சுதந்திர தினத்தில் சகவாழ்விற்கு வித்திடுவோம்!

  • 9

சுதந்திர தினம் சுதந்திரமாய் கொண்டாடப்பட வேண்டும். மாறாக ஒரு கையில் சமாதானப் புறாவும் மறு கையில் புறாவினை பிடித்து அடைக்க கூண்டும் வைத்தாற் போல் கொண்டாடுவதில் அர்த்தமில்லை.

எமது நாடு பன்மைத்துவ சமூக அமைப்பைக் கொண்ட நாடாகும். எனவே சுதந்திரம் என்பது ஒரு இனத்துக்கு மாத்திரம் கிடைக்கப்பெற்றது அன்று. அனைத்து இனமக்களும் சுதந்திரம் பெற்றவர்களே என்ற அடிநாதத்தை உயிர்ப்பிக்க வேண்டும்.

சிறுபான்மை இனம் நாட்டின் சட்டத்தை மதித்து வழ்தலுடன் பன்மைத்துவ சமூக அமைப்பில் எமது தனித்துவத்தை இழந்துவிடாமல் பிற சமூகத்துடன் இணங்கி சீரான முறையில் வாழல் வேண்டும்.

வேறுபாடு களைந்து நான் இலங்கையன் என்று சொல்ல வேண்டும். தாய் இன மத மொழி அன்றி தாய் மண்ணால் ஒன்று பட்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும். இதற்கான ஆணிவேர் சகவாழ்வே! இதன் மூலம் இனங்களுக்கிடையே நல்லுறவை பேணி நம் நாட்டில் சுபிட்சத்தை ஏற்படுத்த முடியும்.

நாம் அனைவரும் மனித இனத்தால் ஒன்று பட்டவர்கள், இந்நாட்டின் பிரஜைகள் அதன் படி ஒவ்வொருவரும் கண்ணியத்திற்குரியவர்களே!

இந்நாட்டிலும் சரி எம் மதத்திலும் சரி அவரவர் தத்தமது மதத்தை பின்பற்ற அனுமதி உண்டு. ஆனால் புரிந்துணர்வுடன் ஏனைய மதத்தவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வண்ணம் மத அனுஷ்டானங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

பிற சமுகத்தவரின் சுக துக்க விடயத்தில் பங்கேற்பு செய்தல், மத சகிப்புத் தன்மையை பேணுதல், பிற சமூகத்துடன் இணங்கி வாழ்தல், இது போன்ற பல அம்சங்கள் சக வாழ்வுடன் தொடர்பு படுகின்றன.

தேச ஒற்றுமையை நிலை பெற வைத்து தேசத்தை கட்டியெழுப்புவதானது நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை! இதன் செயற்பாட்டு கருவியாக சகவாழ்வே காணப்படுகிறது. சகவாழ்வை கடைப்பிடித்து இலங்கையனாய் ஒன்று படுவோம்.

மருதமுனை நிஜா
(ஹுதாயிய்யா)
தென்கிழக்கு பல்கலைக்கழகம்

சுதந்திர தினம் சுதந்திரமாய் கொண்டாடப்பட வேண்டும். மாறாக ஒரு கையில் சமாதானப் புறாவும் மறு கையில் புறாவினை பிடித்து அடைக்க கூண்டும் வைத்தாற் போல் கொண்டாடுவதில் அர்த்தமில்லை. எமது நாடு பன்மைத்துவ சமூக அமைப்பைக்…

சுதந்திர தினம் சுதந்திரமாய் கொண்டாடப்பட வேண்டும். மாறாக ஒரு கையில் சமாதானப் புறாவும் மறு கையில் புறாவினை பிடித்து அடைக்க கூண்டும் வைத்தாற் போல் கொண்டாடுவதில் அர்த்தமில்லை. எமது நாடு பன்மைத்துவ சமூக அமைப்பைக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *