போர்வையிலிருந்து பொலன்னறுவை வரை …

  • 25

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத, மத­வாத செயற்­பா­டுகள் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ள­மை­யா­னது முஸ்லிம் சமூ­கத்தை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது.

கடந்த ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் மாத்­திரம் மூன்று பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் உட்­பட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான 15கும் மேற்பட்ட முக்­கிய சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில், அவற்றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொள்­ள­வில்லை என முஸ்­லிம்கள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

கடந்த காலங்­களில் நாட்டில் இன­வாத கருத்­துக்­களைப் பரப்­பிய பொது பல சேனா மற்றும் சிங்­கள ராவய போன்ற அமைப்­பு­களின் செயற்­பா­டுகள் மீண்டும் வீரியம் பெற்­றுள்­ள­துடன் ஞானசார தேரர் மீண்டும் இன­வாத கருத்­துக்­களைப் பரப்பும் தனது வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்­துள்ளார்.
இவற்றின் கார­ண­மா­கவே நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் தலை­தூக்­கி­யுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.
இதே­வேளை இந்த சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்த அர­சாங்­கமும் பாது­காப்புத் தரப்பும் போதிய நட­வ­டிக்­கை­களை எடுக்­காத அதே­வேளை முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் அர­சாங்­கத்­திற்கு போதிய அழுத்­தங்­களை வழங்கத் தவ­றி­விட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது.
இந் நிலையில் இவ்­வ­ருடம் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் மே 18 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சம்­ப­வங்­களை இங்கு தொகுத்து தரு­கிறோம்.
16.04.2017:
தென் மாகா­ணத்­தி­லுள்ள கொட­பிட்­டிய, போர்வை நகரில் அமைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 4 கடைகள் மீது அதி­கா­லையில் பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.

அக்குரஸ்ஸ நகரிற்கு உட்பட்ட ஓர் முஸ்லிம் கிராமமே போர்வை. இங்கு16.௦4.2௦17 அன்று அப்பிரதேச தொடர் கடைத்தொகுதி 1௦ ஐ இலக்காக கொண்டு இரண்டு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் இரவு 1:45 அளவில் இடம்பெற்றுள்ளது. என்றாலும் இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. நான்கு கடைகளின் முற்பகுதியில் மாத்திரம் சிறு சேதம்.

உரிய நேரத்தில் அருகே உள்ள வீட்டு உரிமையாளரின் சாமர்த்தியமான நடவடிக்கை காரணமாக பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

17.04.2017 :
காலி கோட்டை இரா­ணுவ முகாம் பாது­காப்பு வல­யத்தில் அமைந்­துள்ள ஷெய்ஹ் சாலிஹ் வலி­யுல்லாஹ் ஸியா­ரத்தின் பாது­காப்பு மதில்கள் இனந்­தெ­ரி­யாத நபர்­களால் உடைக்­கப்­பட்­டன.

20.04.2017 :
அம்­பாறை, இறக்­காமம், மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான இரண்­டரை ஏக்கர் காணியை ஆக்­கி­ர­மித்து அதில் பௌத்த விகா­ரையை நிர்­மா­ணிப்­ப­தற்­கான ஆரம்பப் பணி­களை பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுத்­தனர். இதனால் அப் பகு­தியில் பதற்ற நிலை ஏற்­பட்­டது.
25.04.2017 :
அம்­பாறை, இறக்­காமம், மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான இரண்­டரை ஏக்கர் காணியை ஆக்­கி­ர­மித்து அதில் விகாரை நிர்­மா­ணிக்கும் பணி­களை பார்­வை­யிட பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் அப் பகு­திக்கு விஜயம் செய்தார். அத்­துடன் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்தில் இடம்­பெற்ற கூட்­டத்­திலும் கலந்து கொண்­ட­துடன் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பூட்டும் கருத்­துக்­க­ளையும் அக் கூட்­டத்தில் வெளி­யிட்டார். நாட்டில் மேலும் 10 ஆயிரம் பௌத்த விகா­ரை­களை அமைக்கத் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
03.05.2017 :
இறக்­காமம் பகு­தியில் அத்­து­மீறிப் பிர­வே­சித்து இன முரண்­பாட்டைத் தோற்­று­விக்க முனையும் ஞான­சார தேர­ரையும் சிங்­கள ராவய பிக்­கு­க­ளையும் கைது செய்ய வேண்டும் என அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான எச்.எம்.எம்.ஹரீஸ் பாரா­ளு­மன்­றத்தில் வேண்­டுகோள் விடுத்தார்.
08.05.2017 :
இலங்கை கடற்­ப­ரப்பில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் அக­தி­களை மீண்டும் அவர்­க­ளது நாட்­டுக்கே திருப்­பி­ய­னுப்ப வேண்டும் எனவும் அக­திகள் எனும் போர்­வையில் முஸ்­லிம்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மிக்க முயற்­சிப்­ப­தா­கவும் கொழும்பில் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் மாநாட்டில் பொது பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் தெரி­வித்தார்.
10.05.2017 :
இறக்­காமம் மாயக்­கல்லி மலையில் வெசாக் தினத்தை முன்­னிட்டு பொலிஸ் பாது­காப்­புடன் விசேட பௌத்த வழி­பா­டுகள் இடம்­பெற்­றன.

14.05.2017 :
பொலன்­ன­றுவை, ஓனே­கம பகு­திக்கு விஜயம் செய்த பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் அப் பகு­தியில் வசிக்கும் முஸ்­லிம்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்­த­துடன் மாட்டுக் கொட்­டில்­க­ளையும் கழற்றி எறிந்­தனர்.  இதன்­போது ‘அல்லாஹ்’வை அவ­ம­திக்கும் வகை­யி­லான வெறுப்புப் பேச்­சுக்­களை ஞான­சார தேரர் பேசினார்.

15.05.2017 :
தோப்பூர் நீணாக்­கேணி பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் பூர்­வீ­க­மாக பயிர்ச் செய்­கையில் ஈடு­பட்­டு­வரும் குடி­யி­ருப்புக் காணியில் பௌத்த பிக்­குகள் அத்­து­மீறிப் பிர­வே­சித்து வேலி­களை உடைத்­தெ­றிந்­தனர்.
15.05.2017 :

பாணந்­துறை பழைய பஸார் பகு­தியில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் மீது அதி­காலை 3 மணி­ய­ளவில் பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. இதில் பள்­ளி­வா­சலின் உட்­ப­கு­திகள் சேத­முற்­றன. சந்­தேக நபர்கள் எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

16.05.2017 :
கொழும்பு, வெல்­லம்­பிட்டி, கொஹி­ல­வத்தை No automatic alt text available.அல் இப்­ரா­ஹீ­மிய்யா ஜும்ஆ பள்­ளி­வாசல் மீது அதி­காலை 1.45 மணி­ய­ளவில் சுமார் 8 பேர் அடங்­கிய குழு­வினர் தாக்­குதல் நடத்­தினர். இதில் பள்­ளி­வா­ச­லுக்கு சேதம் ஏற்­பட்­டது. இது­வரை எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.
16.05.2017 :
பொது பல சேனா அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றி ஞான­சார தேரர், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் இஸ்­லாத்­துக்கு எதி­ரா­கவும் வெறுப்­பூட்டும் கருத்­துக்­களை முன்­வைத்­த­துடன் ‘அல்லாஹ்’வை அவ­ம­திக்கும் கருத்­துக்­களை மீண்டும் வெளி­யிட்டார்.
16.05.2017 :
செல்­வ­நகர், நீணாக்­கேணி பிர­தே­சத்­திற்குள் கூரிய ஆயு­தங்கள் மற்றும் தடி­க­ளுடன் நுழைந்த சுமார் 200 பேருக்கும் மேற்­பட்ட கும்பல் அப் பகு­தியில் வாழும் முஸ்­லிம்­களின் வீடுகள் மீது தாக்­குதல் நடத்­தினர். இதில் சிலர் காய­ம­டைந்­த­துடன் 16 வீடுகள் சேத­ம­டைந்­தன. அன்­றி­ரவு அக் கிராம முஸ்­லிம்கள் அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறி பள்ளிவாசலிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர்.
17.05.2017 :
பாணந்துறை, எலுவில பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பேக்கரி ஒன்றும் தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றும் பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகின. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
18.05.2017 :
வென்னப்புவவில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான லாஸ்ட் சான்ஸ் எனப்படும் வர்த்தக நிலையம் அதிகாலை 2 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டது.

21.05.2017:

00:00

பொதுபலசேன செயலாளரை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை!

குருநாகல் பகுதியில் பதற்றநிலை!

03:30

குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதிகாலை 03:30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்றுமாத்திரமே வெடித்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.Image may contain: outdoor
குறித்த தாக்குதலினால் பள்ளிவாசலின் கண்ணாடிகளை சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
காலி மாவட்டம் எல்பிடிய பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் மீது தீ மூட்டப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் வர்த்தக  நிலையத்தின் ஒருபகுதி தீக்கிறையாகியுள்ளதாகவும் உரிமையாளர் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் இர்ஷாத் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைதிக்காக பிரார்த்திக்குக : உலமா சபை வேண்டுகோள்

நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள இன­வாத சூழல் நீங்கி அமை­தியும் சமா­தா­னமும் நீங்க பிரார்த்­திக்­கு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா கோரிக்கை விடுத்­துள்­ளது.
இது தொடர்பில் உலமா சபை விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
தற்­போது நில­வி­வரும் அசா­தா­ரண நிலை­மைகள் கார­ண­மாக முஸ்­லிம்கள் சற்று அமை­தி­யி­ழந்து காணப்­ப­டு­கின்­றனர்.
சிலர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வா­தத்தை தூண்டும் செயற்­பா­டு­களை தொடர்ந்தும் மேற்­கொண்டு வரு­கின்­றனர். ஒரு சமூ­கத்தை
அச்­சு­றுத்தும் இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள், இந்­நாட்டில் நிலவும் சமா­தா­னத்­தையும் சக­வாழ்­வையும் பாதித்து நாட்டின் அபி­வி­ருத்­திக்கு தடை­யாக அமை­வ­துடன், இந்­நாட்டின் யாப்பு உறு­திப்­ப­டுத்­தி­யுள்ள உரி­மை­களை மீறும் செயற்­பா­டு­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றன.
எனவே, இந்­நாட்டு முஸ்­லிம்கள் இஸ்­லா­மிய போத­னை­களைப் பேணி, இன ஐக்­கி­யத்­தையும் சமூக ஒற்­று­மை­யையும் பாது­காக்கும் வகையில் நடந்து கொள்­ளு­மாறும், இஸ்­திஃபார், ஸதகா, நோன்பு, துஆ போன்ற நல்­ல­மல்­களில் ஈடு­பட்டு அல்­லாஹ்வின் பக்கம் திரும்­பு­மாறும் குனூத் அந்­நா­ஸிலா ஓது­வ­தற்­கான ஜம்­இய்­யாவின் வழி­காட்­டல்­க­ளுக்கு ஏற்ப ஐவேளை தொழு­கை­க­ளிலும் குனூத் அந்­நா­ஸி­லாவை றமழான் மாதம் வரை ஓது­மாறும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா கேட்டுக் கொள்­கின்­றது.
அத்­துடன் ஒவ்­வொரு ஊரிலும் உள்ள உல­மாக்­களும் துறை­சார்ந்­த­வர்­களும் சமூகத் தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து இன­வா­தத்தை முறி­ய­டிக்க உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும், பொது மக்­க­ளுக்கு இது­தொ­டர்பில் வழி­காட்­டு­மாறும் ஜம்­இய்யா வேண்டிக் கொள்­கின்­றது.
இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளாக வாழும் நாம் வர­லாறு நெடு­கிலும் பல சோத­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வந்­துள்ளோம். இவற்­றின்­போது நாம் இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்கு ஏற்ப பொறு­மை­யு­டனும் நிதா­ன­மா­கவும் செயற்­பட்டு வெற்­றி­பெற்­றுள்ளோம்.
சோத­னை­களின் போது அல்­லாஹ்வின் மீது நம்­பிக்கை கொண்டு செயற்­ப­டுவோர் தனக்கு ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து நிச்­சயம் ஈடேற்றம் பெறுவர். நபி­மார்­களின் வர­லாறு இதற்குச் சான்­றாகும்.
எனவே, முஸ்­லிம்கள் பெரும்­பா­வங்­க­ளி­லி­ருந்து தம்மைப் பாது­காத்துக் கொள்­வ­திலும் அல்­லா­ஹு­த­ஆ­லா­வு­ட­னான தமது தொடர்பைச் சீராக்கிக் கொள்­வ­திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். 
குறிப்­பாக சில தினங்­களில் எம்மை வந்­த­டை­ய­வுள்ள றமழான் மாதத்தில் நாம் அதி­க­ளவு நல்­ல­மல்­களில் ஈடு­பட வேண்டும். நிச்­ச­ய­மாக நமது நல்­ல­மல்கள் முஸ்­லிம்­க­ளுக்கு குறிப்­பா­கவும் நாட்டு மக்­க­ளுக்கு பொது­வா­கவும் நிம்­ம­தி­யையும் சுபீட்­சத்­தையும் கொண்டு வரும் என்பது உறுதியான விடயமாகும்.
நாட்டில் ஐக்கியம் மற்றும் சகவாழ்வு வளரவும் தீய சக்திகளின் மோசமான திட்டங்கள் தோல்வியுற்று அனைத்து சமூகங்களும் புரிந்துணர்வோடு வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தீர்வு என்ன???
நடைபெற்றுள்ள அனைத்து தாக்குதகளையும் அவதானித்தால் அவை முஸ்லிம்களின் வர்த்தகம், வரலாறு, வாழ்விடம், வணக்கஸ்த்தளம் என்பவற்றை இலக்காக கொண்டுள்ளதை அவதானிக்கலாம்.
நாம் அல்லாஹ்வை பயப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே அவனது சோதனை பல வகைகளில் வருகின்றது. எனவே ஒவ்வொரு தனிநபரும் அல்லாஹ்வுடன் தொடர்பை அதிகரிப்போம்.
ஆனால் இது மட்டும் தீர்வு அல்ல நாம் சட்டம், சர்வதேசம் ஊடகம் என்வற்றை இதற்கென பயன்படுத்த வேண்டும்.
இன்று உலகை ஆடவைக்கும் பலம் ஊடகங்களுக்கு உள்ளது. இலங்கை முஸ்லிம்களின்  ஊடகத்தை அவதானித்தால் தென்பகுதி தமிழ் ஊடகம் மந்த கதியிலே உள்ளது.
முஸ்லிம்களின் செய்தி பரிமாற்றத்தில் twitter, Facebook என்பன முதலிடத்தில் உள்ளது.  இன்று இவற்றின் ஊடாக பொய்யான செய்திகளும் பரவுகின்றது. இதனை குறைத்து தீர விசாரித்து செய்திகளை வெளியிட வேண்டும்.
இதற்கு மேலதிகமாக நாம் நமக்கென வானொலி, தொலைக்காட்சி சேவைகளையும் ஆரம்பிக்க வேண்டும்.
நமக்கு இலவசமாக கிடைத்த SLBC முஸ்லிம் சேவைக்கு அனுசரணையாளர் என்று உம்ரா முகவர்களின் முதலீடுகளை குறைத்து அவற்றை நாம் வானொலி, தொலைக்காட்சி ஆரம்பிக்க முதலீடு செய்ய வேண்டும்.
Ceylon Muslim Vidivelli

Ibnu Asad

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத, மத­வாத செயற்­பா­டுகள் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ள­மை­யா­னது முஸ்லிம் சமூ­கத்தை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது. கடந்த ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் மாத்­திரம் மூன்று பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் உட்­பட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான 15கும்…

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத, மத­வாத செயற்­பா­டுகள் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ள­மை­யா­னது முஸ்லிம் சமூ­கத்தை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது. கடந்த ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் மாத்­திரம் மூன்று பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் உட்­பட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான 15கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *