முன்மாதிரிமிக்க குடும்பம்

  • 10

“அல்லாஹ்வினால் மனிதனுக்கு அருளப்பட்ட மிக முக்கிய அருட்கொடைகளில் ஒன்றே குடும்பமாகும்.”

இவ்வுலகில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் குடும்பம் எனும் வட்டத்திற்குள் வராமல் இருக்க முடியாது. சமூக அமைப்பின் மூலக்கருவே குடும்பம் தான் எனும் அளவுக்கு குடும்பவியல் பற்றிய கருத்தியல் நோக்கப்படுகின்றது.

‘ஒரு சமூகத்தின் வீழ்ச்சியும், எழுச்சியும் குடும்பத்திலேயே தங்கியுள்ளது என கூறுவது மிகையல்ல’. வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது ஆரம்ப காலங்களில் தோற்றம் பெற்ற பல நாகரிகங்கள் காலத்தால் அழிந்து போயின. ஆனால் இஸ்லாமியர்கள் மாத்திரமே காலத்தால் அழியாமல் இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். இதற்கு பிரதான காரணமாக சீரான குடும்ப அமைப்பை கூறலாம். ‘இந்தக் குடும்பம் சீராக செயற்படும் போது சமூக சீர்திருத்தம் நிலைத்திருக்கவும் செய்யும்.

‘எந்தக் குடும்பம் துரிதமாகச் செயற்படுகின்றதோ அந்த குடும்பத்தில் இருந்தே ஆளுமைமிக்க புத்திஜீவிகளை சமூகத்திற்கு பிரசவிக்க முடியும்.’

மனிதனாக பிறக்கின்றவர்கள் குடும்பமாக வாழ்வது இயல்பாகும். அதிலும் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி வாழ்வது சிறப்பியல்பாகும்.

இஸ்லாமிய குடும்பத்தை உருவாக்கும் போது திருமணத்திற்கு முன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக செயல்பட வேண்டும் ஏனெனில் “உலகம் அனைத்தும் இன்பமானது அதில் சிறந்தது நற்குணமுள்ள மனைவியே” (முஸ்லிம்)

“நேர்மையான மனைவியானவள் இந்த உலக வாழ்க்கையிலும், ஆன்மீகத்துறையிலும் தன் கணவனுக்கு உதவக்கூடியவளாக இருப்பாள்.” அத்தகையவளே ஒருவன் பெற்றுக்கொண்ட அருட்கொடைகளில் சிறந்த அருட்கொடையாகும்.” (பைஹகி)

அதே போல் ஒரு பெண் கணவனை தேர்ந்தெடுப்பதிலும் சுதந்திரம் வழங்கியுள்ளது. என்றாலும் “மார்க்கமுள்ள, நற்குணமுள்ள ஒருவனை தேர்ந்தெடுப்பதிலே அவளின் சகல விடயங்களிலும் வெற்றியை தீர்மானிக்கும்.”

இவ்வாறு ஒரு குடும்பம் சிறந்த கணவன், மனைவியையும் கொண்டிருக்கின்ற போது சமூக மாற்றத்தின் ஆரம்ப புள்ளியை அந்த குடும்பம் இடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

எனவே குடும்பம் சீரான சிந்தனையுடன் செயற்படும்போதே குழந்தைகளும் அதே பாணியில் வாழப்பழகிக்கொள்வார்கள்.

பிள்ளைகளை சமூகத்திற்காக, மார்க்கத்திற்காக, சேவை செய்யும், தியாகம் செய்யும் பிள்ளைகளாக வளர்த்தல். தானும், கணவன் என்று பார்க்காது பிள்ளைகளை பயிற்றுவித்தல்.

இன்று பிள்ளைகளை வளர்க்கிறோம் என்ற பெயரில் வளரவிடுகிறோம். பிள்ளைகளை வளரவிடக்கூடாது. வளர்க்கவேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பிள்ளை வயிற்றில் இருக்கின்ற போதே நாடகம், சினிமா, ஆடல் பாடல் என்று மூழ்கிக்கிடக்கிறார்கள். இதுவே பிறந்தவுடன்
வாழ்க்கையில் தாக்கம்செலுத்துகின்றது.

‘இதனாலேயே நபி (ஸல்) அவர்கள் மார்க்கமுள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க சொன்னார்கள்’.

சமூக சேவையில் ஈடுபடும் கணவன்மார்களுக்கு கதீஜா ரலி போன்ற மனைவி கிடைப்பது அருளாகும். ஏனெனில் கதீஜா (ரலி) நபி (ஸல்) அவர்களுக்கு ஆதரவாக, அன்பாக, பிள்ளைகளை சிறந்த முறையில் வளர்ப்பதிலும் முன்மாதிரிமிக்க பெண்ணாக திகழ்ந்தார்கள்.

வரலாற்று சம்பவங்களை கூறப்போனால் கூறிக்கொண்டே போகலாம் அந்த அளவு முன்மாதிரியான துணைவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.

எனவே பொதுவாக கூறப்போனால் கணவன், மனைவிமார்கள் சிறந்தவர்களாக திகழ்ந்து பிள்ளைகளையும் சிறந்த முறையில் பயிற்றுவித்து சமூக சீர்திருத்தப்பணியில் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் மூலம் நான் கூறவிரும்புகிறேன்.

Faslan Hashim
Islahiyya Arabic collage ®
South Eastern University of Sri Lanka.
BA ®

“அல்லாஹ்வினால் மனிதனுக்கு அருளப்பட்ட மிக முக்கிய அருட்கொடைகளில் ஒன்றே குடும்பமாகும்.” இவ்வுலகில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் குடும்பம் எனும் வட்டத்திற்குள் வராமல் இருக்க முடியாது. சமூக அமைப்பின் மூலக்கருவே குடும்பம் தான் எனும் அளவுக்கு…

“அல்லாஹ்வினால் மனிதனுக்கு அருளப்பட்ட மிக முக்கிய அருட்கொடைகளில் ஒன்றே குடும்பமாகும்.” இவ்வுலகில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் குடும்பம் எனும் வட்டத்திற்குள் வராமல் இருக்க முடியாது. சமூக அமைப்பின் மூலக்கருவே குடும்பம் தான் எனும் அளவுக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *