கொஞ்சம் என் எழுத்துக்களையும் வாசித்துக் கூறுங்கள்!

  • 20

அன்பர்களே!
கொஞ்சம் கவனமாய்
இருங்கள் நான்
எழுதப் போகின்றேன்
நான் எழுதிட்டால்
எழுந்து நின்று
பார்க்க மாட்டீர்கள்
எனத் தெரியும்
எனினும் கூறத்தானே
வேண்டும் நான்!

நான் எழுதினால்
எழுத்துக்கள் மறைந்து
விடலாம் காரணம்
நீங்கள் என்
மேல் கொண்ட
புரிதலால்!

நான் வலிகளை
வரைந்தாலும் அந்த
வலிகளில் வழிகள்
உள்ளதா இன்னும்
வலிகள் கொடுக்க
பார்க்கும் மனிதர்கள்
நீங்கள்!

இருந்தாலும் நான்
எழுதத்தான் வேண்டும்
உயிருள்ள உடல்
சுவாசிப்பது போன்று
வலி உள்ள
மனம் அழுதுடத்தான்
போகின்றது எழுத்துக்கள்
மூலம்!

என் எழுத்துக்கள்
அவளவு பெரிதாய்
ஒன்றும் கூறிடப்
போவதில்லை அவ்வாறு
கூறினாலும் நீங்கள்
வாசித்துப் போவதுமில்லை
இதனை நான்
எவ்வாறு கூறுவதோ!

இங்கு வாசிக்கப்படும்
எழுத்துக்கள் யாரும்
எடுத்துரைத்துப் போவதில்லை
எடுத்துரைத்தாலும் அது
எதிலும் வளர்ந்திடப்
போவதில்லை இவ்வுலகில்!

நான் என்னதான்
செய்வது என்
எழுத்துக்களை நீங்கள்
வாசிப்பதற்கு!


பொத்துவில் அஜ்மல்கான்

அன்பர்களே! கொஞ்சம் கவனமாய் இருங்கள் நான் எழுதப் போகின்றேன் நான் எழுதிட்டால் எழுந்து நின்று பார்க்க மாட்டீர்கள் எனத் தெரியும் எனினும் கூறத்தானே வேண்டும் நான்! நான் எழுதினால் எழுத்துக்கள் மறைந்து விடலாம் காரணம்…

அன்பர்களே! கொஞ்சம் கவனமாய் இருங்கள் நான் எழுதப் போகின்றேன் நான் எழுதிட்டால் எழுந்து நின்று பார்க்க மாட்டீர்கள் எனத் தெரியும் எனினும் கூறத்தானே வேண்டும் நான்! நான் எழுதினால் எழுத்துக்கள் மறைந்து விடலாம் காரணம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *