நீ வந்து போன வாசணை நெஞ்சோடு

  • 8

உன்னில் வந்த மையலால் மமதை கொண்டு
வெறுங்காலிலும் கூட வெயிலில் நின்றேன்
வியர்வை தந்ததாக இருந்த போதும்
வேதனை தரவில்லை அந்தப் பொழுது

உன் வார்த்தை ஒன்றிற்காய்
நீடித்த என் நாட்கள் நதியாய் ஓடியது
நான் பறித்து வந்த பூக்கங்களின் வாசங்கள்
எல்லாம் நீ விட்டுச் சென்ற மிச்சங்கள்தான்

எச்சங்கள் உண்ணும் எறும்பைப் போல
மிச்சமின்றி பருகிக் கொண்டேன்
உன் மொழிகளை எல்லாம்
தெட்டத் தெளிவாக விளக்கிச் சென்றாய் தேவையில்லை உன் காதல் என்று

மௌனத்தில் அமர்ந்திருந்த எனக்கு
மரணத்தை உண்டு பண்ணியது
இந்தக் காதலர் தினம்

நீ வந்து போன வாசணை
என் நெஞ்சோடு இருக்கும் வரை
நீ தந்து போன காயங்களும்
நீங்காது என்னை விட்டு

இன்னும் வாசிக்க நினைக்கிறேன்
ஆனால் என் விழிகளில் வந்த கண்ணீர்
அந்த வரிகளை மறைக்கிறது

கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை -08

உன்னில் வந்த மையலால் மமதை கொண்டு வெறுங்காலிலும் கூட வெயிலில் நின்றேன் வியர்வை தந்ததாக இருந்த போதும் வேதனை தரவில்லை அந்தப் பொழுது உன் வார்த்தை ஒன்றிற்காய் நீடித்த என் நாட்கள் நதியாய் ஓடியது…

உன்னில் வந்த மையலால் மமதை கொண்டு வெறுங்காலிலும் கூட வெயிலில் நின்றேன் வியர்வை தந்ததாக இருந்த போதும் வேதனை தரவில்லை அந்தப் பொழுது உன் வார்த்தை ஒன்றிற்காய் நீடித்த என் நாட்கள் நதியாய் ஓடியது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *