நித்யா… அத்தியாயம் -5

  • 9

 ”நீ…. நீங்களா?..!” தட்டுத்தடுமாறிவார்த்தைகளை சிந்தியவளைப் பார்த்து சா சிரித்தவன் ”என்ன…? அதிர்ச்சியா கேக்குறீங்க?” புருவத்தைச் சுருக்கியவன் கேட்டதும். மெல்லிய புன்னகை உதட்டோரம் விரிய ”இல்ல…. நீங்க திடீர்னு வந்தீங்களே அதான்…..”

” ஓ… ஸொரி…. மை மிஸ்டேக்….”  பல்லிழித்தவனை பார்த்து, ‘அப்பா…. என்ன நடிப்பு…..’ மனதால் வைது கொண்டே ”நா இப்போ போகணும். பிளீஸ் வழி விடுங்களே…” கைகளை விரித்துக் காட்டி  ”தாராளமா போலாமே…” அவன் சொன்ன தோரணையில் சிரிப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டே நகர்ந்தாள். ‘ இவன் எப்டி இங்க…’ யோசித்தபடியே படிக்கட்டில் கால் வைத்தவள்.

”ஆ… விக்னேஷ்… நா நெனச்சன்டா நீ வரமாட்டாயோனு…..” என்ற குரலைக் கேட்டவள் ஒதுங்கிப் பார்த்தாள். அவளால் நம்பவே முடியவில்லை அங்கே அவளது கார்த்திக் மச்சான் அவனுடன் கை குலுக்கிப் பேசிக்கொண்டிருந்தான்.    பவித்ராவுக்கு வியர்வை வடியத் தொடங்கியது.

‘ஓ… நோ…. இவனுக்கும், மச்சானுக்கும் என்ன தொடர்பு’ யோசித்துக்கொண்டிருந்தவளை யாரோ நோட்டமிடுவது போலுணரவே அவசரமாகக் கீழே பார்த்தாள். அங்கே அந்த லட்சுமி அக்கா அவளையே பார்த்து கண்ணசைவால் அவளருகே வருமாறு செய்கை செய்வது போலுணரவே வேக வேகமாக கீழிறங்கி அவளை நெருங்கினாள். முகத்தில் மலர்ச்சி தென்பட ”நீங்க பவித்ரா தானே?” கேள்வியுடன் அவளை நோக்கியதும்,

”ஆமா…. நானே தா…. உங்களுக்கெப்படி…..” மேலே பேசப்போனவளை கை காட்டி தடுத்து,

”எனக்கு எல்லா தெரியும்….. கல்யாணி ஒனக்கு அக்கா தானே….. ஓ கூட முக்கியமான விஷயம் பேசணும் வா…”

யாருமற்ற தனியறைக்கு அழைத்துப் போனதும்

”இங்க பாரம்மா…. நீ சின்னப் பொண்ணு…. ஒனக்கு எதுவும் தெரியாது…. நித்யா…..” மேலே பேசமுடியாமல் விம்மியவளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  சிறிது நேரத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டே

”அவளும், நானும் எப்டி இருந்தோம் தெரியுமா?” பெருமூச்சு விட்டபடியே  ”அதெல்லாம் ஒரு காலம்…”

திடீரென பவித்ராவின் தோள்களைப் பிடித்தவள் ”தங்கச்சி ஓ நலவுக்கு சொல்ற…. அந்த கம்பனிய விட்டு…”

”பவி…. பவி…. நீ எங்கிருக்க?” என்ற குரல் அருகே கேட்கவும் சட்டென அவளை விட்டு விட்டு ”போ… அக்கா ஒன்ன தேடுறா போல…” மௌனமாகவே அந்த இடத்தைவிட்டகன்றாலும் மனதில் ஆயிரம் போராட்டம்.

”அடி… நீ இன்னும் சாப்பிடவேயில்லயே… எங்க போன வா…..” கல்யாணி அவளது கையைப் பிடித்துக் கொண்டு நடந்தாள்.  ஆனால் அவளுள்ளத்தில் விடை காண வேண்டிய பல கேள்விகள் எஞ்சியிருந்தன.  ‘கடவுளே….. எனக்கு தெளிவான பாதய காட்டு’ மனதால் வேண்டியபடியே நடந்தாள்.

*******************

விடைபெற்றுப் போகும் தருவாயில் பவித்ரா ஒருவனது கண்களில் படாது ஒதுங்கியே போனாள். ”ஹலோ… எங்க ஓடுறீங்க?” கேள்வி கேட்டவனை நிமிர்ந்தும் பாராது கடந்து போக கால் வைத்ததும் அவளது கை அவனது கைகளுடன் பிணைந்து கொண்டது. அவசரமாக கைகளை உதறிவிட்டு,

”என்ன… மிஸ்டர்…. ஒரு பப்ளிக் பிளேஸ்ல இப்டியா நடக்றது?  சீ….” கோபத்தோடு கத்தியவளின் அருகே கல்யாணி பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள். ”என்னாச்சு…. பவி….” குரலில் பதற்றம் கலந்திருந்தது.  அவளது கைகளைப் பிடித்தவனோ ஓர் அசட்டுச் சிரிப்புடன் மீண்டும் அவளை நெருங்கி ”யுவர் லுக் பியுடிபுல்… சரியா… ஏ நித்திய போல…”

காதோரம் கூறிவிட்டு விலகிப் போனாலும் அவ்வார்த்தைகள் அவளுள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. ”சீ…. இவன் விக்னேஷ்…. என்ன சொல்லிட்டு போறான்…. பாவி…” வாய் திறந்து கூறியவளின் வார்த்தைகளைக் கேட்ட கல்யாணி  ”என்னடா சொன்னானவன்?”

”அது……”  எனக் கூறியதுமே அங்கே லட்சுமி அக்கா பிரசன்னமானாள்.

”ஹாய். வினோத்….” என்றபடி சற்றுமுன் அவளருகே வந்து பேசிச் சென்றவனை அழைத்ததும் பவித்ராவுக்கு உலகமே குழம்பியது போலானநிலை. கண்களில் கேள்வியுடன் அவளை நெருங்கியவளை ”பவித்ரா…. பேச. இது நேரமல்ல… நானே கண்டிக்கு வந்து பேசுறன் நீ இப்போ போ… உங்க மச்சான் பாத்துட போறாரு….” அவளருகே வந்து கூறிச் சென்ற லட்சுமியை ஆச்சரியமாகப் பார்த்து விட்டு  ”சீ… என்ன நடக்குதிங்க…. விக்னேஷல்லயா ஏகூட பேசினது?”

”பவி…. வா போலாம்….”  பின்னாலிருந்து கல்யாணி கூப்பிடவும் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றவளை லட்சுமி வித்தியாசமான பார்வைஹகொண்டு பார்ப்பது போலுணர்ந்தாள் அவள்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

 ”நீ…. நீங்களா?..!” தட்டுத்தடுமாறிவார்த்தைகளை சிந்தியவளைப் பார்த்து சா சிரித்தவன் ”என்ன…? அதிர்ச்சியா கேக்குறீங்க?” புருவத்தைச் சுருக்கியவன் கேட்டதும். மெல்லிய புன்னகை உதட்டோரம் விரிய ”இல்ல…. நீங்க திடீர்னு வந்தீங்களே அதான்…..” ” ஓ… ஸொரி….…

 ”நீ…. நீங்களா?..!” தட்டுத்தடுமாறிவார்த்தைகளை சிந்தியவளைப் பார்த்து சா சிரித்தவன் ”என்ன…? அதிர்ச்சியா கேக்குறீங்க?” புருவத்தைச் சுருக்கியவன் கேட்டதும். மெல்லிய புன்னகை உதட்டோரம் விரிய ”இல்ல…. நீங்க திடீர்னு வந்தீங்களே அதான்…..” ” ஓ… ஸொரி….…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *