அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 02

  • 10

“பல வருடங்களுக்கு முன்னாடி நம்ம ராணிக்கி ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தார்கள்.” என்று மாஸ்டர் சொல்ல கியோன் வாயை பிளந்து கொண்டு,

“என்னது நா….லா…”என்று கேட்டுக்கொண்டே மயங்கி விழாத குறை.

நாகடோ என்கிற ஆண்குழந்தையும், கோரின், நயோமி, அலீஸியா என்கிற மூன்று பெண்குழந்தைகளுமே அவர்கள். பலவருசங்களா ராணிக்கு குழந்தைகளே இல்லை. அதனால ராணி கடுமையாக தவம் இருந்தாங்க. விதிப்படி டிராகன் ஷாடோ உலகத்தில் பிறக்க வேண்டிய இந்த சக்திவாய்ந்த நான்கு குழந்தைகளும் மஹாரானியின் தவப்பலனாக நம்ம கான்மன் உலகத்தில் பிறந்தார்கள். இதனால தங்கள் உலகத்துக்கு கிடைக்க வேண்டிய இவங்க வேறு உலகத்தில் பிறந்து விட்ட கோபத்தில் நிழல் தேவதைகள் ராஜா பீட்டர் மேல ஆத்திரப்பட்டு ட்ராகன்களை அனுப்பி தாக்க ஆரம்பிச்சாங்க. எங்கே தன்னோட குழந்தைகளுக்கு ஆபத்து வந்திடுமோ என்று பயந்த ராஜா. அப்பதான் பிறந்த அந்த நான்கு குழந்தைகளையும் வெவ்வேறு உலகங்களுக்கு அனுப்பி விட்டார். அவரோட அந்த முயற்சி தோல்வியுற்று அலீஸியா மட்டும் பூமியில் மாட்டி கொள்ள மற்றவர்கள் நம்ம உலகத்திலேயே வெவ்வேறு இடங்களுக்கு சென்று சேர்ந்து விட்டனர்.

“அது எப்படி இளவரசி அலீஸியா மட்டும் பூமியில்.” என ரியூகி கேட்டான்.

“மந்திர சக்திகளோட குழப்பம் தான் இதுக்கெல்லாம் காரணம். நாலு பேர்லயும் அதி சக்தி வாய்ந்தது அவதான் இந்த கான்மன் உலகம் பேரழிவை சந்திக்கிற நாள் நெருக்கிட்டு அதை எல்லாம் சரி பண்ணுற சக்தி அலீஸியாக்கு தான் உண்டு.”

“ஒஹ்ஹ்..”

“அவளுக்கு அவ யாருன்னு தெரியாது. ஆனா அவளை வெச்சு தான் மத்த மூவரையும் ஒண்ணு சேர்க்க முடியும். அதுக்கு முதலில் அலீஸியாவை கண்டுபிடிக்கணும்.” என்றார் மாஸ்டர் ஷா.

“கதை எல்லாம் நல்லா தான் இருக்கு… ஆனா யாரு இப்போ அவங்கள கண்டுபிடிக்குறது..?” என்று கேட்டான் லீவு.

“இவ்வளவு நாள் உனக்கு பயிற்சி கொடுத்தது எதுக்காக என்னு நினைக்கிறே அவளை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு உன்னோடது தான்.” என்றார்.

“என்னது நானா????”

“கியோனும் உனக்கூடதான் வரப்போறான்..”என்றதும். கியோன்.

“ஆள விடுங்க மாஸ்டர் என்னால முடியாது.” என்று ஓடப்பார்க்க அவனை இழுத்து நிறுத்தினான் ரியூகி.

“நீ தயார் தானே ரியூகி…”

“கண்டிப்பா மாஸ்டர் நம்ம கான்மன் உலகத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்” என்றான்.

“என்ன படுகுழியில் தள்ளுறதுக்கு ரெண்டு பேரும் திட்டம் போடுறீங்க என்னு புரியுது.. அவ்…..” என்றான் கியோன்.

“பேசாம வாடா… பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யணும்…” என்று கூறி ரியூகி அவனை இழுத்து கொண்டு செல்ல. மாஸ்டர் ஷா இருவரையும் பார்த்து சிரித்தார்.

பூமியில்……

அலைஸ் ஓடிக்கொண்டு இருக்கிறாள். அவளை யாரோ கத்தியால் குத்த  துரத்தி கொண்டிருந்தார்கள்.

“பிலீஸ் ஹெல்ப் மீ…ஹெல்ப் மீ..” திடீரென அவளை துரத்தியவன் முன்னாடி வந்து நின்றான். அவளும் ஆஹ் என்ற அலறலோடு கத்திகொண்டே எழும்பினாள்.

“அடிப்பாவி எதுக்கு டி இப்படி கத்திக்கிட்டே எங்களை தூங்காவிடாம பண்ணினே” என எமிலி எழுந்து கேட்டாள்.

“நாங்களே அலாரம் வெச்சாலும் இப்படி எழும்ப மாட்டோம்… மாலுக்கு போகணும் என்கிறதுக்காக இப்படியா பண்ணுவே.” என்றாள் ஹாரூஹி.

“ஸாரி டி…”

“உன் ஸாரி யை தூக்கி குப்பைல போடு…”

எல்லோரும் எழுந்து ரெடி ஆகி ஷாப்பிங் மால் செல்ல தயாரானார்கள். அலைசும் அங்கு பகுதிநேரமாக வேலை செய்து கொண்டே படிக்கிறாள். எல்லோரும் அந்த வீட்டில் வாடகைக்கு தங்கி இருப்பவர்கள். அலைஸ் எப்படி இங்கு வந்தாள் என்பதே மறந்து போகும் அளவுக்கு சிறுவயது நண்பிகள் இவர்கள். அவளை பொறுத்தவரை அவள் ஒரு அனாதை. தன்னை தத்து எடுத்தவர்கள் போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டு நழுவி விட்டார்கள். இனி சுயமாக வாழும் காலம். அவ்வளவு தான்.

போகிறவழியில் எமிலியின் காதலன் ஈதன் வரவே அவள் நைசாக ரோட்டுக்கு அந்த புறம் மாறிவிட்டாள். “பார்த்துடி பத்திரம்…”என இவர்கள் கிண்டல் செய்தாள் மீஸா… அவள் வேலையே எப்போதும் எல்லோரையும் கிண்டல் செய்வது.

ஹாரூஹி சுட்டித்தனமான சீரியஸான பெண்.  எமிலி ஒரு சாது….

“அவளை ஏண்டி சீண்டுரே. சும்மா இருவேன். கொஞ்ச நேரம்..” என அலைஸ் கேட்டாள்.

“சும்மா இருக்குற கூட்டணியா டி நீங்க எல்லாம்.” என்றாள் மீஸா.

“ஓகே டி நான் காலேஜ் போய்ட்டு ஈவினிங் வந்து ஜோய்ன் பண்ணிக்கிறேன்.” என்று விட்டு அலைஸ் காலேஜுக்கும் மற்றவர்கள் கடைத் தொகுதிக்குள்ளும் நுழைந்தார்கள்.

தொடரும்…….
ALF. Sanfara.

“பல வருடங்களுக்கு முன்னாடி நம்ம ராணிக்கி ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தார்கள்.” என்று மாஸ்டர் சொல்ல கியோன் வாயை பிளந்து கொண்டு, “என்னது நா….லா…”என்று கேட்டுக்கொண்டே மயங்கி விழாத குறை. நாகடோ என்கிற…

“பல வருடங்களுக்கு முன்னாடி நம்ம ராணிக்கி ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தார்கள்.” என்று மாஸ்டர் சொல்ல கியோன் வாயை பிளந்து கொண்டு, “என்னது நா….லா…”என்று கேட்டுக்கொண்டே மயங்கி விழாத குறை. நாகடோ என்கிற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *