காதலே ஜெயம்

  • 10

பொய்க்காதல் வலம்வரும் இந்நாட்களிலே
மெய்க்காதல் ஒன்று நான் சொல்லவா?

பொய்யன்பே போற்றப்படும் இந்நாட்களிலே
மெய்யன்பு எதுவென நான் காட்டவா?

பனி அடர்ந்த தஹஜ்ஜத் பொழுதொன்றில்
குளிர் தாங்கிப் போர்வையில்
மிதமான கொஞ்சம் சூடுதனில்
மனதிற்கு இதமான பஞ்சணையில்

நிம்மதியான தூக்கத்தில்
மனம் ஒப்பும் ஓர் கனவுலகில்
மிதந்து கொண்டிருக்கையில்

எம் றப்பு வரும் வேளையாகியதை
உள்ளத்தால் உணர்ந்து
எம் றப்புக்காய் அந்த
அதிகாலை தூக்க சுகம் துறந்து

குளுகுளு வெண்பணியில்
ஜில்லென்ற காற்றோடு
கொஞ்சம் உடல் நடுங்க வுளு செய்து
சஜதாவில் வீழ்ந்து பார்

அங்கே கிடைக்கும் உனதான
மெய்க்காதல்
அதுவே இறைக்காதல்

ஜில்லென்ற தென்றல்
மெல்லென மேனிதனை
வருடிச் செல்ல
அழகிய காலையொன்றிலே
எம் றப்பை நினைத்து
அவனை துதித்துக் கொண்டிருக்கையில்

கீச்… கீச்.. பறவைக் கீதம்
குக்கூ… குக்கூ… குயிலிசை
மெல்லென சலனமற்று இதழ்விரிக்கும் மொட்டுக்கள்

இவை கண்டு பூரித்து
ஸுபஹானல்லாஹ் என
தன்னை அறியாமலே நம்
இதழ்கள் விரிந்து றப்பினை
துதி செய்யும் போது

வானில் எம் றப்பு
தன் மலக்குகளிடம் எம்பெயர்
சொல்லி புகழாரம் பாடுகிறானே
அந்நொடி அவன் நம்மேல் கொள்வது
மெய்யன்பு

அதுவே கொள்ளையழகு
அல்ஹம்துலில்லாஹ்

Sheefa Ibraheem Hudhaaiyah
Maruthamunai
SEUSL
3rd Year
FIA

பொய்க்காதல் வலம்வரும் இந்நாட்களிலே மெய்க்காதல் ஒன்று நான் சொல்லவா? பொய்யன்பே போற்றப்படும் இந்நாட்களிலே மெய்யன்பு எதுவென நான் காட்டவா? பனி அடர்ந்த தஹஜ்ஜத் பொழுதொன்றில் குளிர் தாங்கிப் போர்வையில் மிதமான கொஞ்சம் சூடுதனில் மனதிற்கு…

பொய்க்காதல் வலம்வரும் இந்நாட்களிலே மெய்க்காதல் ஒன்று நான் சொல்லவா? பொய்யன்பே போற்றப்படும் இந்நாட்களிலே மெய்யன்பு எதுவென நான் காட்டவா? பனி அடர்ந்த தஹஜ்ஜத் பொழுதொன்றில் குளிர் தாங்கிப் போர்வையில் மிதமான கொஞ்சம் சூடுதனில் மனதிற்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *