அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 06

  • 7

எந்த இடத்தில் இருந்து ஆரம்பித்தார்களோ அங்கு வந்து சேர்ந்தார்கள் மூவரும். அலைஸ் ஒரு கணம் தயங்கினாள்.

“என்ன?”

“என்னோட நண்பிகள்!!!”

“இளவரசி! நீங்க உங்க நண்பர்கள் நாலு பேரை யோசிக்குறீங்க… ஆனா ஒரு முழு உலகமே உங்களுக்காக அங்க காத்துகிட்டு இருக்கு.. அதை யோசிச்சு பாருங்க.”

என்றான் ரியூகி. சற்று நேரம் யோசித்த அலைஸ். மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி கொண்டு ரியூகி கிட்ட,

“உங்க பேரு ரியூகி சரியா?”

“ரொம்ப சரி”

“அப்போ ரியூகி.. நாம எப்படி இப்போ கான்மன் உலகத்துக்கு போக போறோம்…?”

என்று கேட்க இருவரும் முழித்தனர். அவர்களுக்கும் எப்படி போவதென தெரியாதே…

“என்ன எதுவும் பேசாமல் இருக்குறீங்க?”

“அ… அத்துவந்து மாஸ்டர் ஷா எங்களை அனுப்பி விட்டார். அதுவும் ஒரு கண்ணாடி வழியாக… இப்போ ….” என்றான் கியோன்.

“என்ன! இவ்வளவு தூரம் வந்துட்டு இப்போ போறதுக்கு வழி தெரியாதுன்னா என்ன அர்த்தம். போங்கடா நீங்களும் உங்க கதையும்…”

என்று கோபித்து கொண்டு திரும்பி செல்ல பார்த்தாள். உடனே ஒரு மந்திர புயல் கதவு உருவானது அது மூவரையும் சட்டென உள்வாங்கி இழுத்து கொண்டது.

“ஆஹ்ஹ்…..”

மனித உலகில் போர்டல் மறைந்தது. கான்மன் உலகில் கதவு திறந்து மூவரும் ஒரு புல்வெளியில் போய் விழுந்தார்கள். காற்றின் ஆர்ப்பாட்டம் அடங்கியதும் கண்ணை விழித்து பார்த்தார்கள் .அலைஸ் ரியூகி மீது விழுந்து கிடந்தாள். இருவரும் கத்திகொண்டே எழும்பினார்கள்.

“க்கும்..” என்று தொண்டையை செருமிக்கொண்டே ரியூகி…..

“வெல்கம் டு த கான்மன் வேர்ல்ட். பிரின்ஸஸ்” என்று அவளை வரவேற்றான்.

சுற்றி இருந்த இயற்கை அழகில் மூழ்கிப்போய் இருந்த அலீஸியா… ரியூகியின் வரவேற்பை அடுத்து…

“ஓஹ்…முதலில் பிரின்ஸஸ் என்னு கூப்பிடுவதை நிறுத்துங்க….. ஜஸ்ட் கோல் மீ அலைஸ்..” என்றாள்.

“ஆ.. அதெல்லாம் கிடையாது நான் பிரின்ஸஸ் என்னு தான் கூப்பிடுவேன்..” என்றான் கியோன்.

“அலைஸ்! ரெடியா… உங்க அப்பா அம்மா. உங்களுக்காக காத்திருக்காங்க…”

என்று சொல்ல ஒரு மென்சிரிப்புடன் அலைஸ் ரியூகி மற்றும் கியோனை பின் தொடர்ந்தாள். வெகு நேரமாக நடந்து அவர்கள் சந்தைப்பகுதிக்குள் நுழைந்தனர். அங்கிருந்த மக்கள் அலைசை ஒருமாதிரி திரும்பி திரும்பி பார்த்தார்கள். அப்போது கியோன் என்று யாரோ கூப்பிடுவது கேட்டு திரும்பினான் கியோன். அது அவனது அக்கா சொய்.

“டேய்  ரெண்டு நாளா எங்கடா போய் தொலைஞ்சே…. இந்த இடம் பூரா தேடிட்டேன்…”

என்று கத்தி கொண்டே வந்தாள்.

“அது சரி யார் இந்த பொண்ணு… இவ என்ன இப்படி ஆடை….”

என்று பேச்சை நீட்டுவதற்குள் கியோன் முந்திக்கொண்டு அக்காவை மூன்று அடி தள்ளி இழுத்து கொண்டு மெல்ல..

“அட லூசு.. இது நம்மளோட பிரின்ஸஸ்… மனித உலகத்தில் இருந்து அழைச்சிட்டு வந்திருக்கோம்… மாஸ்டர் ஷா அனுப்பி வைத்தார்… அதனால கத்தி கலாட்டா பண்ணிடாதே.”

என்றான்.

“என்ன பிரின்சஸா….!!”

“ஸ்… வாயை பிளக்காம போய் மன்னிப்பு கேளு..” என்றதும் ஓடிப்போய் அலைஸிடம்

“என்ன மன்னிச்சிடுங்க இளவரசி… நான் ஏதோ தெரியாம…” என்று சொய் தயங்கினாள்.

“எதுக்கு ஸாரி…பரவாயில்லை. விடுங்க …” என்றாள்.

“சரி.. நாங்க அரண்மனைக்கு போகணும். கூடிய சீக்கிரம் உங்களை மறுபடியும் சந்திக்கிறோம்.” என்று ரியூகி புறப்பட கியோன் மறுபடி அக்காவிடம் வந்து.

“இளவரசி நாட்டுக்கு வந்திருக்கிற விஷயத்தை இப்போதைக்கு யாருக்கும் சொல்லிடாதே… புரியுதா?” என்று சொல்ல…

“புரியுது புரியுது..”என்று சொல்லி சொய் இவர்களை வழி அனுப்பி வைத்தாள்.

*****************************************************************************************

நிழல் தேவதைகள் உலகில்

“மன்னர் சோஜோ…!”

“என்ன விஷயம் போபி?”

“புது செய்தி ஒண்ணு கிடைச்சி இருக்கு… நம்ம இளவரசி அலீஸியா இப்போ இங்க தான் இருக்காங்க..?” என்றான்.

“என்னது!”

“ஆமா அரசே… உண்மையான தகவல் டிராகன் மூலமா அறிஞ்சி கொண்டோம்.”

“அப்போ இன்னும் எதுக்குடா நிக்குறே… போ போய்… அலீஸியாவ தூக்கிட்டு வாங்க…” என்றான் அந்த அரசன் சோஜோ

தொடரும்…….
ALF. Sanfara.

எந்த இடத்தில் இருந்து ஆரம்பித்தார்களோ அங்கு வந்து சேர்ந்தார்கள் மூவரும். அலைஸ் ஒரு கணம் தயங்கினாள். “என்ன?” “என்னோட நண்பிகள்!!!” “இளவரசி! நீங்க உங்க நண்பர்கள் நாலு பேரை யோசிக்குறீங்க… ஆனா ஒரு முழு…

எந்த இடத்தில் இருந்து ஆரம்பித்தார்களோ அங்கு வந்து சேர்ந்தார்கள் மூவரும். அலைஸ் ஒரு கணம் தயங்கினாள். “என்ன?” “என்னோட நண்பிகள்!!!” “இளவரசி! நீங்க உங்க நண்பர்கள் நாலு பேரை யோசிக்குறீங்க… ஆனா ஒரு முழு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *