அரச ஊழியரின் (துர்)அதிர்ஷ்ட பிறவி!

  • 14

அரச ஊழியர்களின் பிள்ளைகளால் மட்டும் உணரமுடியுமான வலியின் கோலங்கள் இவை

காலைக் கண்விழித்து
தாயவள் அரவணைப்பில்
தயங்காமல் மீண்டும் சுருண்டு
படுத்திட…

பாசமாய் தலை வருடி
பக்குவமாய் வாரியணைத்து
நெற்றிப் பொட்டில்
நெருக்கமாய் முத்தமிட்டு
அன்பான காலை வந்தனம் கேட்டதில்லை…
அவளோ அரச ஊழியரின்
(துர்)அதிர்ஷ்ட பிறவி!

ஈரைந்து மாதம் வயிற்றில் சுமந்தாலும்
ஓரைந்து மாதம் மட்டுமே
ஒழுங்காக தாய்ப்பால் குடித்தாள்…
இவளோ அரச ஊழியரின்
(துர்)அதிர்ஷ்ட பிறவி!

தாய்மையின் மணத்திற்கும்
தாயின் குணத்திற்கும்
தங்கமகள் ஏங்கிப் பரிதவித்து
கன்னம் பழுத்து
கண்கள் சிவந்து
கை கால் உளத்தி
பீர்ர்ர்… என அழுதிடவே
ஓடோடி வந்து அணைக்கிறாள்
ஓர் மூண்றாமவள்…

கருவுக்குள் உருவெடுத்து
பூமாதேவியின் வயிற்றில்
காலடி வைத்த மறு நொடியே
உணர்கிறாள்
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
ஒரு நாணயத்தின் இரு பக்கங்களென…
அவளோ அரச ஊழியரின்
(துர்)அதிர்ஷ்ட பிறவி!

பாடசாலை முடிந்து
பார்வையோ வீடு நோக்கி…
சோர்வுதனை களைந்திட
முதுகு மூட்டை இறக்கிட
பாசச் சோறு ஊட்டிட
களைப்பில் தோழ் சாய்ந்திட
கண்ணம்மா அவள் என் அம்மா
அங்கில்லை…
இவளோ அரச ஊழியரின்
(துர்)அதிர்ஷ்ட பிறவி!

புலமைப் பரிசலில் சித்தி
பாடசாலைக்கோ வெற்றி
ஊருக்கோ பெருமை
அவளுக்கோ வெறுமை –
வெறும் ஐந்தோ பத்தோ நூறுகள்
வெற்றிக்கென
சித்தியடைந்தவர் பெற
சிறகுடைந்து அவள் ஒதுக்கப்படும் போது…
அவளோ அரச ஊழியரின்
(துர்)அதிர்ஷ்ட பிறவி!

பள்ளி கலைந்து
பிள்ளைக்காய் காத்திருப்பாள்
அன்னையவள் அறைதனிலே…
பள்ளி முடிந்து
பசியும் சுமந்து
உச்சி வெயில்
நச்சென நடுமண்டை பிளக்க
தாகமும் களைப்பும்
தயவேதுமின்றி வாட்டி வதைக்க
கதவோரம் காத்துக் கிடப்பாள்
கசங்கிக் கறைபடிந்த ஆடையுடன்
தன் தாயின் வருகைக்காய்!
இவளோ அரச ஊழியரின்
(துர்)அதிர்ஷ்ட பிறவி!

தகதகவென களிக் கெண்டி
களிக்குள்ள குழி வெட்டி
கருப்பெட்டி நல்லெண்ணெய்
கலந்து
அன்னையவன் விரல் பட
ஆர்வமாய் உண்டதோர்
தலைமுறை – என் தாயின் தலைமுறை…

ஆறிப்போன சோறு
வற்றிப்போன மீன் கொழம்பு
பத்திப்போன கருவாட்டுப் பொரியல்
என அவ்வப்போது சலனமற்று
அதுவே கொஞ்சம் விருப்பமென
அறுந்த பொய் சொல்லி
அன்னையவளின் மனம் கோணாது
அங்கலாய்த்த பொழுதுகளும் உண்டு!
இவளோ அரச ஊழியரின்
(துர்)அதிர்ஷ்ட பிறவி!

மகாப்பொல வந்துவிட்டதை
கலகல சிரிப்புடன்
கங்கணங்கட்டிக் கொண்டாடும்
நட்புக்களை-
அக்கவுண்ட்டில் சல்லி காசும் இல்லையென காட்டிக் கொள்ளாது
உள்ளங்கை தாங்கிய
ஓரிரண்டு நூறு நோட்டுகளை
இறுகப் பிடித்தவாறு
கர்வம் கலந்த புன்னகையுடன்
கடந்து சென்ற அனுபவமும் உண்டு!
அவளோ அரச ஊழியரின்
(துர்)அதிர்ஷ்ட பிறவி!

Sheefaibraheem
Hudhaaiyyah
Maruthamunai
SEUSL (FIA)

அரச ஊழியர்களின் பிள்ளைகளால் மட்டும் உணரமுடியுமான வலியின் கோலங்கள் இவை காலைக் கண்விழித்து தாயவள் அரவணைப்பில் தயங்காமல் மீண்டும் சுருண்டு படுத்திட… பாசமாய் தலை வருடி பக்குவமாய் வாரியணைத்து நெற்றிப் பொட்டில் நெருக்கமாய் முத்தமிட்டு…

அரச ஊழியர்களின் பிள்ளைகளால் மட்டும் உணரமுடியுமான வலியின் கோலங்கள் இவை காலைக் கண்விழித்து தாயவள் அரவணைப்பில் தயங்காமல் மீண்டும் சுருண்டு படுத்திட… பாசமாய் தலை வருடி பக்குவமாய் வாரியணைத்து நெற்றிப் பொட்டில் நெருக்கமாய் முத்தமிட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *