குரங்கு மனசு பாகம் 21

  • 7

சர்மி தன் விதிகுறித்து வருந்திப்போக, “உம்மா உம்மா” என்று தாயோடே ஒட்டி இருந்தவள் தாய் ராபியாவின் விருப்பங்களுக்கு இனியும் இசைந்து போவதாயிருக்கவில்லை. அன்றைய நாள் தன் சிந்தனைகளை தன் விருப்பப்படி செயற்படுத்தியவள் தாயின் கதறலைக் கூட வாங்கிக் கொள்ளாமல், பூட்டியிருந்த அறையைத் திறக்காமலே பிலாலுக்கு அழைப்பு செய்தாள்.

“ஹலோ எதுக்கு கோல் பண்ணின நீ?” மறுபுறத்தில் பிலாலின் குரல் கடுமையாக இருக்க கண்ணீர் விட்டழுதாள் சர்மி.

“பிலால்.. பி.. பிலால்.. நான் என்ன சொல்ல வாரன்னு பெஸ்ட்டுக்கு கேளுங்க பிளீஸ். எனக்கு நீங்க தான் வேணும் பிலால். நான் உங்களத்தான் கலியாணம் முடிப்பன்.

“நான் தான் இப்போ தொழில் எதுவும் இல்லாம இருக்குறனே சர்மிமா” பிலால் நக்கலாய் சிரிக்க,

“எனக்கு அதப்பத்தி கவல இல்ல பிலால். நான் சொல்றத நல்லா கேட்டு கோங்க..”

“என்னா சொல்லும்மா..” சர்மி ஏதேதோ சொல்லவே, நீண்டதோர் பெருமூச்சுக்குப் பின் பதில் கொடுத்தான் பிலால்.

“ஐ யம் ரியலி சொறி சர்மி. நான் உன்ன தப்பா புரிஞ்சி கஷ்டப்படுத்திட்டன். மன்னிச்சிக்க சர்மி..”

“சரி சரி போதும். இப்போ சரி புரிஞ்சி கொண்டீங்களே! அது சந்தோஷம்.”

“ஹ்ம்ம்ம் சர்மி. என்ன நம்பி வார உன்ன கடைசி வர என்ன செஞ்சி சரி கண்காலங்காம பார்த்து கொள்வன். டோன்ட் வொரி டார்லிங்” பதிலுக்கு சிரித்த சர்மி, அழைப்பைத் துண்டித்து விட்டு தன் திட்டப்படி செயற்படத் துவங்கினாள்.

“சர்மி.. ஏய்! உம்மா சொல்றன் தானே. கதவ திற பிளீஸ்மா” மீண்டும் தாய் கத்தவே, முதலில் சென்று கதவைத் திறந்தாள்.

“புள்ள.. என்னம்மா? நான் ரொம்ப பயந்துட்டன்டா..”

எதுவும் பேசாத சர்மி, தனக்குத் தேவையான முக்கியமான விடயங்களை எல்லாம் எடுத்து மறைமுகமாய் வைத்து விட்டு தாய்க்கு சந்தேகம் வராத அளவுக்கு வழமை போன்றிருந்தாள்.

“அப்பாஹ்! சர்மி ஓகே ஆவிட்டாள் போல. நானும் மனசால என்ன நடக்குமோ ஏது நடக்குமோன்னு பயந்து பயந்து தான் இருந்தன். மெதுவா அந்த அதீக் தம்பி கூட பேசி அந்த விஷயத்தையே பார்த்தா சரி” வாடிப் போயிருந்த மகளின் முகத்தில் மீள் பிரகாசம் காண, தனக்குத்தான்  சந்தோஷத்துடன் பேசிக் கொண்டாள் ராபியா.

ஆனால் தான் மகளின் திட்டங்கள் குறித்து அந்தத் தாய்க்குத் தான் எதுவும் தெரியாமலிருக்கவே, அன்றிரவு தாய் ராபியாவுக்குத் தெரியாமல் பிலாலுடன் வீட்டை விட்டுப் போவதான சர்மியின் எண்ணம் நிறைவேறிட்டு. விடியற்காலை வழமை போன்று தலை முடியைக் கோதிக் கட்டிக் கொண்டே,

“மகள் எழும்புங்க! மகள் மகள்” நேரத்துக்கு சர்மியை எழுப்ப அலாறமாய் அறை வந்தாள் தாய் ராபியா.

கதை தொடரும்…
Aathifa Ashraf

சர்மி தன் விதிகுறித்து வருந்திப்போக, “உம்மா உம்மா” என்று தாயோடே ஒட்டி இருந்தவள் தாய் ராபியாவின் விருப்பங்களுக்கு இனியும் இசைந்து போவதாயிருக்கவில்லை. அன்றைய நாள் தன் சிந்தனைகளை தன் விருப்பப்படி செயற்படுத்தியவள் தாயின் கதறலைக்…

சர்மி தன் விதிகுறித்து வருந்திப்போக, “உம்மா உம்மா” என்று தாயோடே ஒட்டி இருந்தவள் தாய் ராபியாவின் விருப்பங்களுக்கு இனியும் இசைந்து போவதாயிருக்கவில்லை. அன்றைய நாள் தன் சிந்தனைகளை தன் விருப்பப்படி செயற்படுத்தியவள் தாயின் கதறலைக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *