மனநிம்மதி

அகமெனும் மனையதிலே
நிம்மதியெனும் ஒளிக்கீற்றை
நிரந்தரமாய் – நீ பெற்றிடவே
புரட்டிடு குர்ஆனதை
புரிந்திடுவாய்-பல்லுண்மைகளை!

கண்காணா சுவனமதின்
சுவாரசியங்கள் – உன்னைக் கவர
களியாட்ட நிகழ்வுகளும்
கரைந்து விடும் – அந்நொடியில்

சோதனைகள் பல சுமந்திங்கு
சாதனைகள் பல புரிந்திட்ட
சத்திய தூதர்களின் வரலாற்றை
சற்றே நீ மீட்டிட்டால்
சளிப்பாய் – உன் சோதனையை
“இதுவல்ல தோதனையென்று”
தாழ்ந்தோனின் நிலை கண்டு
தயாளனைப் புகழ்ந்தங்கு
தாம் பெற்ற அருளுக்காய்
நன்றிகள் பல நவில்ந்திட்டால்
அடைவாய் – நீ நிம்மதியை!

பார்ப்போர்க்காய் என்றன்றி
படைத்தவனுக்காய் என்றாகி
தொடர்ந்திட்டால் வேலைகளை
தொட்டிடலாம் – நிம்மதியை!

பாரமான உள்ளமதை
பொறுப்பாளன் அல்லாஹ்விடம்
பொறுமையுடன் சாட்டிட்டால்
பெறுவாய்-நீ நிம்மதியை!

“அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலமே இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க” (13:28)

J.Noorul Shifa (SEUSL)

One thought on “மனநிம்மதி

Binthhashim

Reply

Mashallah fabulos one 👌

February 14, 2020 at 2:58 am

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: