காந்தக் குரலான் தந்த சோகம்!

வான் அலைகளில் தவழ்ந்து வந்த குரல்களில் சிரேஷ்டம் உங்கள் குரல்!
பல இள நெஞ்சங்களுக்கு
முன்னுதாரனமும் கூடவே!

அறிவுக் களஞ்சியம் என்றாலே
மனதில் பூப்பது உங்கள் பெயர் தானே!
உங்கள் பெயரைத் தப்பாமலே
ஏ.ஆர்.எம். ஜிப்ரி என
முதலெழுத்துக்களுடன் அல்லவா
அனைவரும் உச்சரிக்கின்றனர்!
இதிலேயே புரிகிறது
நீங்கள் மக்கள் மனதில்
எத்தனை ஆழமாய்
பதிந்து விட்டீர்கள் என்று!

ஊடகத்துறை என்ன
அறிவிப்புத்துறை என்ன
கல்வித் துறை என்ன
அனைத்திலும் உங்கள்
பெயரை பதித்து விட்டீர்கள்!

அதனால் தானே
உங்கள் பிரிவில் முழு தாய் நாடும்
இன்று கண்ணீர் வடிக்கிறது!
எங்களைக் கண்ணீரில் மிதக்க விட்டு
விடையும் பெற்று விட்டீர்கள்!

காந்தக் குரலான்
கம்பீர உடலான்
என்ன ஆனது உங்களுக்கு!
உங்கள் அழகிய புன்னகையில்
மலர்ந்த எங்கள் உள்ளங்கள்
உங்கள் பிரிவைக் கேட்ட மறுகணமே
வாடி வதங்கி விட்டது!
எங்கும் அமைதி நிலவுகிறது!
எங்கும் மயானமாய்த் தோன்றுகிறது!

வாழ்வில் ஒரே ஒரு தரம்
ஆளுனர் அலுவலகத்தில்
ஆளுமை மிக்க ஆளாக
ஆணவமில்லா மனிதராக
உங்களைக் கண்டதில் ஆனந்தம்!
ஓரிரு வார்த்தைகள் பேசி
விடைபெற்றோம் அன்று!
இன்று உங்கள் நிரந்தர பிரியாவிடை..!

உங்கள் இழப்பில் பிரிவில்
முகநூல் முழுதும் உங்கள் செய்தியாகவே
கண்ணீர் சிந்துகின்றது கவலையில்!

சோதரா,
இறைவன் உங்களை
உங்கள் சேவையை இறைவன்
பொருந்திக் கொள்ளட்டும்!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
SLPS:2
பஸ்யால

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: