நித்யா… அத்தியாயம் -10

  • 7

கதவு தட்டப்படும் ஓசை கேட்டவள் அவசரமாக தொலை பேசியை மறைத்து வைத்து விட்டு ஓடினாள்.

” சி… சின்னக்கா… நீங்களா?”

இடுப்பில் கைகளை கட்டியபடி அவளை கோபத்துடன் நோக்கி, ”என்ன பண்ற நீ? எவ்ளோ நேரம் கதவ தட்டுறன்டு தெரியுமா? ”

”ஐயோ… மன்னிச்சுடக்கா… பிளீஸ்…” காதிரண்டிலும் கைகளை வைத்துக் கொண்டு முகத்தை சோகமயமானதாக வைத்தவளைப் பார்த்து புன்னகைத்தவள்,

”சரி…சரி… வா கிச்சனுக்கு…” அவர்களிருவருக்கும் அப்பொழுது இனிமையாகவே கழிந்தது.  திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளைப் போல பவித்ராவை நோக்கி

”பவி… இப்போ மணி என்ன?”

”நில்லக்கா… ஆ.. எட்டேகால்…”

”என்னது… இவ்ளோ டைம் போயிட்டதா? என்ன உன் மச்சான இன்னும் காணம்… எங்கயும் இந்த டைம்கு போக மாட்டாரே…” வாய்க்கு வந்ததையெல்லாம் புலம்ப ஆரம்பித்தவளின் தோள்களை பிடித்து,

”சின்னக்கா… ஏ நீ இவ்ளோ டென்ஷனாவுற? அவரென்ன சின்ன புள்ளயா? வருவாரு… வா போன் பண்ணலாம்…” பவித்ரா தனது தொலைபேசியை எடுக்க அறைக்குச் சென்றாள்.

”சின்னக்கா… நில்லு.. நா பேசுறன்…” கார்த்திக்கின் இலக்கத்தை அழுத்தி காதில் வைத்தவள் சற்று நேரத்தின் பின்

”சீ… என்ன போன் கட் என்டு வருது…. ”

”என்ன? கட் பண்றாரா?  ஐயோ… அவருக்கு என்னாச்சு….” கைகளை தலையிலடித்தபடியே அழத் தொடங்கினாள்.

”ஷ்… அக்கா…அழுவாத… பிளீஸ்… நாம அவர கண்டுபிடிக்கலாம்.. ” எனக் கூறி விட்டு சற்று நேரம் யோசித்தவள்

”சின்னக்கா… இரு வாரன்…”

தனதறையை நோக்கி ஓட்டமெடுத்தவள் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு போனை எடுத்தாள். அப்போது அது அலறியது. அவசரமாக காதில் வைத்தவள்

”யாரு? ”

”பவித்ரா… எல்லாதையும் சொல்ல முடியாது… நீ நேரில வரணும்… வா இப்போ.. பெரிய வீட்டுகு…”

”ஐயோ..சின்னக்கா மட்டும் தனியா இருக்கா… ஆ.. அடுத்தது… கார்த்திக் மச்சான காணம்…”

”ஆ.. சரி..சரி… அவள கதவ மூடிக்க சொல்லிட்டு அவசரமா வா… ”

”வினோத் அண்ணா….” ஏதோ பேசச் சென்றவளுக்கு பேச சந்தர்ப்பம் அமையாமலே துண்டிக்கப்பட்டது. கோபத்தின் உச்சிக்கே சென்றவள் போனை தூக்கி வீசிவிட்டு,

”சீ… என்ன நடக்குதிங்க….”

கதவைத் திறந்து கொண்டு வந்தவளை பார்த்து ”யார்கிட்ட பேசிட்டிருந்த? ”கல்யாணியின் கேள்வியால் நிலைகுலைந்து போனவள்  சமாளித்துக்கொண்டு ”அ…அது… மச்சானுடய கூட்டாளி விக்னேஷ்கு தா போன் பண்ணி கேட்ட… பட்… அங்க வரலியாம்… அக்கா…நீ.. கதவ சாத்திட்டிரு.. நா இப்போ வந்துடறன்….”

அவளது தோள்களை தட்டிவிட்டு அவசரமாக சென்றவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் கல்யாணி.

***********************

மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு அந்தப் பெரிய வீட்டில் காலடியெடுத்து வைத்தவளை இரு ஜீவன்கள் வரவேற்றன.

”வினோத் அண்ணா…. ஏ அவசரமா கூப்டீங்க ?” பரபரப்புடன் கேட்டவளை சற்று நேரம் நோட்டம் விட்டவன் லட்சுமியை பார்த்து சிரித்தான்.

”பவித்ரா… ஒங்கக்காவ யாரு கொல பண்ணாங்க என்ற விஷயம் வெளிய வர போகுது… நீ கவனமா கேளு….” மூவரும் சேர்ந்து ஏதேதோ திட்டங்களை வகுத்தனர். இறுதியில் பவித்ரா எழுந்து

”நானும் ஒரு விஷயம் கேக்கணும்? கார்த்திக் மச்சான காணலயனு சின்னக்கா ஒப்பாரி வெக்றாங்க… பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க…”

ஆராய்ச்சிப் பார்வையை அவள் மீது வீசியவன்  ”அப்டியா?  வா போலாம்…” மூவருமாக காரிலமர்ந்து கல்யாணியின் வீட்டையடைந்தனர். அங்கே அவள் அழுதழுது கண்களிரண்டும் சிவப்பாக மாறியிருந்தது. பவித்ராவைக் காணவும் ஓடி வந்து அவளை கட்டிப் பிடித்து

”பவி…ஓ… மச்சான்ட போனும் வேலசெய்றல்ல… பாரு… இப்போ என்ன பண்ண?” கதறியவளின் முதுகைத் தடவியபடியே வினோத்தின் மீது பார்வையை ஓட்டினாள்.

”கல்யாணி… நீங்க கவல படாதீங்க… நா பாத்துகிறன்…”

”நீங்க இப்போ நல்லா தூங்குங்க…” லட்சுமியும் அவளை அழைத்துக் கொண்டு அறைக்குச் செல்கையில்

”பவித்ரா… கொஞ்சம் பக்கதுல வா….”

வினோத் அதிகாரத் தொனியில் கூப்பிடவும் உடனே அவனருகே சென்றாள்.

”நா ஒனக்கு ஒன்னு சொல்றன் நல்லா கேட்டுக… இந்த விஷயம் பொலிஸ்கு போகாம நீ தா பாத்துகணும்…”

அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டவள் ”என்ன சொல்றீங்க? நாளைக்கே பொலிஸ் ஸ்டேசனுக்கு போக தா பாத்ததே… பாத்தீங்களே அக்கா நெலமய!!  பெரியக்கிவ தா பறிகுடுத்தாச்சி… இதுக்கு மேல பொறுக்கல….” உணர்ச்சி வசப்படப் பேசியவளின் தோள்களை பிடித்து,

”இங்க பாரு… இது ஒனக்கு பொறகு தா புரியும்… பிளீஸ் புரிஞ்சு நடந்து கோ…” உறுதியாகக் கூறியவனை கேள்விப் பார்வை கொண்டு நோக்கினாள்.

”ஆ… பவித்ரா… அக்கா தூங்க போறா… பாத்துக…. கவனம் நாங்க நாளேகாலேல வாரோம்….” லட்சுமி அவளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு சென்றவர்களை வழியனுப்ப கதவு வரை சென்றவளை வினோத் திரும்பிப் பார்த்து ”பவித்ரா… நா சொன்ன விசயதுகல்ல கவனமாயிரு…. பாய்…”

‘மீண்டும், மீண்டும் அதையே நினைவூட்டுகிறானே?என்ன மர்மம் அதில்…’ குழப்பத்துடன் கார் செல்லும் திசையை பார்த்துக் கொண்டிருந்தாள் .

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

கதவு தட்டப்படும் ஓசை கேட்டவள் அவசரமாக தொலை பேசியை மறைத்து வைத்து விட்டு ஓடினாள். ” சி… சின்னக்கா… நீங்களா?” இடுப்பில் கைகளை கட்டியபடி அவளை கோபத்துடன் நோக்கி, ”என்ன பண்ற நீ? எவ்ளோ…

கதவு தட்டப்படும் ஓசை கேட்டவள் அவசரமாக தொலை பேசியை மறைத்து வைத்து விட்டு ஓடினாள். ” சி… சின்னக்கா… நீங்களா?” இடுப்பில் கைகளை கட்டியபடி அவளை கோபத்துடன் நோக்கி, ”என்ன பண்ற நீ? எவ்ளோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *