ஏழைக்கொரு குரல்

ஏழைக்கொரு குரல்

சுவையான பண்டங்கள்
நாவைத் தொடும் முன்
போ(f)னை அலங்கரித்து
பே(f)ஸ்புக்கில் பதிவேற்றப்பட்டு
ஈற்றில் நாகரிகம் என்ற பெயரில்
நாவைத் தொட்டது கொஞ்சமும்
குப்பைத் தொட்டியை எட்டியது மிகுதியுமாய்.

பாமரர்களின் பரிதவிப்புகள்
பார் முழுதும் தலை விரித்தாட
நாகரிக மோகர்களின்
அநாகரிக நடத்தைகள்

உண்ணும் உணவில்
கண்ணும் கருத்துமாய் நின்று
மண்ணின் மடிதனில்
ஊணின்றி துவண்டு போகும்
உயிர்கள் பலதினதும்
வயிற்றை நிரப்பிட
வழி செய்தலில்
களி கொள்ளுதலே பேரழகு.

ILMA ANEES
SEUSL
SECOND YEAR

கவிதை வியூகம் வெளியீட்டு மையம்