நித்யா… அத்தியாயம் -23

  • 81

கதவு வேகமாக தட்டப்படும் ஓசை கேட்கவே ‘யாரு இது?’ அவசரமாக கதவை திறந்தவன் பேயரைந்தது போல அப்படியே நின்றான். மெல்லமாகத் திரும்பி பவித்ராவின் முகத்தைப் பார்த்தவனின் முகம் வெளிறிப் போயிருந்தது. வெளியே நின்றவனின் முகமோ கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தது.

”டேய்…. பவித்ரா எங்க?”

அவனது வார்த்தைகள் இடியைப் போல விக்னேஷின் உள்ளத்தில் இறங்கியது. முகத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே,

”அண்ணா… நீ…”

ஏதோ பேசப்போனவனை அலட்சியமாகத் தள்ளிக் கொண்டே உள்ளே சென்றவனின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

”ஐயோ… பவித்ரா ஒனக்கு என்னாச்சி….?”

ஓடி வந்து  அவளது கைகளைப் பிடித்துக் கொண்டான். மயக்கம் கொஞ்சம் தெளிந்திருந்த அவள் அவனது கண்ணீரைக் கண்டு உளம் தடுமாறியவளாய்,

”எனக்கு ஒன்னுமில்ல…” வார்த்தைகள் மெல்லிய குரலில் வெளிவந்தது.

”ஒனக்கு ஏதாச்சும் ஆகியிருந்தா?” தலையில் கை வைத்தவனின் முகத்தைப் பார்த்து புன்னகைத்து,

”வினோத் அண்ணா… விடுங்க…. எனக்கு தா ஏதும் ஆகலயே?” அவளது முகத்தையே சற்று நேரம் நோக்கியவன்.

”மறுபடி இழக்க நா விரும்பல…” அவனது வார்த்தைக்கான அர்த்தம் புரியாமல் விழித்தவளை நோக்கி,

”வா கெளம்பலாம்…” கைகளைப் பிடித்துக் கொண்டே விக்னேஷைத் தாண்டியவன். திரும்பி விரல்களை மடக்கி சுட்டு விரலால் அவனை மிரட்டி விட்டுச் சென்றான்.

”சீ…. இவன்…” கைகளைப் பொத்தி கதவுக்கு அடித்தவன் யோசனையில் ஆழ்ந்தான்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

கதவு வேகமாக தட்டப்படும் ஓசை கேட்கவே ‘யாரு இது?’ அவசரமாக கதவை திறந்தவன் பேயரைந்தது போல அப்படியே நின்றான். மெல்லமாகத் திரும்பி பவித்ராவின் முகத்தைப் பார்த்தவனின் முகம் வெளிறிப் போயிருந்தது. வெளியே நின்றவனின் முகமோ…

கதவு வேகமாக தட்டப்படும் ஓசை கேட்கவே ‘யாரு இது?’ அவசரமாக கதவை திறந்தவன் பேயரைந்தது போல அப்படியே நின்றான். மெல்லமாகத் திரும்பி பவித்ராவின் முகத்தைப் பார்த்தவனின் முகம் வெளிறிப் போயிருந்தது. வெளியே நின்றவனின் முகமோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *