குரங்கு மனசு பாகம் 08

  • 8

அழகான அந்தக்காலை புதுத்தெம்புடன் பூக்க, உம்மா கொடுத்த ரவைப்பிட்டை அசைத்துக் கொண்டே, இரவெல்லாம் தூக்கமின்றி யோசித்துக் கொண்டிருந்த, தன் ஆட்டோ டிரைவர் பற்றிய சிந்தனைகளை மீள் சுழற்றினாள் சர்மி. எதிர்பார்க்கா அந்த சந்திப்பு தொட்டு எல்லாமே அவள் எண்ணங்களில் அலைபாய,

“எவ்வளவு பொறுப்பான மனிஷன். என்ன போல ஒரு புள்ளய கூடிட்டு போறன்னா எந்தளவு பக்குவம் வேணும் ஹப்பாஹ்!”

“சர்மி ஆட்டோ வந்து ஹோன் அடிக்குது.. அவசரமா சாப்பிட்டுட்டு கிளம்பு” அவளின் தாய் கூவ, தன்நினைவுக்கு வந்தவள், அவசர அவசரமாக வெளியிறங்கிப் போனாள்.

“இவள் என்ன செய்றாள் இன்னமும் வராம?” அந்த ஆலமரத்தடியில் தன் ஆட்டோவை நிறுத்தி காத்திருந்தவனை நோக்கி வேகமாக வந்த சர்மி, ஏதோ நினைப்போடு பேச்சுக் கொடுத்தாள்.

“ஐ யம் சொறி பிரதர், இனி உங்க ஆட்டோல நான் வரல்ல.”

“ஏன்? என்ன ஆவிட்டு?”

“நீங்க என்கூட பொய்யா பழகுறீங்க..”

“நா.. நான் என்ன பொய்?”

“உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கு பிரதர்?”

“எதுவும் இல்ல என்னம்மா?”

“இருக்கட்டும், ஆனா என்மனசு சரியில்ல, என்னால வர முடியாது.”

“ஏன் உங்களுக்கு என்ன பிரப்லம்?”

“ஐயோ பிரதர் பிளீஸ்.”

“ஹஹ் ஓகே தங்கச்சி.. உங்க இஷ்டம். அப்போ நான் கிளம்புறேன்.” அவன் புறப்பட தயாராகையில்,

“ஹோ போங்க..”

“நீங்க தானே வர முடியாதுன்னு சொன்னீங்க?”

“ஆமாம் முடியாது தான்..”

“சிஸ்டர் ஆர் யூ ஓகே?”

“உங்களால எப்புடி பிரதர் இப்படியெல்லாம் முடியுது?”

“கொஞ்சம் புரியுர போல பேசுங்கமா..”

“ஏன்னா நான் உங்கள விரும்புறன், உங்க கரக்ட்டர விரும்புறன்.”

“ஹலோ மெடம் என்ன நக்கலா? நான் ஒரு ஆட்டோ டிரைவர், ஞாபகமிருக்கா?”

“இருக்கட்டும் பிரதர், எனக்கு அதுல வேல இல்ல.”

“உனக்கு லூசா? முதல்ல என் நேம் என்னான்னு சரி தெரியுமா? என்னா கண்டதும் காதலா?”

“நீங்க எப்படி வேணும்னாலும் நெனச்சி கோங்க. அதபத்தி எனக்கு கவல இல்ல. ஆனா நான் நல்லா யோசிச்சி தான் இந்த முடிவுக்கு வந்தன்.”

“நான் உங்க அளவுக்கு இல்லமா”

“பரவல்ல பிரதர்..”

“உனக்கு பைத்தியம் புடிச்சிருக்கா?”

“ஹலோ பிரதர், நான் இப்புடி தான். எதயும் மனசுல வெச்சிட்டு இருக்க மாட்டன். விரும்பமில்லன்னா இல்லன்னு சொல்லுங்க. எனக்கு ஒவ்வொன்னு சொல்லாதிங்க பிளீஸ்..

“சரி விருப்பமில்ல போதுமா?”

ஆட்டோவை வேகமாகத் திருப்பியவன் கோவத்துடன் விடைபெற, சிலை போல் நின்றிருந்தாள் சர்மி. அன்றிலிருந்து சர்மிக்கும் அந்த இளைஞனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதிருந்தது, நாட்கள் கடந்த பின்னும் குறித்த இளைஞனை மறக்க முடியாத சர்மி, தன்னிலிருந்து அவனை மறக்க வைப்பதற்காக ஒரு முடிவுக்கு வந்தாள்.

கதை தொடரும்…
Aathifa Ashra

அழகான அந்தக்காலை புதுத்தெம்புடன் பூக்க, உம்மா கொடுத்த ரவைப்பிட்டை அசைத்துக் கொண்டே, இரவெல்லாம் தூக்கமின்றி யோசித்துக் கொண்டிருந்த, தன் ஆட்டோ டிரைவர் பற்றிய சிந்தனைகளை மீள் சுழற்றினாள் சர்மி. எதிர்பார்க்கா அந்த சந்திப்பு தொட்டு…

அழகான அந்தக்காலை புதுத்தெம்புடன் பூக்க, உம்மா கொடுத்த ரவைப்பிட்டை அசைத்துக் கொண்டே, இரவெல்லாம் தூக்கமின்றி யோசித்துக் கொண்டிருந்த, தன் ஆட்டோ டிரைவர் பற்றிய சிந்தனைகளை மீள் சுழற்றினாள் சர்மி. எதிர்பார்க்கா அந்த சந்திப்பு தொட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *