நித்யா… அத்தியாயம் -13

  • 10

பவித்ரா துள்ளிக்குதித்து ஓடிப் போய் வந்தவளை கட்டிக்கொண்டாள்.  அவளும் குனிந்து நெற்றியில் முத்தமிட்டவுடன்,

”பெரியக்கா… நீ ரொம்ப அழகாயிருக்கே…  செல்ல…. அக்கா….” மீண்டும் கட்டிக் கொண்டாள்.

”விடுடா…. அக்காவ… உள்ளுக்கு வரட்டும்…” பார்வதி சற்று கடினமாகக் கூறவுமே அவரைப் பார்த்து கல்யாணி,

”சித்தி… என்ன அப்படி சொல்லிட்டீங்க… அவோ இனி அக்கா வாசம் தஞ்சம் தான்…” சிரித்தவளை முறைத்துப் பார்த்து,

”போ… சின்னக்கா நா ஓ கூட பேசுறல்ல…”

”ஹ்ம்… போதும் சண்ட…. அங்க பாரு நீ நின்னுகிட்டே இருக்கே… வா… வாசலுக்கு…”

”சரி.. சித்தி….” புன்முறுவல் பூத்தவாறே பவித்ராவை கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றாள்.

”சரி…சரி… நித்யா… நீ சாப்பிட வா… சீக்கிரம் போ… ஒனக்காகவே ரெண்டும் பட்டனி…” பார்வதி விரட்டவும்,

”ஓ…அப்படியா?  இந்தா வாரன் நான்…”

சிறிது நேரத்தில் சாப்பிட ஆரம்பித்ததுமே சகோதரிகள் ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டனர். திடீரென சாப்பாடு வேண்டாம் என அடம்பிடித்த பவித்ராவை இருவரும் நோக்கியதுமே,

”பெரியக்கா… சின்னக்காவுக்கு ஊட்டிவிடாத… நா அவளோட கோவம்….” சட்டென மற்றவர்கள் சிரிக்கவுமே , மீண்டும்,

”நா சாப்பிட மாட்டேன்….” அடம்பிடித்தவளை ஏதேதோ சொல்லி ஊட்டி விட்டாள் நித்யா.

********************************

பவித்ராவின் மடியில் தலைசாய்த்தவளுக்கு கை ஈரமாவது போலுணர்ந்து அவசரமாக எழுந்தவள் திடுக்கிட்டாள்.

”பவி….பவி…. என்ன நீயும்?” முதுகைத் தடவிய கைகளைப் பற்றிக்கொண்டு,

”அது… நம்ம சின்னவயசுல பெரியக்காகூட ஊட்டி சாப்பிட்டோமே அது ஞாபகம் வந்திச்சு….” எங்கோ வெறித்தபடியே சொன்னவளின் முகத்திலுள்ள கண்ணீரை ஒற்றை விரலால் துடைத்துக் கொண்டே,

”ஆமா… அது அழிக்கவே முடியாத நிகழ்வுக தான்டீ…. ஹ்ம்…” பெருமூச்சு விட்டவள் ஏதோ ஞாபகம் வந்தது போல,

”அடி… இன்னிக்காவது  மச்சான் வீட்டுகு வந்துடுவாரு தானே….”

”ம்… கண்டிப்பா அக்கா… நீ மனச தளர விடாத… மச்சான காப்பாதிடலாம்” சாப்பாட்டுத் தட்டை மேசையின் மேல் வைத்தபடியே,

”சின்னக்கா…. நா இன்னிக்கி வேலேக்கி போகல்ல தானே…. நாளேக்கி மெனேஜர் கிட்ட லீவு சொல்லிட நினைவூட்டு… ”

”ஐயோ… பவி நீ வேலேக்கி போ.. நா இருக்குறன்….” திரும்பிஅவளை முறைத்து விட்டு,

”என்ன நீ பேசுற? நானும் இந்த வீட்டு பொண்ணு தா… ஒனக்கு ஒன்னுனா என்னால தாங்க முடியாது…..” கண்ணீர் பொங்க பாசப் பார்வையொன்றை அவள் மீது வீசி,

”எங்களால ஒனக்கு தொந்தரவு தானே…? ”

”ஐயோ… இப்படி பேசாத… அன்னிய ஆக்களுகிட்ட பேசுற மாதி…”

கூறியவள் ஓடிவந்து கல்யாணியை கட்டிப்பிடித்துக் கொண்டாள். முன் வாசல் மணிச் சத்தம் கேட்கவுமே, அவளை விடுவித்துக் கொண்டு,

”சின்னக்கா யாரோ பெல் அடிக்ற நா பாத்து வார…” முன் வாசலை நோக்கி ஓடினாள்.

”ஓ… வினோத் அண்ணா….. வாங்க…..”

சிரித்துக் கொண்டே வந்தவனைப் பார்த்து,

”என்ன கார்த்திக் மச்சான பத்தி ஏதாச்சும்….” சைகை மூலம் அவளை தடுத்தவன்.

”ஆமா… அவர பத்தி தகவல் கெடச்சுச்சு…..” இக்குரலைக் கேட்ட கல்யாணி பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

பவித்ரா துள்ளிக்குதித்து ஓடிப் போய் வந்தவளை கட்டிக்கொண்டாள்.  அவளும் குனிந்து நெற்றியில் முத்தமிட்டவுடன், ”பெரியக்கா… நீ ரொம்ப அழகாயிருக்கே…  செல்ல…. அக்கா….” மீண்டும் கட்டிக் கொண்டாள். ”விடுடா…. அக்காவ… உள்ளுக்கு வரட்டும்…” பார்வதி சற்று…

பவித்ரா துள்ளிக்குதித்து ஓடிப் போய் வந்தவளை கட்டிக்கொண்டாள்.  அவளும் குனிந்து நெற்றியில் முத்தமிட்டவுடன், ”பெரியக்கா… நீ ரொம்ப அழகாயிருக்கே…  செல்ல…. அக்கா….” மீண்டும் கட்டிக் கொண்டாள். ”விடுடா…. அக்காவ… உள்ளுக்கு வரட்டும்…” பார்வதி சற்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *