நாளை வரும் நாள்

  • 10

அச்சம் தீர்க்கும் ஓர் நாள்
மடமை உடைத்தெறியும் அந்நாள்
வரும் என் ஏக்கம் தனிக்க
பொல்லாதவர் நிலை பேதலிக்க
நல்லவர் வழி அமல் கணத்து நிற்க
நியாயங்கள் இழந்து நின்ற இடங்களிலெல்லாம்
நீதி நிலைக்க வரும்
எனக்கான அந்த நாள்

விதியென்போர் அதை
மதியேற்பதில்லை
உயிர் பிரிந்தால் உண்டு
உலகொன்று மறைவாய்
செயல் நிறுக்க வரும்
நாளதில் நம்பிக்கை இல்லை

உருகும் இரும்பு விழுந்து துடிக்கும் வேதனைக்கப்பால்
உலக நெருப்பை விழுங்கிக் கொள்ளும்
அக்கினிச் சுவாலையில் அவித்தெடுக்கும் நாளொன்று வரும்

மலர்ந்து மணம் பரப்பும் பொய்களை
நீச்சலிட்டுப் பாயும் கொடூரங்களை
நிமிர்ந்து மளியும் அநீதிகளை
பொசுக்கி எறியும்
கொள்கை கொண்ட நாள்

நீதி உள்ளவரை
தலை காக்கும்
கவச நாள்

பாவங்கள் நிறைந்த மண்ணில்
பாவிகள் சுதந்திரம் காண
அப்பாவி மக்கள் அடிமையாகி
சுருளும் அவலம் நீங்க
அநீதிக்கு துணையான

அத்தனையோரும் வியக்க
விஞ்ஞானம் மறுக்கா
அஞ்ஞானம் கொண்ட
அவன் வாக்கு நிலைக்கும் நாள் வரும்

தரையில் நெற்றி பதித்து
சிறம்பணிய அலட்சித்தவரும்
சேமித்த செல்வங்கள் சேர்ந்தொழுக சதையோடு கொடுத்துதவ ஸக்காத்தை மறுத்தவரும்

மாதமெல்லாம் நோன்பிருந்து
பலனின்றி யதை பறக்க விட்டவரும்
தீனை ஏற்று அதன் தூண்களைத் துண்டித்தவரும்
வியர்வையில் மூழ்க வெப்பத் தனலாய் வரும் அந்நாள்

நியாயம் நிலைக்கும்
உண்மை உயரும்
பாவிகள் பதறும்
நீதியின் பிறப்பிடம் காண ஏக்கம் தீர்க்க வரும்
அவன் வாக்கு நிலைக்கும் நாள்

ஏரூர் நிலாத் தோழி

அச்சம் தீர்க்கும் ஓர் நாள் மடமை உடைத்தெறியும் அந்நாள் வரும் என் ஏக்கம் தனிக்க பொல்லாதவர் நிலை பேதலிக்க நல்லவர் வழி அமல் கணத்து நிற்க நியாயங்கள் இழந்து நின்ற இடங்களிலெல்லாம் நீதி நிலைக்க…

அச்சம் தீர்க்கும் ஓர் நாள் மடமை உடைத்தெறியும் அந்நாள் வரும் என் ஏக்கம் தனிக்க பொல்லாதவர் நிலை பேதலிக்க நல்லவர் வழி அமல் கணத்து நிற்க நியாயங்கள் இழந்து நின்ற இடங்களிலெல்லாம் நீதி நிலைக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *