வமாய் எழுதினால் ஆர்பாட்டம் செய்தனர் சிலர் அதற்காக எழுதிய கவியை அழித்திட விரும்பவில்லை ஆசையை தலைப்பாகயிட்டு ஆர்வத்துடன் எழுதினேன் ஆரும் வாசிக்கமாட்டார்களென்று புரிந்தோர் வாசிக்கவில்லை புரியாதோர் வாசிப்பதை நிறுத்தவில்லை ஆரும் வாசிக்காத கவிதை என்னும் ஆசையில் தவறில்லை அதை நிறைவேற்ற விடாது போட்டியிட்டு வாசிக்கும் உம்மிள் தவறென விவாதித்து பலனுமில்லை ஆனால் வேண்டாம் என்பதை ஆர்வத்துடன் […]

வெற்றிகரமான ஆசிரியர் பயிற்சி

0 Comments

பாடசாலைக் கல்வியை தொடர்ந்துவிட்டு தமது உயர் கல்வி மற்றும் தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தமது கல்விப் பயணத்திற்கான இலக்கை தீர்மானித்து செயற்படுவது பற்றி சில ஆலோசனைகளை, இலக்குகளை திட்டமிட்டு கல்விப் பாதைகளை அமைப்போம். என்ற பதிவில் வழங்கினோம். இப் பதிவுகள் இளைஞர், யுவதிகள் தமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை முன்வைத்த போது அவற்றுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக எழுதுகின்றோம். எனவே வாசகர்களாகிய உமக்கு ஏதும் கல்விசார் பிரச்சினைகள் ஏற்பட்டு எமக்கு தெரியப்படுத்தினால் கலந்தாலோசித்து தீர்வுகளை வழங்குவோம் என்று […]

உம்மா யுனிவர்சிட்டிலதான் வேல

0 Comments

அவள் புன்னகை முகத்தழகி. குணத்துக்கேற்ற பெயர். நீங்களே பெயரை தீர்மானித்துவிட்டீர்களா? “தீனத்” தான் அவளது பெயர். கண்டவுடன் புன்னகைத்து ஸலாம் கூறி விடுவாள். பல்கலை தந்த உறவுகளில் அவளும் ஒருத்தி. அறைத்தோழியாய் அவளை அடையாவிட்டாலும் பல்கலைத்தோழியாய் கிட்டியது பாக்கியம் தான். Hostel வாழ்க்கை வாழ விரும்பியவளுக்கோ நடை தூரத்தில் இருக்கும் பல்கலை தான். ஒவ்வோரு நாளும் நடந்து வருவாள். கடற் காற்றை சுவாசித்தபடியே, ஏதேச்சையாக அன்று அவளுடன் நீண்ட நேரம் உரையாடினேன். இறுதியில் அவள் வீட்டுக்கு ஒரு […]