ஈராண்டின் விளிம்பினிலே

ஈராண்டின் விளிம்பினிலே

அன்னை வயிற்றில் உதித்து
தந்தை மடியில் துளிர்த்து
உயர் கல்வியை முடித்து
பல்கலையில் பாதம் பதித்தோம் அன்று.

உறவுகளைப் பிரியும் நேரம்
உலகினையே வெறுத்த அந்த நொடிகள்
சொல்லெணாத் துயரை
நெஞ்சிலே சுமந்த தருணங்கள்.

காலவோட்டத்தின் வேகத்தில்
காற்றாய் சுழன்றன நாட்கள்
கண்ணிமைக்கும் நொடியில்
கண்ணெதிரே ஈராண்டின் விளிம்பில் இன்று.

முதன் முதலாய் உறவுகளின் பிரிவும்
புது முகமாய் அறிமுகமான
உன்னத தோழிகளுடனான உள்ளங்களின் சங்கமமும்.

துன்ப சேற்றில் அமிழ்ந்து
இன்ப ஊற்றில் நனைந்து
ஈராண்டின் எல்லையைக் கடந்து
ஈரம் சுமந்த நெஞ்சுடன் பயணிக்கிறோம்
மிகுதி நாட்களை நோக்கியே.

இனிமையான நாட்களின்
இதமான தருணங்களை
பசுமரத்தாணியாய் நெஞ்சிலே பதித்து
இனி வரப்போகும் காலங்கள்
வளமாய் அமைந்திட
வல்லோனைத் துதித்திடுவோம்.
இன்ஷா அல்லாஹ்.

ILMA ANEES
SEUSL
SECOND YEAR

கவிதை வியூகம் வெளியீட்டு மையம்