குரங்கு மனசு பாகம் 10

  • 6

“என்ன சொல்ல வாறீங்க தம்பீ? எனக்கு இருக்குறது ஒரே ஒரு புள்ள. அவள போய் ஒரு ஆட்டோ டிரைவருக்கா? முடியாது தம்பீ. அவள் ஏதோ சிறுபிள்ள தனமா பேசினத வெச்சிட்டு இப்புடி வீடு தேடி வருவீங்களா? வெக்கமில்ல உங்களுக்கு?” அந்தத் தாயின் வார்த்தைகள் அதீகை சங்கடப் படுத்தவில்லை.

“உங்க புள்ள என் கொலிபிகேஷன் என்னான்னு பார்க்கல்ல ஆன்ட்டீ. அவ என்ன மட்டும் தான் விரும்பினா, வேணும்னா அவள் கிட்ட கேட்டு பாருங்க. உங்க புள்ள என்ன விருப்பம் இல்லன்னு சொன்னா நான் போயிட்றன். இல்லன்னா அவள் தான் மை லைய்ப்.. ஐ யம் சொறி ஆன்ட்டீ..”

“உனக்கு என் புள்ள கெடச்சாது அவ்வளவு தான். அப்போ உங்களுக்கு உங்க புள்ள கெடச்சாதுன்னு தான்  அர்த்தம்” பூனை போல் பதுங்கியவன் புலி போல் பாய, பிரமை பிடித்தவளாய் நின்றிருந்தாள் ராபியா.

“உங்க புள்ள என்ன விருப்பம்னு சொன்னா உங்களால ஒன்னும் செய்ய முடியாது ஆன்ட்டீ, அவள் இப்ப உங்ககூட இல்ல. என்னால என்ன வேணும்னாலும் செய்யலாம், நான் போயி வாரன்” ராபியாவுக்கு உலகமே இருள்வது போன்ற எண்ணம், ஷோபாவில் தொப்பென்று விழுந்தவள் கவலை நிறைய அழுதாள்.

“தன் பிள்ளை மத்ரஸா போக வேண்டும் என்று சொன்னது, அதற்கு முன்னைய காலப்பகுதிகளில் வீட்டில் சோர்ந்து போய் அமர்ந்திருந்தது” என ஒவ்வொன்றாய் அவள் நினைவுககளில் நீள காரணம் இதுவென்று ஊகித்துக் கொண்டவள்,  கவலை போக அழுது முடித்தாள்.

“நோ! இவள்  இனி மத்ரஸால இருக்கக் கூடாது. இந்த ஆட்டோகாரனோட பேச்ச பார்த்தா இரவோடிரவாக என் புள்ளய தூக்கினாலும் தூக்கி விடுவான். அதுக்கு நான் எடம் குடுக்க மாட்டேன். இப்பவே அவள வீட்டுக்கு கூட்டி வாரன்” தன் நிலையில் உறுதிகொண்ட தாய் ராபியாவுக்கு , சமையல் வேலைகள் ஓடவில்லை.  எல்லாம் அப்படியே ஒரு புறம் வைத்து விட்டு அவசர அவசரமாய் தன்னை தயார்படுத்திக் கொண்டு சர்மி படிக்கும் அரபுக் கல்லூரிக்கு விரைந்தாள்.

அந்த பெரிய கல்லூரியில் தன் பிள்ளை மார்க்கம் படிப்பது ஆரம்பத்தில் ராபியாவை கர்வம் கொள்ளச் செய்தாலும், இப்போ அந்தக் கல்லூரியை காணவே பிடிக்கவில்லை அவளுக்கு. நுழைவாயில் வரை போனவள், வாயிற்காப்பாளனிடம் தன்னை அறிமுகப் படுத்தி விட்டு நேரே காரியாலயம் விரைந்தாள்.

“அஸ்ஸலாமு அலைக்கும்.. உள்ள வாங்க” சர்மியின் தாயை வரவேற்ற அந்தப் பெண் அதிபர் விடயம் குறித்து வினவ,

“என் புள்ளய வீட்டுக்கு கூடிட்டு போக வந்தன்..

“ஏன் என்னமாலும் ஸ்பஷல் ஆஹ் வீட்டுல?”

“இல்ல அவளுக்கு கலியாணம் சரி வந்திருக்கு…

“இது என்ன மிஸீஸ் ராபியா? படிக்குற புள்ளய போய் கலியாணம் அது இதுன்னு சொல்லி கொண்டு?”

“பிளீஸ் எங்க பேர்சனல் விஷயத்துல தல போட வேணாம், நல்ல எடத்துல இருந்து அவள கேட்டு வந்திருக்கு, அதனால இந்த விஷயத்த விட்டுபோட ஏலாது.”

“நான் உங்க தனிப்பட்ட விஷயத்துல தலபோடல்ல, ஆனா அவள் படிக்குற பொண்ணு, பாவமா இல்லயா? நாளக்கி இந்த விஷயமா எல்லாரும் அல்லாஹ்கிட்ட பதில் சொல்ல வேண்டியிருக்கும்.”

“இப்போ விட்டுட்டு போனாலும் எல்லாரும் அல்லாஹ் கிட்ட பதில் சொல்ல வேண்டி வரும்” வெளியில் வார்த்தைகளை விடாமல் தனக்குள் சொல்லிக் கொண்ட அந்தத் தாய், உள்ளம் நிறைய வலிகளோடு,

“நான் என் புள்ளய கூடிட்டு போகனும். இதுதான் என்னோட லாஸ்ட் முடிவு..” தன் வார்த்தையில் ஒற்றைக்கால் நின்றாள்.

“இப்படியும் தாய்மார்களா?” விடயம் அறியா அதிபர் அந்தத் தாயின் மேல் குற்றம் காண, “முதலாம் கிலாஸ்ல படிக்குற சர்மிக்கு ஓபீஸ் வர சொல்லுங்க” அங்கிருந்த லேபரிடம்  கட்டளை பிறப்பித்தார்.

கதை தொடரும்…
Aathifa Ashraf

“என்ன சொல்ல வாறீங்க தம்பீ? எனக்கு இருக்குறது ஒரே ஒரு புள்ள. அவள போய் ஒரு ஆட்டோ டிரைவருக்கா? முடியாது தம்பீ. அவள் ஏதோ சிறுபிள்ள தனமா பேசினத வெச்சிட்டு இப்புடி வீடு தேடி…

“என்ன சொல்ல வாறீங்க தம்பீ? எனக்கு இருக்குறது ஒரே ஒரு புள்ள. அவள போய் ஒரு ஆட்டோ டிரைவருக்கா? முடியாது தம்பீ. அவள் ஏதோ சிறுபிள்ள தனமா பேசினத வெச்சிட்டு இப்புடி வீடு தேடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *