அல்லாஹ்வை மட்டும் அஞ்சுவோம்

وَهُوَ اللَّهُ فِي السَّمَاوَاتِ وَفِي الْأَرْضِ يَعْلَمُ سِرَّكُمْ (6:3) وَجَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُونَ.

அவனே வானத்திலும் பூமியிலும் வணங்கப்படக் தகுதியானவன், அவன் உங்களின் இரகசியங்களையும் மற்றும் பகிரங்கங்களையும் நீங்கள் சம்பாதிக்கும் ஒன்றையும் நன்கு அறிந்தவன் . அல் குர் ஆன் : (அன்ஆம் : 3 )

நிச்சையமாக அல்லாஹ் இரசியத்தை இரசியமாக இருப்பதற்கு முன்பே அறிந்தவன். ஒவ்வொரு செய்தியும் வெளிச்சத்திற்கு வருமுன் இரகசியமே, இரகசியம் இரகாசியமாக மாறுவதற்கு முன்பே அல்லாஹ் அறிந்தவன் இரகசியத்தை விடவும் மறைவாக இருப்பதையும் அறிந்தவன் அல்லாஹ். இமாம் ஷஃராவி அல் குர் ஆன் விரிவுரையாளர் எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம்.

நமது அனைத்து காரியங்களையும் அல்லாஹ் மிக அறிந்தவன், நாங்கள் பிகிரங்கமாக வெட்ட வெளிச்சதில் செய்யும் காரியங்கள் ஆனாலும் சரி கருண்ட இருளில் இரகசியமாக செய்யும் காரியங்களாக இருந்தாலும் சரி அல்லாஹ் அதனை மிக அறிந்தவன். அது போலவே நாங்கள் சம்பாதிப்பது ஹலாலா ஹராமா என்பதையும் அவன் நன்கறிந்தவன். அவன் எதையும் மறந்து விட்டான் என்று மனிதனே நீ நினைத்து விடாதே . நாம் செய்யும் அணு அளவு நன்மை தீமை அநியாயம் அனைத்தும் அவனிடம் எந்தவொரு கூட்டல் குறைத்தலுமின்றி பதியப் பட்டிருக்கும். அதடற்காக கிடைக்கும் கூலிகளும் எந்தவித கூட்டல் குறைத்தலுமின்றி அல்லாஹ்வால் வழங்கப்படும் அவன் யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டான் அவன் நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதி.

எங்கள் ரகசிய வெளிரங்க எல்லாக் காரியங்களிலும் எம்மையும் அந்த காரியங்களையும் படைத்த அல்லாஹ்வை மட்டும் அஞ்சிக் கொள்வோம். அவன் கண்காணிப்பை மட்டும் பயப்படுவோம். அமல்களை சீராக்கிக் கொள்வோம் .

P.T. kaseer Azhari

Leave a Reply