இளமை ஒரு மயிர்க்கல்

  • 14

சொல்ல முடியாத சொற்பனங்களும்
சோதித்துப் பார்க்க முடியாத சந்தோஷங்களும்
என இருண்ட உலகத்தில் இன்பமாய்
காலடி வைக்கிறது இன்றைய இளமை

நிலவின் ஒளியில் துயில நினைக்கும் இளமைப்பருவம் இன்று நினைவின்
மடியிலே துயில்ந்து கிடக்கிறது
பகல் கனவுகள் மறந்து
இரவில் பல கனவுகளோடு
நினைவும் நித்தம் வாடுகிறது
இளமையின் கனவில்
காதல் எனும் விஷம் கலந்து
கொஞ்சம் கொஞ்சமாய் கொள்கிறது
உடலை அல்ல உணர்வுகளை

இன்றைய இளைஞர்கள்
நாளைய தலைவர்கள் என்ற
வார்த்தையை மறந்து
தற்காலிக போக்கில்
தயக்கத்தோடு தடுமாற்றங்கள்
தோற்றுப் போனவனாய்
தோல்வியோடு காலம் கடத்த
காதலெனும் கரத்தை
கட்டி அணைக்கிறது
இன்றைய இளமை

இளமையில் நீ சாதிக்க
சரித்திரம் படைக்க
இரத்த நாளங்கள் துடிதுடிக்க
பல தோல்விகள் உன்னை
கட்டி அணைக்க
ஒவ்வொரு தோல்விகளும்
உன் முயற்சிக்கு உரமாய் மாறி
உன் ஒரு மாற்றத்திலும்
உன் இளமை எனும் உருவம்
தேரிய சாதனைகள் உன்டு தோழா

உன் இளமை என்னும் நேர் கோட்டில்
உன் சாதனை படிக்கட்டுக்களை
தொட்டுவிட நகர்ந்தது செல்ல
இடையிடையே ஆயிரம் தொந்தரவுகள்
உன்னை தொட்டு விட
முயற்சித்த போதும்
தூக்கி எறிந்துவிட்டு
முயன்று செல் மீட்டிடும்
சொப்பனங்கள் உன் வெற்றியில்
உன்னை வந்து சேரும்
என்ற நம்பிக்கையோடு

நீ இளமையில் கட்டிவிடும்
ஊஞ்சல் கயிறு தான்
உன் முதுமையிலும்
உன்னை இன்பமெனும்
சொர்க்க பூமியில்
சொப்பனங்கள் தர காத்திருக்கிறது
இளமை என்பது
காதலில் கடந்துவிட அல்ல
காலம் கடந்தாலும்
உன் புகழ் பாட
இளமை ஒரு மயிர்கல்

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

சொல்ல முடியாத சொற்பனங்களும் சோதித்துப் பார்க்க முடியாத சந்தோஷங்களும் என இருண்ட உலகத்தில் இன்பமாய் காலடி வைக்கிறது இன்றைய இளமை நிலவின் ஒளியில் துயில நினைக்கும் இளமைப்பருவம் இன்று நினைவின் மடியிலே துயில்ந்து கிடக்கிறது…

சொல்ல முடியாத சொற்பனங்களும் சோதித்துப் பார்க்க முடியாத சந்தோஷங்களும் என இருண்ட உலகத்தில் இன்பமாய் காலடி வைக்கிறது இன்றைய இளமை நிலவின் ஒளியில் துயில நினைக்கும் இளமைப்பருவம் இன்று நினைவின் மடியிலே துயில்ந்து கிடக்கிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *