புன்னகை வேலி

தோட்டாக்களின் சத்தத்தில்
தொலைந்து போனது
என் புன்னகை தேசம்
தேடுகிறேன் இணையத்தில் இன்று

உதடுகள் எல்லாமே ஊமையாகி விட்டது
உதிரம் எல்லாம் உறைந்து விட்டது
கண்ணீர் எல்லாம் வற்றி விட்டது
சொந்தம் இன்றி அநாதையாகி விட்டேன்

பூங்காவனம் என்று என் தாய்ப்பூமியை நம்பியதிற்கு
தலைத்தெறிக்க சிதற ஓடக் கண்டேன்
இதுதானா என் தேசம் என்று
உள்ளுக்குள் பேசிக்கொள்கிறேன்
யாரோ தவற விட்ட பித்தளை பாத்திரத்தோடு இன்று

முள்வேலிக்குள் கைதியாய் நான்
இதுதான் என் அரண்மனையோ
என் தேசத்தின் பரிசளிப்போ
ஏக்கத்தோடு ஊற்று பார்க்கிறேன்
புதியாய் போடப்பட்ட முள்வேலியை

சிறுபான்மையின் குருதியில் உதித்தவன்
என்பதால் என்னவோ
சிதறிய கண்ணாடித்துண்டுகளை
நெஞ்சிலே கீறி கிழித்து பார்க்கிறேன்
உதிரம் கொடுத்து உறவுகளை மீட்க

என் தேசத்தின் விடியலுக்காய்
என் சிறுபான்மையின் வேலிக்குள்
புன்னகை பூக்கள் மலராதா
என்ற வேட்கையோடு
தனிமையில் கடற்கரையின்
ஓரத்தில் நான்

அனுகவி றிப்கான்.
அட்டாளைச்சேனை-06

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: