என் கரம் கோர்க்க காத்திருப்பவள்

  • 49

எத்தனையோ உறவுகளின் கை பிடித்து
பூ நடை பழகினேன் உன் கை பிடித்து
நடக்க பூக்கள் துவி பாதை அமைக்கிறேன்

கனவுகளோடு வாழ்ந்தா எனக்கு
நீயே உலகமானய்
உறவுகளோடு கொஞ்சிப் பேசி
வாழ்ந்த உனக்கு
உறவாக காத்திருக்கின்றன்

எனக்கு எத்தனையோ தொட்டில் கட்டி
அழகு பார்த்தானர் உறவுகள்
உனக்கு ஊஞ்சல் கட்டி
என் உதிரத்தால் உருவாகும்
என் குழந்தைக்கு
தொட்டில் கட்ட காத்திருக்கின்றான்

எத்தனையோ இழப்புகளை இழந்து
நீ என்னிடம் வரக் காத்திருக்கின்றய்
அத்தனை இழப்புக்களையும்
மறக்கடிக்க செய்து என் அன்பின்
ஊற்றுகளை அள்ளி கொடுக்க
காத்திருக்கின்றன் உனக்காக

எத்தனையோ பிரச்சினைகளோடு
வீடு திரும்பும் என்னை நீ
அள்ளி அரவணைத்து அன்பால் என்
வாழ்க்கையில் அரத்தம் சேர்த்திடு

நீ தோல்சாய நான் இருப்பேன் தோழனாய்
உன் கண்ணில் நீர் கசியும் போது
உன் தாய் போல் கண்ணீரை துடைக்க
நான் இருப்பேன் தாயாக
உனக்கு அறிவுரை சொல்ல
நான் இருப்பேன் தந்தையாக
நீ செல்லச் சண்டை போட
நான் இருப்பேன் சகோதரனாய்
நீ கொஞ்சி விளையாட
நான் இருப்பேன் குழந்தையாய்

இன்பமோ துன்பமோ இரண்டிலும்
ஒன்று சேர்வோம்
வாழ்க்கை எனும் பாதையில்
என் தவறுகளைக் கண்டிக்க
நீ வேண்டும் உனக்காக
தவறுகள் செய்யாமல்
நான் இருக்க வேண்டும்

இம்மை மறுமை
இரண்டிற்காகவும் வாழ்வோம்
இல்லறத்தில் மூன்று
முடிச்சியில் இணைவோம்
மூச்சுள்ளவரை வாழ்வேம்

கவிதை காதலன்
அக்குரணை லஷாட்

எத்தனையோ உறவுகளின் கை பிடித்து பூ நடை பழகினேன் உன் கை பிடித்து நடக்க பூக்கள் துவி பாதை அமைக்கிறேன் கனவுகளோடு வாழ்ந்தா எனக்கு நீயே உலகமானய் உறவுகளோடு கொஞ்சிப் பேசி வாழ்ந்த உனக்கு…

எத்தனையோ உறவுகளின் கை பிடித்து பூ நடை பழகினேன் உன் கை பிடித்து நடக்க பூக்கள் துவி பாதை அமைக்கிறேன் கனவுகளோடு வாழ்ந்தா எனக்கு நீயே உலகமானய் உறவுகளோடு கொஞ்சிப் பேசி வாழ்ந்த உனக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *