சிதைக்கப்படும் கல்வி

  • 10

கல்வி என்றால் மனிதனது அறிவு¸ திறன்¸ மனப்பாங்கு என்பவற்றில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகும். இன்று நாட்டிலுள்ள கல்வி முறைகளானது பல்வகைமைப்பட்டு இருப்பதனைக்காணலாம். ஆரம்பக் கல்வி¸ இடைநிலைக் கல்வி¸ பல்கலைக்கழக கல்வி உள்ளடங்கிய உணர் கல்வி¸ பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக் கல்வி¸ தொழிநுட்பக் கல்வி¸ வளந்தோர் கல்வி¸ வாழ்க்கை நீடித்த கல்வி¸ தொடர் கல்வி என பலவாறு இனங்காணலாம்.

இவ்வாறான கல்வி முறையானது மாணவர்களின் அறிவை வளர்த்தாலும் அது அவர்களின் எதிர்கால வாழ்வை திட்டமிடலுடன் நடைமுறைப்படுத்த வகிபங்காகின்றதா? என்ற விடை அறிய வினா அவசியமானது எனக் கருதுகிறேன்.

இன்று இலங்கையில் அண்ணலவாக 10¸ 194 (2017ம் ஆண்டு கணிப்பின்படி) அரசாங்க பாடசாலைகளில் 1:17 ஆசிரியருக்கு மாணவர் எனும் விகிதாசாரத்தில் மாணவர் கற்கின்றனர். அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் தொகையானது 2¸41¸591 ஆகும். மேழேத்தேய நாடுகளோடு இலங்கையை ஒப்பிடும் போது எமது நாட்டின; கல்வி முறை பராட்டப்பட வேண்டியதாகும். அத்துடன் இந்தியா¸ பங்களாதேஸ்¸ பாக்கிஸ்தான் ஆகிய நாட்டினரின் சராசரி கல்வித்தகுதி தரம் 5 வரை மட்டுமே. ஆனால் நம்நாட்டின் கல்வித்தரம் சராசரி தரம் 9 வரை என்பதை பெறுமையுடன் கூறிக் கொள்ள முடியும். அத்துடன் இலங்கையில் அரசாங்க பாடசாலைகளும்¸ பல்கலைக்கழகங்களும் கடந்த 80 வருடங்களாக இலவசக் கல்வியையே வழங்கி வருகின்றன. அத்துடன் புலமை பரிசில்¸ மகாபொல வசதிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அது மட்டுமன்றி இலவச பாடநூல்¸ இலவச சீறுடை¸ பாதணிகள் போன்றன வவுச்சர் முறையின் அடிப்படையில் ஒவ்வொரு தரத்திற்கும் ஏற்ப வழங்கப்படுவது அனைவரும் சமன் என்ற யாவருக்கும் கல்வி எனும் சித்தாந்தக் கொள்கையின் அடிப்படையிலேயாகும்.

இவ்வாரான கல்வி சமப்படுத்தப்பட்டு ஏழை¸ பணக்கார வேதமின்றி அனைவருக்கு வழங்கியும் இலங்கை கல்வியானது பல சவால்களுக்கு முகங்கொடுப்பதனை தற்போது இனங்காணலாம். அவ்வாரான கல்வி முறைமையில் காணப்படும் சவாலாக அரசின் நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினை காணப்படுகிறது. அரசாங்கம் இன்று பெருமளவு நிதியை கல்விக்காக ஒதுக்குகின்றது. சுதந்திர காலம் தொட்டு செய்யப்பட்டு வந்த உதவி அண்மைக்காலங்களில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி¸ போருக்கான செலவு போன்றதால் கல்விக்கான நிதி பின்னடைவால் இருந்தது எனலாம். இலங்கையில் தேசிய வருமானம்¸ அரசாங்க செலவு என்பவற்றுடன் கல்வி செலவை ஒப்பிட்டுக்கானும் விகிதாசாரமும் 1998 முதல் குறைந்து சென்றுள்ளது. தேசிய வருமானத்தின் விகிதாசாரமாக கல்விச் செலவு 1998ல் 3.1 ஆக இருந்து 2019ல் வீதமானது. இன்று மிகவும் கஸ்டங்களின் மத்தியில் வருடத்திற்கு 4000ம் கோடி கல்விக்காக ஒதுக்கப்படுகிறது.

பெற்றோர்கள் கல்வியில் பின்தங்கியிருத்தல்¸ பிள்ளைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்தாமை¸ பிள்ளைகள் பாடசாலைக்கு தவறாமல் செல்வதற்கு பெற்றோர்களின் கவனமின்மை போன்றவையே மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்தலில் உள்ள ஒழுங்கின்மையாகும். அத்துடன் மாணவர்களின் குடும்ப சூழல் முக்கிய காரணி. குறிப்பாக தாய் வெளிநாட்டில் பணிபுரிதல் இதன் காரணமாக அரவனைப்பின்றிய சூழல்¸ கல்வியின் மகிமை புரியாத விளையாட்டுத்தனம் போன்றவை காரமாக ஒழுக்கமற்ற சமூகமளிப்பு எனலாம்.

படிப்பிற்கேற்ற தொழிலின்மை¸ ஊதியமின்மை போன்றன தற்கால கல்வி உலகு எதிர்நோக்கும் சவாலாகும். இன்று மாணவர்கள் தங்களை கல்வியில் அர்ப்பணித்தும் எதிர்காலத்திற்கான வேலை வாய்ப்பினை முறையாக பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளமை வருத்தத்திற்கான விடயமாகும். இன்று பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் வேலையின்றி வீதி வீதியாக கூச்சலிடுவதும்¸ போராட்டம் புரிவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டே வேலைவாய்ப்பினை பெற வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இது தொழில் உலகிற்கும் கல்வி உலகிற்கும் இடையில் உள்ள இணக்கமின்மையாகும். ஆகவே¸ தொழிற்கல்வியினை பெற்றுத் தரக்கூடிய கற்கை நெறிகளை பல்கலைக்கழகங்களில் அமுல்படுத்துவதால்¸ கற்கை நெறியை முடித்து வேலையற்று இருக்கும் நிலையினை மாற்றியமைக்க முடியும். காலம் மாறவே கல்விக்கான கொள்கைகளும் மாற்றம் பெற வேண்டும். இலங்கையில் கல்வித்திட்டமானது 08 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றமடைகின்றது. இதனூடாக தேவையானவை கருத்திற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் இலங்கையின் கல்வி முறையானது நூற்கல்வியினை மையமாகக் கொண்டது. எனினும் தொழிநுட்ப விருத்தி காணாத கல்வி நவீன உலகிற்கு பொருத்தமற்றதை ஏனைய நாடுகள் நிரூபிக்கின்றன. இந்தியா, ஜப்பான், சீனா போன்றவை நவீன தொழிநுட்பங்களில் மாணவர்களுக்கு கல்வி புகட்டுவது இலங்கை கல்வி எதிர்நோக்கும் சவாலாகும்.

பொருளாதார நெருக்கடியானது வறிய மக்களின் கல்வித் தரத்தினை பின்னடைவான நிலைக்கு தள்ளி விடுகின்றது. பொருட்களின் விலையேற்றம் காரணமாக வறிய குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இடைநிறுத்தம் செய்வதால் ஊக்கமுடைய திறமையான மாணவர்கள் அறிவு ரீதியில் முடக்கப்பட்டு அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது. ஆகவே¸ அரசு இவர்களின் தேவை கருதி பொருளாதாரத்தை குறைக்கவோ அல்லது பாடசாலைகளில் மேலதிக தேவைகளை இலவசமாக மாற்றி அமைக்கவோ வழி அமைத்தால் இன்னும் சிறந்தது என்பது தனிப்பட்ட கருத்தாகும்.

பிரித்தானியரின் சுதேச வருகையினால் கொண்டுவரப்பட்ட மொழியாக ஆங்கில மொழி காணப்படுகிறது. இன்று சகல நாடுகளிலும் பொது மொழியாக ஆங்கில மொழி வலம் வருகிறது. இது 1956ம் ஆண்டு சட்டத்திற்கு அமுல்படுத்தப்படுகிறது. இன்றைய காலத்தில் தொழில் வாய்ப்பிற்கான விண்ணப்ப்படிவம் பூரணப்படுத்துவதற்கு கூட ஆங்கில மொழி அறிவு அவசியமாகும். பாடசாலை¸ பல்கழைக்கழகங்கள்¸ நிறுவனங்கள்¸ வேலைத்தளங்கள் போன்ற சகல இடங்களிலும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கில மொழி அறிவின்மையினால் தொழில் வாய்ப்பை சகல பாடங்களிலும் திறமையுள்ளவன் இழப்பதற்கு உள்ளாகின்றான் இன்றைய காலத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் ஆங்கிலத்தில் C சித்தி அவசியமாகும். ஆகவே¸ இதனை மாணவர்கள் அறிந்து தேர்ச்சி பெறவே 6-11 வரையான தரங்களில் ஆங்கிலப்பாடம் கட்டாயப்பாடங்களில் ஒன்றாக உள்ளது. அனைவரும் ஆங்கில மொழியறிவைப் பெறுவது அவசியமானதாகும். உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைக்கழகம் கிடைத்தும் அதற்கான சுமார் 1 வருடம் காத்திருந்தும் பின்பு அதில் சிறந்த கற்கை நெறியினை குறைந்தது 3 வருடங்கள் நிறைவு செய்த பின்னர் தொழில் வாய்ப்பிற்காக 1 வருடம் போன்று காத்திருந்தே ஒருவனது வாழ்க்கை கேள்விக்குறியாகின்றது. இதனால்¸ வயது முதிர்ந்த நிலையிலேயே பட்டங்களைப்பெற்று தொழில் வாய்ப்பினை தேடும் அவலநிலைக்கு இன்றைய திறமைமிக்க மாணவர் சமுதாயம் தள்ளப்பட்டிருக்கின்றது. பரீட்சை வினாத்தாள்கள் மொழி மாற்றம் செய்யப்படும் போது பிள்ளைகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் என்பனவும் இன்றைய கல்வி எதிர்நோக்கும் சவாலாகும். இது பொதுவாக 5ம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த(சா. தர)¸ க.பொ.த (உயர் தர) ஆகிய பரீட்சைகளில் காணலாம். உதாரணமாக 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் “நீர் வளம்” என்பது பற்றி எழுத வேண்டப்பட்டது. ஆனால் இங்கு மாணவர்கள் நீர் என்பதை இரு வேறு அர்த்தம் கொண்டு அதனை பிரயோகித்தலை ஒரு சவாலாகும்.

தகவல் தொடர்பாடல் அறிவின்மை¸ சர்வதேச நிறுவனங்கள் கல்வியில் ஆதிக்கத்தை செலுத்துதல் (உலக வங்கி) யுத்தம்¸ இயற்கை அனர்த்தம் போன்றவற்றின் விளைவுகள் கல்வி வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகின்றமையினைக் காணலாம். இலங்கையின் கல்வி முறையில் காணப்படும் சமகாலப் பிரச்சினைகள் ஏராளமானவை இதனை தவிர்க்கும் முகமாக அரசும்¸ ஆசிரியர்களும்¸ மாணவர்களும் இயன்ற அளவு தம்மை வளப்படுத்தி கல்வியில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இன்றைய மாணவ சமுதாயம் எதிர்கொள்ளும் சவாலாகும். கல்விக் கோட்பாடுகள் மாற்றங்களிற்கு உள்ளாகும் போதே வினைத்திறனான இளைஞர்¸ மாணவ சமுதாயத்தினை உருவாக்க முடியும். இதனூடாக சிறந்த எதிர்காலத்தினை தொழிற்கல்வியுடன் பெற்றுக்கொள்ளலாம். என்பதை தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்.

றிஸ்வான் ஜுஸ்லா
2ம் வருடம்
கல்வி பிள்ளைநலத்துறை¸
கிழக்குப் பல்கலைக்கழகம்¸
வந்தாறு மூலை.
இலங்கை

கல்வி என்றால் மனிதனது அறிவு¸ திறன்¸ மனப்பாங்கு என்பவற்றில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகும். இன்று நாட்டிலுள்ள கல்வி முறைகளானது பல்வகைமைப்பட்டு இருப்பதனைக்காணலாம். ஆரம்பக் கல்வி¸ இடைநிலைக் கல்வி¸ பல்கலைக்கழக கல்வி உள்ளடங்கிய உணர் கல்வி¸ பாடசாலையில்…

கல்வி என்றால் மனிதனது அறிவு¸ திறன்¸ மனப்பாங்கு என்பவற்றில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகும். இன்று நாட்டிலுள்ள கல்வி முறைகளானது பல்வகைமைப்பட்டு இருப்பதனைக்காணலாம். ஆரம்பக் கல்வி¸ இடைநிலைக் கல்வி¸ பல்கலைக்கழக கல்வி உள்ளடங்கிய உணர் கல்வி¸ பாடசாலையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *