வாசி யோசி மாறு

  • 7

இதனையும் எத்தனை பேர் வாசிப்பார்களோ என்பதும் ஒரு கேள்விதான் ????

“இறைவனின் முதல் கட்டளையே “வாசிப்பீராக” என்றே தொடங்குகிறது. அதுவே சான்று வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கு. ‘நூலகங்கள் இன்று ஆரம்ப பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை வளர்ந்துள்ளது’. ஆனால் இதனை பயன்படுத்துவதற்கும் பயன்பெற செய்வதற்கும் முயற்சிகள் போதுமானதாக உள்ளதா? என்பதும் ஒரு கேள்விக்குறி.

நூலகங்கள் பெருகி வருகின்ற அதே நிலையில் வாசிப்பு பழக்கம் அரிதாகி வருகிறது. இது அண்மைக்கால ஆய்வுகளின் முடிவுகள். தற்காலத்து மாணவர்களது வாசிப்பு பழக்கம் பத்திரிகைகளின் தலைப்பு, படங்கள் பார்ப்பதோடு முடிவடைகிறது.

‘வாசிப்பு ஒரு மனிதனை பலதரப்பட்ட துறைகளில் வளர்க்கும்,’ ‘அதேபோல் வாசிப்பு மூலம் அறிவு தேடல் ஆர்வம் கூடுகிறது.’ ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தை முடிப்பதன் மூலம் சான்றிதழ்களைப் பெரும் கல்வி குறுகிய வட்டம் கொண்டது.

கல்வி நிறுவனமொன்றில் படிக்காதவனும், அல்லது சிறியதொரு தரத்தோடு அக்கல்வி நிறுவனத்தை விட்டு வெளியேறியவனும் வாசிப்பால் உயர்கிறான்; அறிஞனாகிறான். எத்தனையோ சான்றுகள் உள்ளன.

‘வாசிப்பே கல்வியை முழுமைப் படுத்துகிறது, ஆழமாக்குகிறது, விரிவுபடுத்துகிறது.’ அது பல்வேறு சிந்தனைத் தளங்களைக் காட்டும் நாடுகளையும், சமூகங்களையும் அறிய உதவும்.

வாசிப்பு கல்விக்காக, வெறும் பொழுது போக்குக்காக அல்ல என்ற அவதானம் மிக முக்கியமானது. இந் நிலையில்தான் அது அறிவு தேடலுக்கான அனைத்துப் பண்புகளையும் பெறும். இல்லாவிடின் அதில் எவ்வித பயனையும் எதிர்ப்பார்க்க முடியாது. ஆக வாசிப்பு இல்லாமல் கற்றல் எனும் செயற்பாடே நிறைவு பெறாது.

‘வாசிப்பின் மூன்று கூறுகள்.’

  1. தான் கற்ற துறையை விரிவுபடுத்தலுக்காகவும், அதில் ஆழ்ந்து செல்வதற்காகவும் வாசித்தல்.
  2. அறிவின் புதிய பரப்புகளை அறிந்து கொள்ள வாசித்தல்.
  3. பொது வாசிப்பு.

அந்தவகையில் ஒரு சிறந்த வாசகனால் மட்டுமே சிறந்த எழுத்தாளனாக முடியும். ஒரு சிறந்த எழுத்தாளனால் மட்டுமே சிறந்த பேச்சாளனாக முடியும். ஆகவே மனித தொடர்பாடலின் மையப்புள்ளியே வாசிப்பு ஆகும்.

‘ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன்! என ‘மகாத்மா காந்தி’ கூறியுள்ளார். இதே போன்றுதான், உலகின் தலைச்சிறந்த தத்துவ ஞானியான ‘சோக்ரடீஸ்’ தனக்கு நஞ்சூட்டப்படும் வரை வாசித்துக் கொண்டு இருந்தார் என்பது வரலாறு கண்ட உண்மை. வாசிப்பதன் மூலம் ஒருவனது மொழித்திறன் விருத்தி, சொல்வான்மை, பொது அறிவு வளர்ச்சி தன்னம்பிக்கை ஆளுமை விருத்தி ஞாபகசக்தி, அதிகரிப்பு, கிரகித்தல் என்பன எம்முன் வளர்கிறது. எனவே, மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு வாசிப்பு. வாசிக்காதவன் அரை மனிதன் ‘வாசிப்பவனே’ முழு மனிதன் ஆவான்.

“அப்துல் கலாம்” கூறிய கூற்று மிகவும் தாக்ககரமானதாக உள்ளது. அவர் கூறினார். “நல்ல புத்தகங்கள் நல்ல கனவுகளை உருவாக்கும்.” நல்ல கனவுகள் நல்ல எண்ணங்களை உருவாக்கும்.” நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும் என்றார்.”

“ஜவஹர்லால் நேரு அவரிடம் கேட்கப்பட்டது”. தனிமையில் வைத்தால் என்ன செய்வீர்கள் “புத்தகங்கள் இருந்தால் தனிமையும் இனிமைதான்” என்றார்.

ஆக எழுச்சியாளர்கள் அனைவரும் பெரும் வாசிப்பாளர்களே என்பதை நாம் மறந்துவிட்டோம். எனவே வாழ்க்கையில் உயரவேண்டுமா? சாதிக்கவேண்டுமா? எப்போதும் உனக்கு கை கொடுக்கும் சக்தி வாசிப்பே.

“வாசி யோசி மாறிவிடு”

Faslan Hashim
Islahiyya Arabic collage
SEUSL
BA®

இதனையும் எத்தனை பேர் வாசிப்பார்களோ என்பதும் ஒரு கேள்விதான் ???? “இறைவனின் முதல் கட்டளையே “வாசிப்பீராக” என்றே தொடங்குகிறது. அதுவே சான்று வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கு. ‘நூலகங்கள் இன்று ஆரம்ப பள்ளி முதல் பல்கலைக்கழகம்…

இதனையும் எத்தனை பேர் வாசிப்பார்களோ என்பதும் ஒரு கேள்விதான் ???? “இறைவனின் முதல் கட்டளையே “வாசிப்பீராக” என்றே தொடங்குகிறது. அதுவே சான்று வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கு. ‘நூலகங்கள் இன்று ஆரம்ப பள்ளி முதல் பல்கலைக்கழகம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *