மனிதம்

  • 55

இயலுமையில் பிரிந்தாலும்
இயலாமையில் பிரிந்தாலும்
இயற்கையில் யாமெல்லாம் மானுடரே

பண்பிலே பகைத்தாலும்
பணத்திலே பகைந்தாலும்
பக்குவத்தில் யாமெல்லாம் மானுடரே

மொழியாலே தாழ்ந்தாலும்
மதத்தாலே உயர்ந்தாலும்
குணத்தாலே யாமெல்லாம் மானுடரே

நிறத்திலே பிரிந்திருந்தும்
நிஜத்திலே பிரிந்திருந்தும்
உணர்விலே யாமெல்லாம் மானுடரே

பல கோடி வீதி
சில நேரம் மோதி
பரிதாப நீதி இங்குண்டு
சில நேரம் குழப்பம்
பல நேரம் சண்டை
சில்லறைச் சல்லடைகளும் இங்குண்டு

அரசியல் அடிதடி
அரசாங்க குளறுபடி
அடுத்த தெருவில் குண்டுவெடி
அந்தியில் தீப்பொறி

அத்தனையும் இங்குண்டு
ஆனாலும் அறுந்திடாது
ஆணிவேராய் ஒன்றிணைவோம்
மனிதம் போற்றிய மானுடனாய்

யாரென்றால் உனக்கென்ன
போரென்றால் எமக்கென்ன
சேர்ந்தேதான் நிற்போம்
எதிரி பதற
தலையும் சிதற
விரட்டியடிப்போம்!
ஒற்றுமைக்காய் வேற்றுமையை
புரட்டியெடுப்போம்!

பார்த்தாலோ சிறுதுளி – யாம்
மானுட பாசத்தால் பெருங்கடலல்லோ

நீ பெளத்தன்
நீ இந்து
நீ முஸ்லிம்
நீ கிறிஸ்தவன்
தனித்து நில்லென்பீரோ
தயங்காமல்
தம்மட்டமடிக்கிறோம்
யாமெல்லாம் மனிதம்
போற்றிய மானுடனென்று

நீ பெரு விரல்
நீ ஆட்காட்டி விரல்
நீ நடு விரல்
நீ மோதிர விரல்
நீ சின்ன விரல்
பிரிந்தே செயலாற்றோன்று
கையிடம் கூறத்தான் இயலுமா?

மறவாதே
மயங்காதே
மறையாதே
மறைக்காதே
எது எப்படியோ
எவர் எப்படியோ
எங்கும் என்றும் யாமெல்லாம்
மனிதம் போற்றிய மானுடரே!!!

Sheefa Ibraheem (Hudhaaiyyah)
Maruthamunai
SEUSL

இயலுமையில் பிரிந்தாலும் இயலாமையில் பிரிந்தாலும் இயற்கையில் யாமெல்லாம் மானுடரே பண்பிலே பகைத்தாலும் பணத்திலே பகைந்தாலும் பக்குவத்தில் யாமெல்லாம் மானுடரே மொழியாலே தாழ்ந்தாலும் மதத்தாலே உயர்ந்தாலும் குணத்தாலே யாமெல்லாம் மானுடரே நிறத்திலே பிரிந்திருந்தும் நிஜத்திலே பிரிந்திருந்தும்…

இயலுமையில் பிரிந்தாலும் இயலாமையில் பிரிந்தாலும் இயற்கையில் யாமெல்லாம் மானுடரே பண்பிலே பகைத்தாலும் பணத்திலே பகைந்தாலும் பக்குவத்தில் யாமெல்லாம் மானுடரே மொழியாலே தாழ்ந்தாலும் மதத்தாலே உயர்ந்தாலும் குணத்தாலே யாமெல்லாம் மானுடரே நிறத்திலே பிரிந்திருந்தும் நிஜத்திலே பிரிந்திருந்தும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *