என் அழகி அவள்

  • 11

விண்ணுலகில் விலாசம் தேடி
மண்ணுலகில் சுவாசம் நாடி
நீலக்கடலின் நடுவே
நீச்சல் பயில்கிறாள் – ஓர் அழகி..

தீவென்று பெயரெடுத்தால்
தீபாராதனை ஏற்றி
இந்து சாகரத்தின்
முத்தென்று பெயரெடுத்தால்
அடைக்கலம் போர்த்தி…

கடல் வளமும் கானக நிலமும்
கொட்டும் அருவியும்
கொஞ்சும் பசுமையும்
முட்டும் மலைத்தொடருமாய்
அவள் மேனி ஜொலிக்கிறது…

வனப்பு மிக்கவள்
வளர்ந்து வருபவள்
வாயடைத்துப் போவர் பலர் -அவள்
வளத்திலும் வனப்பிலும்…

எல்லையில்லாக் காதல்
எல்லோருக்கும்
எம்மதமும் தன் மகவென்பதால்
என்றோ அவள் சொன்னதால் போலும்..

மனிதத்தை மதிக்கும் குணம்
சுமூகத்தை விரும்பும் மனம்
சமத்துவம் பேசுவாள் நிதம்
சகோதரத்துவம் யாவரும் சமம்…

வயதாகிவிட்டாள் என்பர்
48 இல் பிறந்தால்
மாசியில் மணந்தால்
பத்து மாதம் சுமந்தாள்
பத்தினிதான் என் அவள்…

ஒற்றுமையை போதித்தால்
குரோதத்தை கூரிட்டாள்
சுதந்திரத்தின் சுகந்தம் காண
சுமந்தவர்களை நேரிப்படுத்தினாள்…

வீரியம் கொண்ட சிலர்
விரோதத்தை விதைக்க நினைக்கின்றனர்
காரியம் ஆவதற்காய்
கலகத்தை விளைவிக்கின்றனர்…

என் அழகி அவள் ஏக்கத்தோடு
எதிர்பார்கிறாள் முன்னேற்றத்தை…

என் அழகி அவள்
தாய்ப்பற்றுள்ள பிள்ளைகளை
தன் மகவென்று போசிக்கிறாள்…

என் அழகி அவள்
அவள் மீது நான் கொண்ட காதல்
அழியாது என்றும்….

Asana Akbar
Anuradhapura
SEU Of Srilanka

விண்ணுலகில் விலாசம் தேடி மண்ணுலகில் சுவாசம் நாடி நீலக்கடலின் நடுவே நீச்சல் பயில்கிறாள் – ஓர் அழகி.. தீவென்று பெயரெடுத்தால் தீபாராதனை ஏற்றி இந்து சாகரத்தின் முத்தென்று பெயரெடுத்தால் அடைக்கலம் போர்த்தி… கடல் வளமும்…

விண்ணுலகில் விலாசம் தேடி மண்ணுலகில் சுவாசம் நாடி நீலக்கடலின் நடுவே நீச்சல் பயில்கிறாள் – ஓர் அழகி.. தீவென்று பெயரெடுத்தால் தீபாராதனை ஏற்றி இந்து சாகரத்தின் முத்தென்று பெயரெடுத்தால் அடைக்கலம் போர்த்தி… கடல் வளமும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *