அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 18

  • 10

வீட்டுக்குள் நுழைந்ததும் ரியூகி கியோனை தேட ஆரம்பித்தான். “என் பக்கத்தில் தானே தூங்கினான். எங்கே போனான்?” என்று புலம்ப பரண் மேலிருந்து கியோன் குரல் கேட்டது.

“டேய் நான் இங்கே இருக்கேன். எங்கடா போய்ட்டே… நேத்து உன் கூட தானே தூங்கினேன். எதுக்குடா என்னை தூக்கிட்டு வந்து பரண்மேலே போட்டே?” என்று கேட்டான்.

“என்னது நானா…”

“பின்னே யாரு நானா”

ரியூகிக்கு ஒருவேளை இதை செய்தது கோரின் ஆக இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டது. ஆனா அவங்க எதுக்கு செய்யணும். என்று குதர்க்கமாகவும் இருந்தது.

“சரி சரி கீழே இறங்கி வா..” என்று சொன்னவன். சற்று முன்னர் அலைஸ் கிட்ட சொன்னதை எல்லாம் ஒரு வாட்டி நியாக்கப்படுத்தி கொண்டான்.

“சே… நான் அப்படி பேசி இருக்க கூடாது. அவங்க மனசு உடைஞ்சி போய் இருப்பாங்க. கண்டிப்பாக இதற்கு நான் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டே ஆகணும்.” என முணுமுணுக்க அது லேசாக காதில் போட்டு கொண்ட கியோன்.

“யார்கிட்டடா மன்னிப்பு கேட்க போறெ நீயாவது மன்னிப்பு.” என்று சிரித்து கொண்டே கியோன் சென்றுவிட தீவிர யோசனையாக இருந்தான் கியோன். நன்றாக விடிந்து விட்டது.

“யாராவது பிரின்செஸ் அலீஸியாவை பார்த்தீங்களா.” என்று கேட்டுக்கொண்டே ரியூகி வந்தான். சோஃபிக்கும் கியோனுக்கும் பெரிய ஆச்சரியம்.

“என்னது பிரின்சஸ் அலீஸியாவா வழக்கமா நீ அலைஸ் என்னு தானே கூப்பிடுவே.”

“அதானே” என்றான் கியோன்.

“நீங்க அவங்கள பார்த்தீங்களா பிரின்சஸ் கோரின்”

“இல்லே அவ எங்கே போய் இருப்பான்னு எனக்கெப்படி தெரியும்.”

“ஒஹ்ஹ்.”

ரியூகி அப்படியே வீட்டுக்கு பின்புறம் செல்ல அங்கு தனியாக அமர்ந்து எதையோ யோசித்து கொண்டிருந்தாள் அலைஸ்.

“இங்க இருக்கீங்களா உங்களை எங்கெல்லாம் தேடறது.” என்று ரியூகி நெருங்க கண்ணீரை துடைத்து விட்டு

“ஆஹ்… ரியூகி வாங்க” என்றழைத்தாள்.

“காலை உணவு சாப்பிடணும் வாங்க.”

“இதோ வந்துர்றேன்.” என்றெழுந்து ரியூகியை கடந்து செல்லும் போது “ஐ அம் சொரி.” என்றுவிட்டு செல்ல அந்த வார்த்தைகள் அவனை மேலும் குற்ற உணர்வுக்கு ஆளாக்கியது.

“நியாயமா நான் தான் உங்க கிட்ட மன்னிப்பை கேட்கணும்.” என்றபடியே அவளுடன் நடந்தான் ரியூகி. அது அவளுக்கு கேட்கவில்லை. கோரின் எல்லோருக்கும் உணவு பரிமாறி கொண்டிருந்தாள். மேசையில் ரியூகி அருகே அமர்ந்து கோரின் சாப்பிட்டாள். அப்போது சோஃபி அலைஸிடம்.

“சொல்றேன்னு தப்பா நினைக்காதே! உங்க அக்கா உன்னை போலவே இல்லை. சுத்தமா வேற மாதிரி நடந்துகிறாங்க.” என்றாள்.

“அப்படி என்ன பண்ணாங்க.” என்று அப்பாவியாய் கேட்டாள் அலைஸ்.

“மொதல்ல சாப்பிடு.” என்றாள் சோஃபி. ரியூகி அலைஸ் இருவருக்கும் சாப்பாடு இறங்கவில்லை.

ரியூகி மனதில், “எதுக்காக என்னோட மனசு இப்படி அடிச்சிக்குது ஒரு வேளை நான் அலைசை”

அவள் மனதில் “ரியூகி கிட்ட வாய்விட்டு சொல்லியும் எந்த ஒரு விருப்பமும் இல்லாம மூஞ்சில அடிச்சபோல பதில் சொல்லிட்டான். இனிமேல் நாம இந்த பேச்சை விடவேண்டியது தான்.”

இருவரும் அரை மனசுடன் சாப்பிட்டு விட்டு எழுந்தனர்.

 

தொடரும்……
ALF. Sanfara.

வீட்டுக்குள் நுழைந்ததும் ரியூகி கியோனை தேட ஆரம்பித்தான். “என் பக்கத்தில் தானே தூங்கினான். எங்கே போனான்?” என்று புலம்ப பரண் மேலிருந்து கியோன் குரல் கேட்டது. “டேய் நான் இங்கே இருக்கேன். எங்கடா போய்ட்டே……

வீட்டுக்குள் நுழைந்ததும் ரியூகி கியோனை தேட ஆரம்பித்தான். “என் பக்கத்தில் தானே தூங்கினான். எங்கே போனான்?” என்று புலம்ப பரண் மேலிருந்து கியோன் குரல் கேட்டது. “டேய் நான் இங்கே இருக்கேன். எங்கடா போய்ட்டே……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *