தொழுகை

  • 69

போர்முனையில் அல்ல
உன் தீன்முனையில்
வேன்றிடு இவ்வுலகை

நீ போர் களத்தில்
இருந்தாலும் விடாது
தொழுதிடு ஐய்வேளை
தொழுகையை

ஐந்து கடமைகளை நம்
மீது வல்ல அல்லாஹ்
கடமையாக்கிய போதும்
உன் சக்கராத் வேதனையிலும்
தொழுதிடு என்றான்

உன் மன்னரையை
பொன்னாரையாய் மாற்ற
தொழுகை ஒன்று  போதுமே.

ஏழை பணம் படைத்தோன்
முதுமையை கண்டோர்
வாலிபத்தில் ஊஞ்சல்
ஆடுவோர் என அத்தனை
பேருக்கும் ஒட்டுமொத்த
உலகத்திக்கும் கடமையானது
இந்த தொழுகை மட்டுமே

உன் அலட்சிய போக்கில்
நீ விட்டு விடும் ஒவ்வொரு
தொழுகையும் உன்
வாழ்வில் நீ இழக்கும்
மீண்டும் உனக்கு கிடைத்திடாத
மிக பெரிய பொக்கிஷங்கள்.

இவ்வுலகில் எத்தனை
சிறப்போடு வாழ்ந்தாலும்
தொழுகை உன்
வாழ்வில் அலங்கரித்
விடவில்லை என்றால்
உனக்கு தோல்விதான்

உன் தாய் தன் ஒற்றை
சேலையில் கட்டித்தந்த
தொட்டில் வீட்டின்
சுகம் உன் மண்ணறையில்
வேண்டுமா தினமும்
ஒரு வேளை தொழுகையை
விட்டுவிடு விடாமல்
நீ தொழுதிடு

தொழுகைக்காய் நீ
செலவிடும் ஒவ்வொரு
நொடியும் இம்மையில்
உன்னை நஷ்டம்
வந்தடைந்தாலும்
மறுமையில் உனக்காய்
காத்திருக்கும் நீ
இவ்வுலகில் எத்தனை
நவருடம் சம்பாதித்தாலும்
கிடைக்காத இலாபம்.

அதான் உன் காதில்
ஒழித்தால் உன் வாழ்வில்
உள்ள அத்னையையும்
புறம் தள்ளி விட்டு
சென்றிடு தொழுகைக்காய்.

தொழுகைக்காய் இம்மையில்
நீ செலவு செய்யும்
ஒவ்வொரு நொடியும்
உன் மறுமையின்
வெற்றியாய் ஜன்னத்துல்
பிர்தௌஸ்ஷய் அடைய என்று மறவாது.

அல்லாஹ்வின் அடிமை
அக்குரணை லஷாட்

போர்முனையில் அல்ல உன் தீன்முனையில் வேன்றிடு இவ்வுலகை நீ போர் களத்தில் இருந்தாலும் விடாது தொழுதிடு ஐய்வேளை தொழுகையை ஐந்து கடமைகளை நம் மீது வல்ல அல்லாஹ் கடமையாக்கிய போதும் உன் சக்கராத் வேதனையிலும்…

போர்முனையில் அல்ல உன் தீன்முனையில் வேன்றிடு இவ்வுலகை நீ போர் களத்தில் இருந்தாலும் விடாது தொழுதிடு ஐய்வேளை தொழுகையை ஐந்து கடமைகளை நம் மீது வல்ல அல்லாஹ் கடமையாக்கிய போதும் உன் சக்கராத் வேதனையிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *