ஈமானிய சொந்தங்களே! விரைந்திடுவோம்

சோதனைகள் பல தாண்டி
சாதனைகள் நாம் படைக்க
வையகத்தின் பொறுப்பாளன்
திறந்து விட்டான்-வாசல் பல

ஈமானில் இழப்பின்றி
இம்மியளவும் பிசகின்றி
படைத்தவன் அல்லாஹ்விடம்
பாரமதை நாம் சாட்டி
பண்பாட்டு மானிடராய்
வாழ்ந்திடவே முயன்றிடுவோம்

பட்டம் பல நாம் பெற்று
பதவி மோகம் நாம் கொண்டு
அமானிதங்கள் நாம் மறந்து
அர்த்தமற்ற வாழ்வுதனை
வாழ்வதுதான் ஏற்றதுவோ???

சிற்றின்ப உலகமதில்
சிறப்பான வாழ்வுதனை
சிதறாமல் நாம் காத்து
அருளாளன் அல்லாஹ்வின்
அளப்பரிய கூலிதனை
அடைந்திடவே விரைந்திடுவோம்

J.Noorul shifa
2 nd Year
SEUSL

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: