கண்கள் திறந்திடு… கண்ணீர் துடைத்திடு…

  • 17

பெண்ணே! நீ அழுதது போதும்
துடைத்துக் கொள்! கலங்காதே! கரையாதே!

இன்று காலத்தின் தேவை
ஆளுமை மிக்க ஈமானியப் பெண்!
ஆனால் ஈமானுடன் நீ விசித்திரமாய்
ஏதும் செய்து பார் இருப்பார் உன்னை தூற்றும்!

கலங்காதே! நாலுசுவர்களில்
அடங்கி கிடப்பது உன் விதியல்ல
உன் விதியை தேடி பயணிக்க துவங்கு!
உன் விதியை மதி!
இரு கோட்டுக்குள் இச்சமூகம்
உன்னை வழைத்து
உனக்குள் சிறு வட்டம் வரைந்து
உன்னை இருளில் முடக்குகிறதே
இதுவா உன் விதி??? இல்லை…

பெண்ணே! சமூகம் உனக்காய்
பல விடயங்களை வரையறுத்திருக்கும்
அதை மட்டும் நீ செய்தால்
அங்கே மதிக்கப்படுவாய்

உனக்காய் உன்னுள்
நூறு ஆசைகள்
ஆயிரம்இலக்குகள்
லட்சம் எதிர்பார்ப்புகள்
அவற்றை நீ ஒரு பெண்ணாய்
நிறைவேற்ற போனால் தூற்றப்படுவாய் வீழ்த்தப்படுவாய் கலங்காதே

பரவாயில்லை பெண்ணே!
நீ பதிலாக இருப்பதால்
தான் இச்சமூகம் உன்னை
ஆயிரம் கேள்வி கேட்கும்!
குட்டி குனியவைக்கும்
நீயே கேள்வியாய் மாறினால்?
சமூகத்திடம் விடை இருக்காது!

இப்பூமியில் பரந்து திரிந்து
என் அருளைத் தேடிக்கொள்ளுங்கள் என
எம் றப்பு எம்மை பார்த்து அழைக்கிறானே
உன் காதுகளில் விழவில்லையா

இன்னும் கலக்கம் ஏன்?
தயக்கம் ஏன்? மயக்கம் ஏன்?
எழுந்திடு நடந்திடு உன் இலக்கை
நோக்கிடு விரைந்திடு
உலகம் உன்னை இழிக்கட்டும்
உறவுகள் உன்னை ஏளனம் செய்யட்டும்
நட்புக்களும் நம்பிக்கை இழந்து நகர்ந்திடட்டும்.

கலங்காதே! உனக்கு ஆதரவாய்
உன் றப்பு இருக்க
வழிகாட்டியாய் பெருமானாரின்
போதனைகள் இருக்க
உந்நெஞ்சோடு ஈமான் இருக்க
உன்னோடு இஹ்லாஸ் இருக்க

வீண் விமர்சனம் கண்டு
கலங்கலாமா நீ?
இழிந்து பேசுவோர் கண்டு
கரையலாமா நீ?
வன் சொல் கேட்டு வாடினால்
தான் சரியாகுமா
இக்காலத்தின் கோலம்???

எழுந்திடு தடைகளை உடைத்திடு
பெண்கள் சளைத்தவர்களல்லர்
பெண்கள் எல்லாவற்றுக்கும்
கண்ணீர் வடிக்கும் கோழைகளல்லவே
கண்ணீரால் வைரங்கள் செய்திடும்
முத்துக்களல்லவா

Sheefa Ibraheem
Hudhaaiyyah
Maruthamunai
SEUSL FIA

பெண்ணே! நீ அழுதது போதும் துடைத்துக் கொள்! கலங்காதே! கரையாதே! இன்று காலத்தின் தேவை ஆளுமை மிக்க ஈமானியப் பெண்! ஆனால் ஈமானுடன் நீ விசித்திரமாய் ஏதும் செய்து பார் இருப்பார் உன்னை தூற்றும்!…

பெண்ணே! நீ அழுதது போதும் துடைத்துக் கொள்! கலங்காதே! கரையாதே! இன்று காலத்தின் தேவை ஆளுமை மிக்க ஈமானியப் பெண்! ஆனால் ஈமானுடன் நீ விசித்திரமாய் ஏதும் செய்து பார் இருப்பார் உன்னை தூற்றும்!…

One thought on “கண்கள் திறந்திடு… கண்ணீர் துடைத்திடு…

  1. I’ll immediately clutch your rss as I can not find your email subscription hyperlink or e-newsletter service. Do you have any? Kindly allow me realize so that I could subscribe. Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *