பல்கலைக்கழகங்களில் கருப்பு அபாய சஹ்ரானிய சிந்தனையா?

  • 26

கடந்த 9ம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவிகளில் யூனியர் மாணவிகளுக்கு கறுப்பு அபாய அணிந்து வருமாறு கூறிய கட்டளையை சஹ்ரானிய சிந்தனையுடன் தொடர்புபடுத்தி madwala News  இணையதளத்தில் (இந்த கருப்பு அபாயா பகிடிவதையில் ஈடுபட்டவர்கள் அனேகமாக கிராம பகுதிகளைச் சேர்ந்த சீனியர் மாணவிகளே) குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தமது ஆதங்கத்தை முன்வைத்திருந்தனர். முதலில் குறித்த சம்பவத்திற்கு ஆழ்ந்த அநூதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். என்றாலும் குறித்த சம்பவத்தை சஹ்ரானிய சிந்தனையுடன் தொடர்பு படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

குறித்த சம்பவத்தில் நேரடியாக சம்பந்தமில்லை என்றாலும் அரச உயர் கல்வி நிறுவனமொன்றில் பெரும்பான்மை மாணவர்களுடன் ஒரு சில முஸ்லிம் மாணவ மாணவிகளாக உள்வாரியாக கற்று பகிடிவதை சம்பந்தமாக கறுப்பு அபாய அணிதல், முகத்திரை அணிதல், தொழுகைக்கான சந்தர்ப்பத்தை பகிடிவதையின் போது பெறல் போன்ற பல அனுபவங்களை பெற்றவன் அடிப்படையில் குறித்த சம்பவம் பற்றி முஸ்லிம் சீனியர் மாணவர்களுக்குள்ள பிரச்சினைகளை முன்வைக்கிறேன். பொருத்தமான மாற்றுத் தெரிவுகள் இருந்தால் தெரிவிக்கவும். முஸ்லிம் மஜ்லிஸ்களுடன் கலந்துரையாடி மாற்றங்களை ஏற்படுத்தலாம். பகிடிவதை சரியா தவறா என விவாதித்து எழுதும் பதிவுமல்ல, குறித்த பல்கலைக்கழக சீனியர்களுக்கு சார்பாக எழுதுவதுமல்ல. மாறாக குறித்த சம்பவத்தை சஹ்ரானுடன் தொடர்புபடுத்தியுள்ளதால் அது தவறென தௌிவுபடுத்தவே எழுதுகிறேன்.

இன்று நாடாளாவிய ரீதியில் பகிடிவதைக்கு எதிராக சட்டங்கள் இருந்தாலும் தற்போது நாடாளாவிய ரீதியில் ரகசியமான முறையில் சில இடங்களில் பகிடிவதை இடம் பெற்ற வண்ணமே உள்ளது. அவ்வகையில் இப்பகிடிவதைக் காலமானது ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும் சந்தர்ப்பமுள்ளது. இக்காலப்பிரிவில் முஸ்லிம் பெண்களிடம் இருந்து எதிர் நோக்கும் பிரச்சினைகள்தான் கருப்பு அபாயா அணிய முடியாது, முகத்திரையை (Face Cove) கழட்ட முடியாது. பெண்களின் ஆடை அலங்கார, அவ்ரத் விடயத்தில் மார்க்கத்தை கற்றரிந்த உலமாக்களுக்கிடையே கருத்து முரண்பாடுகள் உள்ள போது பல்கலைக்கழக சீனியர் மாணவர்களுக்கு தெளிவான முடிவு எடுப்பது கஷ்டம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

தற்போது நாட்டில் இடம் பெறுகின்ற பகிடிவதைகளை பிரதானமாக 4 வகையில் பிரித்து நோக்கலாம். கற்பழிப்புசார் பகிடிவதை, சித்திரவதைசார் பகிடிவதை, ஒழுக்கவியல்சார் பகிடிவதை, நகைச்சுவைசார் பகிடிவதை என்பனவே அவையாகும்.

இதில் ஒழுக்கவியல்சார் பகிடிவதை என்ற கருப்பொருளில்தான் கொழும்பு பல்கலைக் கழக முஸ்லிம் மாணவியின் சம்பவத்தை அவதானிக்க வேண்டும். அங்கு நடைபெற்ற சம்பவத்தில் விடப்பட்டுள்ள கட்டளை இதுதான் “கருப்பு நிற உடை, கருப்ப நிற பை, கருப்பு நிற சப்பாத்து மற்றும் ஹிஜாபை தலைக்கு சுற்றி கட்டாமல் வரவேண்டும்.” என்பதாகும்.

ஒழுக்கவியல்சார் பகிடிவதை என்பது இது தான் பகிடிவதை காலப்பிரிவில் குறித்த பீட மாணவர்கள் அணிந்து வர வேண்டிய ஆடை, தம்முடன் கொண்டு வர முடியுமான பொருட்கள், புத்தக கவர் அமைப்பு என சில விடயங்களை உள்ளடக்கியது. இதன் பொதுவான நடைமுறை செயற்பாடுகளாக ஆண்கள், பெண்கள் அனைவரும் கருப்பு நிற பாதணி (Bata Slipper) அணிய வேண்டும், Mobile Phone கொண்டுவர முடியாது, ஆண்கள் தாடி, மீசை வைக்க முடியாது, ஆண்கள் Black Trouser, White Shirt  அணிய வேண்டும். பெண்கள் Short blouse long skirt அணிய வேண்டும். போன்றவற்றை குறிப்பிடலாம்.

மேலுள்ள கட்டளைகள் இன மத பேதமின்றி அனைத்து மாணவர்களாலும் என்றாலும் இங்கு பெண்களின் ஆடை விடயத்தில் Short blouse long skirt முஸ்லிம் பெண்களுக்கு பொருத்தமா இல்லையா என்பது சர்ச்சைக்குரிய விடயாகும். எனவே பெண்களின் ஆடை விடயத்தில் முகத்திரை (Face Cover) அணியும் மாணவர்களுக்கு அணியும் படியும் கூறுவதோடு, முஸ்லிம் பெண்கள் எவ்வகை ஆடை அணிந்தாலும் குறிப்பிட்ட பகிடிவதை காலத்தில் கறுப்பு நிற அபாய, வெள்ளை நிறம் அல்லது கறுப்பு நிற ஹிஜாப் அணியும் படி கூறப்படுகிறது. என்றாலும் பகிடிவதை காலம் முடிந்ததும் தாம் விரும்பியபடி ஆடை அணிந்து வரலாம்.

இது பகிடிவதை காலத்தில் பெண்களுக்கான Short blouse long skirt என்ற ஆடைக்கு பதிலாக,    தமது அவ்ரத்தை மறைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகள் வருவதற்கான ஓர் ஒழுங்காக கருப்பு நிற அபாய மற்றும் ஹிஜாப் அணியும் படி கூறப்படுகின்றது. மாற்றமாக சஹ்ரானிய சிந்தனையால் கவரப்பட்டு முன்வைக்கும் விடயமல்ல. எனவே இச் சாதாரண ஆடை அணிதலுக்கான கட்டளையை சஹ்ரானிய சிந்தனையுடன் தொடர்புபடுத்துவது மிகப் பெரிய தவறாகும். என்றாலும் “தாத்தா என்னிடம் கருப்பு ஆடைகளோ, பையோ, சப்பாத்தோ இல்லை நாங்கள் கருப்பு அபாயா அணிவதும் இல்லை” என தன்பக்க நியாயத்தை முன்வைத்த சந்தர்பத்தில், “நான் சீனியர் உனக்கு எனது கையைப் பற்ற முடியாது. நான் சொல்லவது போல் வர முடியாவிட்டால் கல்வியை தொடர முடியாது. அப்படி மீறி வந்தால் உன்னை …. பார்த்துக்கொள்வேன்” என் அச்சுறுத்தும் குறித்த மாணவியின் பதில் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.

இறுதியாக சமூகத்திடம் ஓர் வேண்டுகோள். சட்டங்கள் மூலம் பகிடிவதையை நிறுத்தினாலும் யதார்த்தம் இதுதான் திரைமறைவில் ஒழுக்கவியல்சார், நகைச்சுவை சார் பகிடிவதை தொடரலாம். அவ்வாறன சந்தர்ப்பங்களில் முஸ்லிம் பெண்களுக்கு கறுப்பு அபாய, ஹிஜாப் பொருத்தமா அல்லது பிற மதத்தவர் போல் Short blouse long skirt பொருத்தமா அல்லது இதனை விட சிறந்த தெரிவுள்ளதா? உங்கள் கருத்துக்களை ibnuasadymail@gmail.com மின்னஞ்ஞல் மூலம் தெரிவிக்கவும்.

Ibnuasad


கடந்த 9ம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவிகளில் யூனியர் மாணவிகளுக்கு கறுப்பு அபாய அணிந்து வருமாறு கூறிய கட்டளையை சஹ்ரானிய சிந்தனையுடன் தொடர்புபடுத்தி madwala News  இணையதளத்தில் (இந்த கருப்பு அபாயா பகிடிவதையில்…

கடந்த 9ம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவிகளில் யூனியர் மாணவிகளுக்கு கறுப்பு அபாய அணிந்து வருமாறு கூறிய கட்டளையை சஹ்ரானிய சிந்தனையுடன் தொடர்புபடுத்தி madwala News  இணையதளத்தில் (இந்த கருப்பு அபாயா பகிடிவதையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *