குரங்கு மனசு பாகம் 22

  • 8

“சர்மி சர்மி எழும்புங்களே!” கத்திக்கொண்டே கட்டிலைப் பார்த்தவள் நடுங்கிப் போனாள்.

“ச… சர்மி… சர்.. சர்..மீ..”

சுற்றும் முற்றும் மகளைத் தேட எங்கும் தன் பிள்ளையைக் காணாத ராபியாவுக்கும் உலகமே இருண்டது போல் இருந்தது. அப்பொழுது தான் கட்டிலின் மேலிருந்த அக்கடிதத்தைக் கண்டவள் ஓடிச்சென்று பிரித்துப் பார்த்தாள். மகளின் முத்து முத்து எழுத்துக்களை சுமந்த அக்கடிதத்தில் ராபியாவின் கண்ணீர் முத்துக்கள் பதிய, அதை படிக்கும் அளவுக்கு அவளால் முடியாமலிருந்தது. “உம்மா நான் வீட்டுல இருந்து பிலாலோட வந்துட்டன்” என்ற வார்த்தைகளை மட்டும் தான் படித்திருப்பாள். தொப்பென்று நிலத்தில் விழுந்தவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

“என் புள்ள.. ஏன்டீ எனக்கு இந்தக் காரியம் பண்ணின? சர்மி.. ஐயோ! போயிட்டாளே! நீ இப்புடி செய்வாய்னு நம்பல்லயே.. நான் நம்பல்ல சர்மி.. எங்கடீ போன நீ? இந்த உம்மாவ விட்டு போக உனக்கு எப்புடி மனசு வந்திச்சி” கவலையை அடக்க முடியாமல் கதறி அழுதாள் தாய் ராபியா.

இங்கு சர்மி வீட்டிலே, மகளைப் பிரிந்த தாய் ராபியாவின் கதறல் சத்தம் கேட்டு சூழ இருந்தவர்கள் திரண்டு வர “என் புள்ள போயிட்டாள்” ஒப்பாரி வைத்தாள் ராபியா.

விடயத்தை ஊகித்துக் கொண்ட பக்கத்து வீட்டார் ஆளுக்காள் சொல்ல, சர்மி பிலாலுடன் ஓடி விட்டதாய் காட்டுத் தீ போல் எங்கும் செய்திபரவவே அவமானமும் கவலையும் வந்து அடைத்துக் கொண்டது ராபியாவுக்கு. மறுபக்கம் பிலாலுடன் ஓடிச் சென்ற சர்மி, அக் குடும்பத்தவர்களின் விருப்போடு அந்த இரவே பிலாலைத் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள, பிற்பாடு நடக்கவிருக்கும் விபரீதங்கள் குறித்து அவளால் ஊகிக்க முடியாமல் இருந்தது.

“சர்மி.. சர்மி இங்க பாரு”

“சொல்லுங்க..”

“சர்மி நாங்க இப்போ புருஷன் பொண்டாட்டியா ஒருத்தர ஒருத்தர் மதிச்சி புரிந்துணர்வோட வாழனும் சரியா?”

“ஹ்ம்ம்ம்”

“என்னடா? என்ன ஹ்ம்ம்? முகத்துல சந்தோஷமேயில்ல ஏன்டா?”

“இல்ல உ.. உம்மா.. என் உம்மாவ பார்க்கனும் போல இருக்கு…”

“உம்மாவா? இனி உனக்கு உம்மா கிடையாது. நான் தான் எல்லாம், அந்த உம்மா தானே நான் வேணாம்னு சொன்னாங்க? என்ன தேவல்லாத யாரும் எனக்கும் தேவல்ல. உனக்கும் தேவல்ல” வெடுக்கென்று பேசிய பிலால் அங்கிருந்து போக,

“என் உம்மாவ தேவல்லன்னு சொல்றாரு, இதுக்கு நான் சரி சொல்லனுமா? என் உம்மா.. என் உம்மா இப்போ என்ன கஷ்டப் பட்றாவோ, நான் அவவ பார்க்கனும். உம்மா நீங்க என்னம்மா செய்றீங்க? அவசரப்பட்டு வந்துட்டன்மா. என்ன மன்னிச்சிக் கோங்கம்மா” மனம் வாட, கண்ணீர் விட்டழுதாள் சர்மி.

“உம்மாவா? பிலாலா” என்ற நிலையில் சர்மியிருக்க, விடயம் கேள்விப் பட்ட சர்மியின் தந்தை ரிகான், கோவம் கொதித்தெழ வீடு வந்து கொண்டிருந்தார்.

கதை தொடரும்…
Aathifa Ashraf

“சர்மி சர்மி எழும்புங்களே!” கத்திக்கொண்டே கட்டிலைப் பார்த்தவள் நடுங்கிப் போனாள். “ச… சர்மி… சர்.. சர்..மீ..” சுற்றும் முற்றும் மகளைத் தேட எங்கும் தன் பிள்ளையைக் காணாத ராபியாவுக்கும் உலகமே இருண்டது போல் இருந்தது.…

“சர்மி சர்மி எழும்புங்களே!” கத்திக்கொண்டே கட்டிலைப் பார்த்தவள் நடுங்கிப் போனாள். “ச… சர்மி… சர்.. சர்..மீ..” சுற்றும் முற்றும் மகளைத் தேட எங்கும் தன் பிள்ளையைக் காணாத ராபியாவுக்கும் உலகமே இருண்டது போல் இருந்தது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *