தனிமை

கொளுகொம்பு இன்றி
கொடி படவில்லை
காரணம் தனிமை…

நிசப்தமாய் ஏதேதோ
நிழலொடு தொடரும் உரையாடல்
காரணம் தனிமை…

விதவையான உணர்வோடு
விரக்தியாய் ஓர் உணர்வு
காரணம் தனிமை…

காயங்கள் காலாவதியாகி
வடுக்கள் தினசரி வாடகையாகிப்போகிறது
காரணம் தனிமை…

கனவில் கடந்து
நனவில் எஞ்சியிருப்பது ஏக்கம்
காரணம் தனிமை…

விடை இருந்தும் வினாக்களாய்
வாழ்க்கை தினசரி ஓட்டம்
காரணம் தனிமை…

அழவும் முடியாமல்
எழவும் முடியாமல் ஓர் ஓட்டம்
காரணம் தனிமை…

தித்திப்புக்கள் தொலைந்து போய்
திகிழ்கள் நிகழ்வாகி
காரணம் தனிமை…

Asana Akbar
Anuradhapura
SEU Of SrilankaLeave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: