மரணம் பற்றிய தேடல்

  • 8

யாதுமாக இல்லாமல் இருந்த பிறவியின்
தேகத்தில் உயிரொன்று ஒன்றிவிட
உயிரினமாய் அலைகிறதே மானிடம் வையகத்தில்
நிச்சயமாய் சுவைக்குமே மரணத்தின் சுவையை…

மானிட உடல் ஓருயிரின் சொந்தமா
பல்லுயிர்க் கலவைகளின் கூட்டுத் தொகுப்பா
தெளிவு வேண்டி நிற்கும் வினாக்கள்
தெரியாமலேயே மரணிக்கும் இவ்வுலக பிரதிநிதிகள்…

புலனுக்குப் புரியாத நிகழ்வுகள் பல
புலனிலும் அகப்படாத செய்கைகள் பல
புலனும் இறக்கும் உயிர் வாழ்கையில்
பார்வையற்ற கேட்கும் திறனில்லா ஊமைகள் உதாரணங்கள்…

விழிகளின் பார்வை வீச்சில் புலனாகா
விண்வெளிப் பொருள் கண்களின் இயலாமை
விருப்பு வெறுப்பு அறியா மனநிலை
அறியும் திறன் கொண்டவரோ மானிடர்…

பிறப்பும் இறப்பும் நம்முள்ளே நிதமும்
அறியோம் உதித்து மறையும் நிகழ்வுகளை
அனுபவிப்போம் மரணம் வந்து தீண்டுகையில்
இழந்திருப்போம் விளக்கும் திறனை அக்கணத்தில்…

மரணம் பற்றிய தேடல்
மரணிக்கும் வரை தொடரும்
மரணிப்பவரே அறிவார் அதன் உண்மைநிலை
மற்றோர் கருத்து எதிரில் உலாவும் ஆன்மாக்களே…

அப்துல் ரஷாக் ஏ காதர்

யாதுமாக இல்லாமல் இருந்த பிறவியின் தேகத்தில் உயிரொன்று ஒன்றிவிட உயிரினமாய் அலைகிறதே மானிடம் வையகத்தில் நிச்சயமாய் சுவைக்குமே மரணத்தின் சுவையை… மானிட உடல் ஓருயிரின் சொந்தமா பல்லுயிர்க் கலவைகளின் கூட்டுத் தொகுப்பா தெளிவு வேண்டி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *