வெற்றிகரமான பாடசாலையில் ஐந்து பண்புக்கூறுகள்

  • 11

உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு பயனுள்ள பாடசாலைகள் தேவை. ஒட்டுமொத்தமாக அமெரிக்க பாடசாலை முறைமை சர்வதேச தரத்திற்கு உட்பட்டதாக இருக்கக்கூடும் என்றாலும், இன்னும் சில பாடசாலைகள் அதற்கப்பால் தனிச் சிறப்புடன் இயங்குகின்றன.

நிச்சயமாக, பாடசாலை கல்விச் சூழல் குறிப்பிட்ட பாடசாலைகளின் செயல்திறனுக்கு பங்களிக்கும் பண்புகளை பாதிக்கும். ஆனால் அதே நேரத்தில், பாடசாலையின் செயல்திறனிற்கு பங்களிக்கும் பண்புக்கூறுகள் உள்ளன. வினைத்திறான செயற்பாட்டிற்கு பங்களிக்கும் பண்புகளை நாம் புரிந்து கொண்டால், வெற்றிகரமான பாடாசாலையில் எத்தகைய பண்புக்கூறுகள் உள்ளன என்பதை நாம் புரிந்துக்கொள்ளலாம்.

பயனுள்ள பாடசாலையை உருவாக்கும் ஐந்து பொதுவான பண்புக்கூறுகள் உள்ளன.

தலைமை

பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலை நிறுவாக சபையினர் (SDC ) வலுவான தலைமையை வழங்கும்போது மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். திறமையான தலைவர்கள் பாடசாலையின் குறிக்கோள்களையும் (visions ) தரிசனங்களையும் (goals) வெற்றிகரமாக எடுத்துச் செல்வார்கள், ஆசிரியர்கள் அவர்களின் திறன்களை மேம்படுத்த அவர்களுக்கு ஒத்துழைப்பார்கள், மேலும் சிக்கல்களைக் கண்டுபிடிப்பதிலும் தீர்வுகளிலும் வழங்குவதிலும் முனைப்புடன் ஈடுபடுவார்கள்.

உயர் எதிர்பார்ப்புகள்

இரண்டாவது பண்புக்கூறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான உயர் எதிர்பார்ப்புகளாகும். மாணவர்களின் மீதான உயர் எதிர்பார்ப்பானது மாணவர்களின் செயல்திறனில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக பலமுறை நிறுபிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் இந்த காலகட்டத்தில் அவர்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை ஓரளவு சார்ந்தே இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் தங்களின் தனிப்பட்ட திறனையும் மதிப்பையும் இன்னும் வடிவமைப்பதற்கு அது தூண்டுகின்றது. உயர் மட்டத்தில் கற்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் ஆசிரியர்கள் தம் மீதான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிக்கலாம், குறிப்பாக ஆசிரியர்களின் மதிப்பீடுகள் மற்றும் தொழில்முறை மேம்பாடு ஆகியவற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கு அவர்களுக்கு உதவும்போது இம் மாற்றத்தை அடையலாம்.

நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மதிப்பீடு (Ongoing Evaluation)

ஒரு வெற்றிகரமான பள்ளியின் மூன்றாவது பண்பு மாணவர்களின் செயல்திறன் மற்றும் வளர்ச்சி தொடர்பான தொடர்ச்சியான மதிப்பீடு ஆகும். பாடசாலைகள் தங்கள் மாணவர்களை நாடு முழுவதிலுமுள்ள மற்ற பாடசாலை மாணவர்களுடன் ஒப்பிட்டு மதிப்பீட்டு தரவைப் உருவாக்க வேண்டும். மதிப்பீட்டுத் தரவை திறம்பட பயன்படுத்துவது, வகுப்பறை மற்றும் பாடசாலை மட்டங்களில் கற்றல் தொடர்பான சிக்கலான பகுதிகளை அடையாளம் காண பாடசாலை நிர்வாகத்திற்கு துணைப் புரிகின்றது, இதனால் ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன் மொழிவுகளை சமர்பிக்கலாம்.

இலக்குகள் மற்றும் பயண பாதை (Goals and direction)

ஒரு வெற்றிகரமான பாடசாலையின் நான்காவது பண்பு பாடசாலையின் இலக்குகள் மற்றும் அது பயணிக்கும் திசை ஆகும், ஆய்வு முடிவுகளின் படி, வெற்றிகரமான பாடசாலை அதிபர் இலக்குகளை தீவிரமாக உருவாக்கி, பின்னர் அவற்றை பொருத்தமான நபர்களுடன் (எ.கா. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாரிய அளவிலான நபர்கள் கொண்ட சமூகம்) திறம்பட தொடர்பு படுத்துவார். பாடசாலை செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளுக்கான இலக்குகளில் புதுமைகளை இணைக்க பாடசாலை அதிபர் திறந்த மனதுடன் தயாராக இருக்க வேண்டும். எனவே பாசாலை இலக்குகளை வளர்ப்பதற்கான செயல்பாட்டில் அனைத்து பங்குதாரர்களின் (stokeholders) கருத்துக்கள் உள்ளீர்த்தல் முக்கியமானதாகும். கற்றல் சூழலில் மேற் சொன்ன அனைவரையும் தொடர்புகொண்டு பகிரப்படும் இலக்குகளை நோக்கி முழு பாடசாலை சமூகமும் செயல்படும் போது மாணவர்களின் செயல்திறன் மேம்படுவதாகக் நிறுவப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைப்பு (Secure and Organize)

ஒரு வெற்றிகரமான பாடசாலையின் ஐந்தாவது மற்றும் இறுதி பண்பு என்னவென்றால், பாடசாலை எந்த அளவிற்கு பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் உள்ளது என்பதாகும். அதிகபட்ச கற்றல் நிகழ மாணவர்கள் பாடசாலையில் பாதுகாப்பை உணர வேண்டும். மாணவர்களின் கண்ணியம் என்பது ஒரு தரமான மேம்பட்ட , பயனுள்ள மற்றும் பாதுகாப்பான பாடசாலையின் அடிப்படை அம்சமாகும். வெற்றிகரமான பாடசாலையில் சமூகம் பல பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் நிகழ்த்சி திட்டங்கள் கொண்டிருக்கும் . அவர்கள் சூழ்நிலைகள் கை நழுவதற்கு முன்பு கடினமான அல்லது சிக்கலான மாணவர்களுடன் திறம்பட பணியாற்றுகிறார்கள்.

ஆங்கிலத்தில் மேத்யூ லிஞ்ச்
தமிழில் றிஸான் (Naleemi)

உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு பயனுள்ள பாடசாலைகள் தேவை. ஒட்டுமொத்தமாக அமெரிக்க பாடசாலை முறைமை சர்வதேச தரத்திற்கு உட்பட்டதாக இருக்கக்கூடும் என்றாலும், இன்னும் சில பாடசாலைகள் அதற்கப்பால் தனிச் சிறப்புடன் இயங்குகின்றன. நிச்சயமாக, பாடசாலை கல்விச்…

உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு பயனுள்ள பாடசாலைகள் தேவை. ஒட்டுமொத்தமாக அமெரிக்க பாடசாலை முறைமை சர்வதேச தரத்திற்கு உட்பட்டதாக இருக்கக்கூடும் என்றாலும், இன்னும் சில பாடசாலைகள் அதற்கப்பால் தனிச் சிறப்புடன் இயங்குகின்றன. நிச்சயமாக, பாடசாலை கல்விச்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *