நீ வந்து போன வாசனை நெஞ்சோடு

இமைக்காது விழித்தேன் – நான்
இரவுகளை தொலைத்தே
பேசாது மௌனித்தேன் – நான்
கெஞ்சல்களை ரசிச்தே

இரவல்கள் வாங்கினேன் – நான்
இதயத்தை தொலைத்தே
நூலகம் மறந்தேன் – நான்
அவள் நூலியிடை ரசித்தே

கருமேகம் சந்திப்பில் – நான்
கார்கூந்தல் ரசித்தேன்
விண்மீனை விலைபேசி – நான்
அவள் கரும்புள்ளி மச்சங்கள் ரசித்தேன்

நதிசேரும் பாலமாய் – நான்
அவள் விழியிமை ரசித்தேன்
பிரமிடுகளின் அதிர்வில் – நான்
முன்கோபுரங்களின் அழகை ரசித்தேன்

ஒவ்வொரு பக்கமாய் – நான்
பக்குவமாய் படித்தேன்
என்னை இழந்தே – நான்
பாவையவளை செதுக்கினேன்

தேரோடும் பாதையில் – நான்
தெருவிளக்காய் காத்திருந்தேன்
அணை கடந்த வெள்ளமாய் – நான்
உன் குரல்தேடி அலைகிறேன்

வறண்ட நிலத்தில் பூத்த மலராய் வாடுகிறேன் – நான்
நீ வந்து போன வாசனை நெஞ்சோடு
ஒவ்வொரு நாழிகையும் வருவாய் நீயேன – நான்
தூக்கத்திலும் விழித்திருக்கிறேன்.

அனுகவி றிப்கான்,
அட்டாளைச்சேனை – 06

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: