அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 23

  • 7

வந்தவர்களில் ஒருவன், “இவன்தான் மாஸ்டர் நம்ம ஆளுங்க மூணு பேரை கொன்றது.” என்று சொல்ல அந்த தலைவன்.

“நீ பெரிய தப்பு பண்ணிட்டே” என்றான்.

“அப்படியா, எனக்கு அப்படி தோணல” என்று சொன்னவன் அலைஸை கொஞ்சம் தூரமாக நிற்க சொல்லிவிட்டு சண்டைக்கு தயாரானான்.

சின் கேவின் ஒவ்வொரு விரலில் இருந்தும் இழைகள் வெளிப்பட்டன. அவை சிலந்திவலைபோலும் மிக மெல்லிய கத்தி நாரை போலும் இருந்தன. அவற்றை எதிரிகள் மீது பாய்ச்சினான். கிட்டத்தட்ட 20 பேராவது இருக்கும். அனைவருமே வந்த வேகத்தில் உடல் பாகங்கள் வெட்டப்பட்டு இரத்தம் பீறிட்டு வீழ்ந்து மாண்டனர். இத்தனையும் இமை வெட்டாமல் பார்த்து கொண்டிருந்த அலைஸை முகத்துக்கு நேராக சுடக்கு போட்டு,

“ஹலோ… போகலாமா?” என்று கேட்டான் சின் கே.

அதிர்ச்சியில் இருந்து மீண்டவாறே இருவரும் நடக்க அப்போது அலைஸ்,

“அதை எப்படி பன்னீங்க..”

“எதை பற்றி பேசுரே?”

“அதுதான்… உங்க விரலில் இருந்து ஏதோ…”

“ஓஹ்… அதுவா.. என் பிறப்பில் இருந்தே இருக்கு. முன்னர் எல்லாம் கட்டுப்பாட்டை இழந்து எவ்வளவு பேரை தாக்கி இருக்கு… அந்த பயத்தில் ஆளுங்க இல்லாத இடத்தை நோக்கி போய்க்கொண்டு இருந்தேன். அப்பறம் என்னை வளர்த்தவர் என்னோட மாஸ்டர் தான் இந்த சக்தியை எப்படி கட்டுப்படுத்த வேணும் என்று எனக்கு கற்று தந்தார்.” என்றான்.

“ஓஹ். சூப்பர் கரெக்ட்டா அது ஸ்பைடர் மேன் போலவே இருந்துச்சு ஹாலிவூட் படத்தில் எல்லாம் வருமே அது” என்றாள்.

“என்னது…” என்று திருப்பி கேட்டான்.

அவனுக்கு எப்படியும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பேச்சை மாற்றி..

“இங்க ஸ்டோபரி கிடைக்குமா…” என்று கேட்டாள்.

“சந்தைக்கு தான் போறோம்.. வாங்கிக்கலாம்.” என்று கூறி அவளை சந்தைக்கு அழைத்து சென்றான்.

“ஆப்பிள் சாப்பிரியா.” என்று கேட்டு கொண்டே அவளுக்கு ஒரு ஆப்பிளை கொடுத்தான். அவள் அதை ரசித்து சாப்பிடும் அழகை சின் கே பார்த்து கொண்டு இருந்தான். அவள் சிவந்த அழகிய உதடுகள் அசைந்து அசைந்து பழம் சாப்பிடுவதை பார்த்த அவனுக்கு அவ்வுதடுகளில் அழுந்த முத்தமிடவேண்டும் போல இருந்தது. ஆனால் தன் அவசர புத்தியை எண்ணி அவனே நொந்து கொண்டான்.

“இந்த தடவை ஸ்டோபரி பழங்கள் சந்தைக்கு வரவில்லை” என்றான்.

“ஏன்?”

“உனக்கு சடோவ் ஏஞ்செல்ஸ் தெரியுமா?” என்று கேட்டவுடன் அலைஸ் வெலவெலத்து போனாள். அதை அவனும் அவதானித்தான்.

“அவங்களுக்கு அந்த பழத்தை ரொம்பவும் புடிக்கும் பழவண்டிகள் சந்தைக்கு வர்ர வழியில் வைத்து அவற்றை கொள்ளை அடிச்சிட்டு போய்ட்டாங்க.” என்றான்.

“எதுக்காக திருடனும் அவங்களே பயிரிட்டு கொள்ளலாம் இல்லியா?” என்று கேட்டாள்.

“உனக்கு விஷயமே தெரியாதா? அவங்க உலகத்துல எந்த பயிரும் விளையாது. அவங்க எதுவேணுமோ அதை திருடி தான் எடுத்துக்குவாங்க. அது சபிக்கப்பட்ட உலகம் அங்க பிறக்க வேண்டிய அதிசய குழந்தை ஒன்னு நம்ம ராஜா ராணி தவப்பயனாக நாலில் ஒரு பிள்ளையாக பிறந்தது. அந்த உலகத்தில் அவங்க பிறந்து இருந்தா அவங்க சக்திகள் பெருகி பல அட்டூழியங்களை செஞ்சி இருப்பாங்க. கோபம் கொண்ட அந்த உலகத்து மன்னன் சோஜோ டிராகன் களை அனுப்பி போர் நடத்தினான். ராஜா பசங்கள நாலு வேற வேற இடங்களுக்கு அனுப்பிட்டார். பல உயிர் சேதம் ஏற்பட்டது. நல்லவங்க பலரோட சாபத்தால் போர் ஒரு முடிவுக்கு வந்தது.” என்று சொல்லி முடித்தான்.

“இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும்?”

“என்னோட மாஸ்டர் சொன்னாரு இப்போ போகலாமா?” என்று கேட்டான்.

எதையோ தீவிரமாக யோசித்து கொண்டிருந்தவள் அவனுடன் சந்தைக்குள் நடந்தாள். அதே சந்தைக்கு பயணத்துக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்காக ரியூகி குழுவினரும் வந்திருந்த விடயம் யாருக்கும் தெரியாது.

தொடரும்……
ALF. Sanfara.

வந்தவர்களில் ஒருவன், “இவன்தான் மாஸ்டர் நம்ம ஆளுங்க மூணு பேரை கொன்றது.” என்று சொல்ல அந்த தலைவன். “நீ பெரிய தப்பு பண்ணிட்டே” என்றான். “அப்படியா, எனக்கு அப்படி தோணல” என்று சொன்னவன் அலைஸை…

வந்தவர்களில் ஒருவன், “இவன்தான் மாஸ்டர் நம்ம ஆளுங்க மூணு பேரை கொன்றது.” என்று சொல்ல அந்த தலைவன். “நீ பெரிய தப்பு பண்ணிட்டே” என்றான். “அப்படியா, எனக்கு அப்படி தோணல” என்று சொன்னவன் அலைஸை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *