சர்வதேச கிக்பொக்சிங்கில் அப்துல் ஹக்கம் சாதனை

பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டைப் போட்டியில் அப்துல் ஹக்கம் தங்கப் பதக்கம் வென்றார். இவர் 18 வயதுக்குட்பட்ட பிரிவில் 80KG இடையுள்ள குத்துச்சண்டைப் போட்டியில் பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் மூவரை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று இலஙகைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பகரகஹதெனியவை சேர்ந்த இவ்வீரர் கண்டி சித்திலெப்பை கல்லூரி சார்பாக இப்போட்டிகளில் கலந்து கொண்டார். மேலும் இலங்கையில் இருந்து சென்ற 22 வீரர்கள் 13 தங்கமும், 6 வெண்கலமும் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

 

Leave a Reply