இன்றைய ஹீரோக்கள்!!

  • 16

பத்து மாதம் சுமந்து
தாம் பெற்ற செல்வங்களை
ஐந்தாண்டு அனுபவம் கொடுத்து
ஒரு பக்குவம் வரை வளர்த்து
கல்விக் கண் திறக்க
இன்று இலங்கை மண்ணிலே
நாடளாவிய ரீதியில்

நல்லிணக்கத்தோடு
நட்பண்பு வளர்க்க
கல்விக் கலைக் கூடங்களிலே
உத்தியோகபூர்வ வரவேற்பு!!
நினைத்தாலே இனிக்கும்
நினைத்திடவே மனது ஏங்கும்!

பாக்கள் பல பாடி பாமாலைகளுடன்
பரிசுப் பொதிகளும் வழங்கி
பச்சிளம் பாலகர்களுக்கு
நற்பழக்கங்கள் பல பழக்கி
பாரும் குளிரச் செய்ய
பாடசாலை வளாகத்தில்
மரக்கன்றுகளும் நட்டி
சில மாகாண மாவட்டங்களில்
பள்ளிச் சிறார்கள் வரவேற்கப்படும்
ஆனந்த அனுபவம் அழகு!!

சில மாகாண மாவட்டங்களிலோ
சாக்கடை அரசியல் பேசும்
அரசியல்வாதிகள் அறிவீனமாய்
அரச பாடசாலைகளில்
பூ மாலையிட்டு வரவேற்கப்படும்
அவல நிலை! இழி நிலை!

என்று எப்படி திருந்த
எங்கள் முஸ்லிம் சமூகம்!!

இன்றைய ஹீரோக்கள்
முதல் நிலைச் சிறார்களே
வாழ்த்தப்பட வேண்டியவர்கள்
வளர்க்கப்பட தகுதியானவர்கள்
நம் நாளைய தலைவர்களே
சமூகமே ஆய்ந்தோய்ந்து பாராய்!!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
SLPS- 2
பஸ்யால

பத்து மாதம் சுமந்து தாம் பெற்ற செல்வங்களை ஐந்தாண்டு அனுபவம் கொடுத்து ஒரு பக்குவம் வரை வளர்த்து கல்விக் கண் திறக்க இன்று இலங்கை மண்ணிலே நாடளாவிய ரீதியில் நல்லிணக்கத்தோடு நட்பண்பு வளர்க்க கல்விக்…

பத்து மாதம் சுமந்து தாம் பெற்ற செல்வங்களை ஐந்தாண்டு அனுபவம் கொடுத்து ஒரு பக்குவம் வரை வளர்த்து கல்விக் கண் திறக்க இன்று இலங்கை மண்ணிலே நாடளாவிய ரீதியில் நல்லிணக்கத்தோடு நட்பண்பு வளர்க்க கல்விக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *