அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 13

  • 7

அவள் கத்துவதற்கிடையில் வாயை மூடி விட்டு “ஷ்….நான் தான்” என்று அவன் சொல்ல அதிர்ச்சியுடன்.

“கியோன்…. நீயா!…..”

“ஆமா..நானே தான்…”

“என்ன இது இந்த ராத்திரியில் என்ன விளையாட்டு இது யாராவது திருடன் என்னு நினைச்சி நான் உன்னை ஏதாவது பண்ணி இருந்தா என்னாவது”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது உன்னால எனக்கு எந்த ஆபத்தையும் தர முடியாது”

“என்ன சொல்லுறே நீ…” என்று புரியாமல் கேட்டாள் சோஃபி.

“உன்கிட்ட ஒன்னு சொல்ல தான் இந்த நேரத்தில் வந்தேன்” என்றான் கியோன்.

“எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம் இல்லே” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளை முத்தமிட்ட கியோன்.

“ஐ லவ் யூ… சோஃபி” என்றான். அதிர்ச்சி அடைந்த சோஃபி ஏதோ சொல்ல வர ஒற்றை விரலால் அவள் உதட்டில் கை வைத்து,

“நான் சொன்ன இதே போல் ஒரு வார்த்தை என்றால் மட்டும் இப்போதைக்கு நீ பேசலாம் இல்லேன்னா கூட பரவாயில்லை. நேரம் எடுத்துக்க யோசி கூடிய விரைவில் ஒரு நல்ல பதிலா சொல்லு” என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தான். சற்று நேரம் தீவிர யோசனையாய் புதருள்ளே கிடைந்தவள் எழுந்து அறைக்கு வந்த போது கதவு திறக்கும் சத்தம் கேட்டு எழுந்த அலைஸ்.

“இப்போதான் வர்றியா என்ன பண்ணிட்டு இருந்தே” என்றாள் தூக்க கலக்கத்தில்

“அது…. சும்மாதான்” என்றவள் அலைஸ் அருகில் படுத்து கொண்டாள். அதேபோல் ரியூகி அறைக்குள் கியோன் மெல்ல மெல்ல அடியெடுத்து கியோன் நுழைய,

“சாரு… இந்த நேரத்தில் எங்க போய்ட்டு வர்ரீங்க” என ரியூகி கேட்க,

“சும்மாதான் வெளில காத்து வாங்கிட்டு”

“ஒஹ்ஹ்… சரி சரி சீக்கிரம் தூங்கு காலைல நிறைய வேலை இருக்கு.” என்றபடி இருவரும் தூங்கினார்கள்.

*****************************

இன்னொரு பக்கம் பூமியில் தங்கள் நண்பி அலைஸ் காணாமல் போனதை அடுத்து எல்லோரும் பதறிப்போய் போலீஸில் புகார் கொடுத்துவிட்டு அலைஸ் வருகைக்காக காத்திருந்தனர்.

********************************

விடிந்ததும் தங்கள் நீண்ட பயணத்திற்கான பொருட்களை எல்லாம் கட்டி ,துணி மணி அத்தியாவசிய பொருட்கள் என எல்லாவற்றுடனும் பயணம் ஆரம்பமானது. அலைஸை ரியூகியும் சோஃபியை கியோனும் குதிரையில் ஏற்றி கொண்டனர். காலையில் கியோனை பார்த்ததும் ஒரு மாதிரி வெட்கமாகி போய்விட முதலில் தான் ஒரு தனி குதிரையில் வரப்போவதாக சோஃபி சொல்ல,

“என்னோட வந்தா எங்கே பயந்து போய் ஐ லவ் யு சொல்லிடுவேன்னு பயமா” என்பது போல் கியோன் நக்கலாக ஒரு பார்வை பார்க்க அதனை புரிந்து கொண்ட சோஃபி தனிக்குதிரை ஐடியாவை விட்டு விட்டு அவனுடனே ஏறி கொண்டாள். கிட்ட தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு எல்லோரும் பயங்கர பசியை உணர்ந்தார்கள். அந்த காட்டு பகுதி இயற்கையாகவே பசியை தூண்டும் வாசனையை கொண்டது. குதிரைகளுக்கு கூட அது விதி விலக்கு அல்ல

“நாம ஏதாவது வேட்டையாடுவது சிறந்தது.” என்றான் ரியூகி

“அப்போ நீ இங்கேயே இளவரசியை பத்திரமா பார்த்துக்க நான் பக்கத்தில் முயல் அல்லது மான் வேட்டைக்கு சென்று வருகிறேன்.” என்றான் கியோன்.

“நானும் வர்றேன் உதவியா இருக்கும்” என்றாள் சோஃபி. கியோன் உள்ளார சிரித்து கொண்டே “காதலை சொல்லிவிடுவாள்” என்று எண்ணி கொண்டான்.

“ரெண்டு பேரும் கவனமா போய் வாங்க….” என்றாள் அலைஸ்.

“எப்படியும் அரை மணி நேரத்தில் வந்திடுவோம் வரல்ல என்னு சொன்னால் அதுக்கு பிறகு நீங்க வந்திடுங்க” என்றான் கியோன். அவர்கள் சென்றதும் அலைஸுக்கு ஒரு வினோத ஆசை பிறந்தது.

“அது வந்து ரியூகி நான் ஒன்னு கேட்டா பண்ணுவியா”

“சொல்லுங்க..”

“எனக்கு தற்காப்பு கலையை கொஞ்சம் கொஞ்சமாக கத்து தர்றியா” என்று கேட்டாள்.

“என்னது அது தான் நாங்க இருக்கும் போது உங்களுக்கு எதுக்கு வேண்டாத வேலை” என்று கேட்டான் அவன்.

“சோஃபிக்கு கூட கராத்தே தெரியும் எனக்கு கத்துக்க ஆசையா இருக்கு சொல்லி தருவியா இல்லியா” என்று குழந்தைகள் அடம்பிடிப்பது போல கேட்டாள்.

“ரியூகி!!!” அவன் என்ன செய்வதென்று அறியாமல் முழித்து கொண்டிருந்தான்.

தொடரும்…….

ALF. Sanfara.

[proucts]

அவள் கத்துவதற்கிடையில் வாயை மூடி விட்டு “ஷ்….நான் தான்” என்று அவன் சொல்ல அதிர்ச்சியுடன். “கியோன்…. நீயா!…..” “ஆமா..நானே தான்…” “என்ன இது இந்த ராத்திரியில் என்ன விளையாட்டு இது யாராவது திருடன் என்னு…

அவள் கத்துவதற்கிடையில் வாயை மூடி விட்டு “ஷ்….நான் தான்” என்று அவன் சொல்ல அதிர்ச்சியுடன். “கியோன்…. நீயா!…..” “ஆமா..நானே தான்…” “என்ன இது இந்த ராத்திரியில் என்ன விளையாட்டு இது யாராவது திருடன் என்னு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *