முகமூடி

  • 32

அன்பு எனும் சொல்லில் அடைக்கலம் புகுந்த
உறவுகள் விளை மதிப்பு இல்லை
என்பதற்காக அன்பு என்ற சொல்லை
முகமூடியாய் அணிந்துக் இருக்கிறாய்
உன் முகமூடியை கழட்டிவிட்டு கண்ணாடி
முன் முகம் பார்க்கும்போது
வெட்கத்தில் வீழ்ந்து போகவில்லையா

ஓ மனித முகமூடி என்று சொன்னது
உள்மனதில் யொன்றை வைத்து கொண்டு
வெளித்தோற்றத்தில் நல்லவனாய் நடக்கிறாயா
வாக்குகள் பல கொடுத்தோம்
வாய்க்கு வாய் வறைவிலக்கணம் சொல்லி
திருந்த இடம் தெரியாமல் போனதை மறந்துவிட்டாயா

கல்வியனும் சொத்தை கையிலேந்தி
லஞ்சம் எனும் காகிதத்துக்கு
ஏன் மடிந்து போகிறாய்

நல்லவன் என்ற போர்வைக்குள் வாழ்கிறாய்
உன் முகமூடி தெரியாமல் கல்வியறிவு அற்றவர்கள்
உன்னிடம் தஞ்சம் புகுந்தானல
உன் முகமூடி இன்னும் கிழியாமல் இருக்கிறது

காசி இருக்கின்றது என்பதற்கு
மாடிவிட்டில் வாழ்கிறாய்
ஓலை குடிசையில்தான் பிறந்தாய்
என்பதை மறந்து
உன் முகமூடி இல்லாமல்
உன் உதிரத்தால் பிறந்தவர்கள்
முன் சென்ற விடாது இதுவா
என்னை பெற்றவர்கள் என்று எண்ணிவிட கூடும்

எத்தனை உறவுகள் முகமூடி அணிந்து
உன்னதத்தை சொல்லித்தரும் சமயம்
சான்றோர்கள் ஊருக்குத்தான்
கட்டுப்பட மனம் உனக்கில்லையா

முகமூடி அணிந்து கண்சிமிட்டும் நேரத்தில்
காதல் செய்கிறாய்
உன் முகமூடி கிழித்து எறியப்பட்டால்
உன்னை நேசித்த இதயத்தில்
கண்ணீர் வரும் என்று மறந்து வாயால்
அன்பாய் பேசி இதயத்தை இடம் கொடுக்காமல்
இதுவா காதல் ஊருக்குள்
நல்ல பிள்ளையாம் முகமூடி அணிந்து

இத்தனை முகமூடிகளையும் பார்த்துக்கொண்டு
பூமித்தாய் வலிவிட்டு சிரிக்கிறாள்
மூச்சடங்கியதும் முடங்கிட
என்னிடம்தான் வரவேண்டும் என்று

கவிதை காதலன்
அக்குரணை லஷாட்

அன்பு எனும் சொல்லில் அடைக்கலம் புகுந்த உறவுகள் விளை மதிப்பு இல்லை என்பதற்காக அன்பு என்ற சொல்லை முகமூடியாய் அணிந்துக் இருக்கிறாய் உன் முகமூடியை கழட்டிவிட்டு கண்ணாடி முன் முகம் பார்க்கும்போது வெட்கத்தில் வீழ்ந்து…

அன்பு எனும் சொல்லில் அடைக்கலம் புகுந்த உறவுகள் விளை மதிப்பு இல்லை என்பதற்காக அன்பு என்ற சொல்லை முகமூடியாய் அணிந்துக் இருக்கிறாய் உன் முகமூடியை கழட்டிவிட்டு கண்ணாடி முன் முகம் பார்க்கும்போது வெட்கத்தில் வீழ்ந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *