ஸதாத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி முடிவுகள்

தென் மாகாண மாத்தறை மாவட்ட அகுரஸ்ஸ வலயத்தில் அமைந்துள்ள மாறை/ கொடபிடிய ஸாதத் மஹா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2020.01.28 தொடக்கம் 2020.01.31 வரை பாடசாலை மைதானத் திடலில் வெகு சிறப்பாக நடை பெற்றது. KAMAR, NAJM மற்றும் SHUMS இல்லங்களுக்கிடையே போட்டிகள் இடம்பெற்றன.

முதலாம் நாள் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றதுடன் இரண்டாம் நாள் போட்டிகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. சிறார்களுக்கான உடற் பயிற்சி, விநோத உடைப் போட்டி , அணி நடை மரியாதை , பழைய மாணவர்களுக்கான அஞ்சல் ஓட்டப் போட்டி போன்றவை இடம் பெற்றன.

இல்லங்கள் பெற்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் ஒன்பது ஆண்டுகளின் பின்னர் முதலாம் இடத்தை SHUMS இல்லமும் இரண்டாம் இடத்தை KAMAR இல்லமும் மூன்றாம் இடத்தை NAJM இல்லமும் தட்டிக் கொண்டன. இறுதித் தினமன்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply