சுதந்திர தினத்தன்று சுதந்திரமடையட்டும் பெண்கள்!!

  • 6

நாடு சுதந்திரம் அடைந்து; நாட்டவரும் சுதந்திரமடைந்து பலவருடங்களாயிற்று. ஆனால் இன்னும் அடிமைத்தனத்தினுள் கட்டுண்டு அடுப்படியில் காலத்தை கடத்துகின்றனர் பெண்கள். பெண்கள் வலுவடைந்து அடிமைத்தனம் ஒழிந்து இன்று பிரகாசிக்கின்றனர் என்று வெறுமனே அதிகரித்துள்ள பெண்களின் பல்கலைக்கழக நுளைவு விகிதத்தை மாத்திரம் காட்டி மாயாஜாலம் செய்யப்படுகிறது.

பெண் இன்னும் சுதந்திரமடைய வில்லை அவள் சிறைப்படுத்தப் பட்டுள்ளாள். ஊடகத்துறையிலோ அரசியலிலோ மேலும் உயர்பதவியில் அவளின் விகிதாசாரம் மற்றும் பங்கு பற்றும் தன்மை குறைவே. சிலபோது அவளின் கல்வி பயணம் பல்கலைக்கழக கற்கையோடு முற்றுப்புள்ளி இடப்படுகிறது.

பெண்ணுக்கு என விதிவிலக்கான தொழில் உள்ளன. அது தான் சிறந்தது என வேதவாக்கு வழங்கினாற் போல் அதிலே தமக்கான வட்டத்தை போட்டு அமர்ந்து விடுகின்றனர். உதாரணமாக ஊடகத்துறையை எடுத்துக் கொண்டால் பெண்ணின் வகிபாகம் குறைவாகவே உள்ளன.

ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் இன்றும் ஆண்கள்தான் பெரும்பாலும் ஆசிரியர் பதவி வகிக்கிறார்கள். நம் நாட்டில் விரல் விட்டு எண்ணக் கூடிய பெண் பத்திரிகையாசிரியர்களே உள்ளனர். சினிமாவைப் போன்று பெண் கவர்ச்சி பொருளாகவே நோக்கப்படுகிறாளே தவிர அவளுக்கான இடம் இன்னும் வழங்கப்படவில்லை. இதற்கு அவளிடையே காணப்படும் இயல்பான பயம் உணர்வும், தலைமைப் பொறுப்பை கையிலெடுப்பதிலும் உள்ள சிக்கலும் காரணமாய் அமைந்து விட்டன.

சமூக வலைத்தளங்களானது சென்ற தலைமுறைப் பெண்களுக்கு கிட்டாத வாய்ப்பான எழுத்து மூலம் பொது வெளியில் கருத்து பரிமாற்றம் செய்வதை இன்று எம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. இதனுள் சுருங்கி விடாமலும் எழுத்துக்கான உயிர் கொடுக்கும் வகையில் புத்தகம் எழுதுதல் போன்ற பணியில் தம்மை ஈடுபடுத்த வேண்டும். ஆகவே பெண்கள் அடைபட்ட தாப்பாளை விலக்கி வெளியுலகிற்கு வர வேண்டும். சுதந்திர பறவையாய் தமக்கான வரையறைகளை பேணி பறக்க வேண்டும். ஆண்களை திறமையால் அளவிடும் சமூகம், பெண்களை உடலியல் ஒழுக்கத்தால் அளவிடுகிறது.

ஒழுக்கம் மற்றும் நடத்தையில் சீர் நெறி என்பன இரு இனத்துக்கும் பொதுவானதே. அதனை சீரமைத்துக் கொள்வது இருவரினதும் கடமையே! பெண்ணும் சுதந்திர வேட்கை கொண்டவள். அவளுக்குள்ளும் பல திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவளுக்கு சுதந்திரக் காற்றை பரிசளியுங்கள் அவள் தன் சிறகை அகல வரித்து சிறகடித்து பறந்து பெரும் வெற்றிகளை தனதாக்கிக் கொள்ளட்டும்!!

மருதமுனை நிஜா
(ஹுதாயிய்யா)
தென்கிழக்கு பல்கலைக்கழகம்

 

நாடு சுதந்திரம் அடைந்து; நாட்டவரும் சுதந்திரமடைந்து பலவருடங்களாயிற்று. ஆனால் இன்னும் அடிமைத்தனத்தினுள் கட்டுண்டு அடுப்படியில் காலத்தை கடத்துகின்றனர் பெண்கள். பெண்கள் வலுவடைந்து அடிமைத்தனம் ஒழிந்து இன்று பிரகாசிக்கின்றனர் என்று வெறுமனே அதிகரித்துள்ள பெண்களின் பல்கலைக்கழக…

நாடு சுதந்திரம் அடைந்து; நாட்டவரும் சுதந்திரமடைந்து பலவருடங்களாயிற்று. ஆனால் இன்னும் அடிமைத்தனத்தினுள் கட்டுண்டு அடுப்படியில் காலத்தை கடத்துகின்றனர் பெண்கள். பெண்கள் வலுவடைந்து அடிமைத்தனம் ஒழிந்து இன்று பிரகாசிக்கின்றனர் என்று வெறுமனே அதிகரித்துள்ள பெண்களின் பல்கலைக்கழக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *