சுதந்திர தேசம்

சுதந்திர தேசம்

சுதந்திரக் காற்றின் சுகந்தத்தை
சுகமாய் அனுபவித்திட
வியூகங்களை தகர்த்தெறிந்து
தியாகங்கள் புரிந்த
தயாளர்களுக்கோ கோடி நன்றிகள்.

தாய் மண்ணின் விடுதலைக்காய்
தேய் பிறையாய்
தேய்ந்து போன தலைமைகளின்
நேயம் மிகு பரிசிது.

தாயகமே போற்றும்
தூய்மையான இந்நாளின் துவக்கத்திலே
தேசப்பற்றுள்ள நேசர்களாய் மாறி
நல்லிணக்கத்தை நாவினமும்
கை கொண்டிடுவோம்.

தேசக் கொடியிலே இருக்கட்டும்
வர்ண பேதம்.
தேச நேசர்கள் எம்மில் வேண்டாமே
கர்ண பாதகம்.

ILMA ANEES
SEUSL
SECOND YEAR

கவிதை வியூகம் வெளியீட்டு மையம்